காதல்
மனமே, காத்திருந்திடு...
கனவை
கண்ணீரால், மறைத்து கரைத்திடு.
அவளுக்கென
வலிகள் தாங்குவேன்,
அவளுக்கென
வானம் ஏகுவேன்,
அவளுக்கென
கானம் பாடுவேன்,
அவளுக்கென
, அவளுக்கென...
அவளுக்கென
என்னுடல் செதுக்குவேன்,
அவளுக்கென
என்மொழி பழகுவேன்,
அவளுக்கென
மென்புகழ் எய்துவேன்,
அவளுக்கென
அவளுக்கென ......
அவள்
என் விரல் நுனி பிடித்திருந்தால்,
அடிக்கடி
அகிலமும் வலம் வருவேன்,
அவள்
என் அருகில் சிரித்திரிந்தால்,
அவளுக்கென
அவளுக்கென......
காதல்
மனமே நீ, காத்திருந்திடு,
கனவை
கண்ணீரால், மறைத்து கரைத்திடு,
அவளுக்கென தினம் நான் கனவெடுப்பேன்,
அவளுக்கென அனுதினம் கவி தொடுப்பேன்,
அவளுக்கென எனதுயிர் நான் விடுப்பேன்...
அவளுக்கென... அவளுக்கென...
Inspired
by Anirudh’s Kadhal dhiname