Monday, March 8, 2021

அவள்.

 


அவள்.... 


ஆணின் பார்வையில்,


அனைத்தும் தந்தவள், அமுதினை அளித்தவள்,

கண்ணென காத்தவள், கருணையே வார்த்தவள்,

பிழை நான் செயினும், குறைவிலாது வளர்த்தவள்,

அனைத்துமாய் இருந்தவள், அன்னை, என்னவள் அவள்.


அவள்... 

அழகிய சிரிப்புடன், ஆருயிர் ஈர்த்தவள்

பழகிய உணர்விலே, பலம் பல தந்தவள்,

என்னுள் எல்லாமாய், என்னை கண்டவள்,

கண்ணின் காதலி, என்னவள் அவள். 


அவள். 

கடிமணம் முடிந்து, கைபிடித்த செல்வம்,

அன்னையின் தன்மையில், அடுத்தவந்த தெய்வம்,

என் கோபமும், வேகமும், நீர்க்கவைத்த வீரம்,

மனைநலம் மனைவி, என்னவள் அவள்.


அவள்...

குழவியாய் மார்பினில் தவழ்ந்தவள் அவள்,

குழந்தையாய் எனையும் மாற்றினாள் அவள்,

மனநிலை, மாண்பினை உயர்வித்தால் அவள்,

மகள் அவள், என் மனம் அவள், என்னவள் அவள். 


அவள். 

பேணுதல் பெண்மை, ஆளுதல் ஆண்மை,

புரிதல் தவறன, புரிவித்த பாவை, 

பெண்மையின், வீரமும், கலையும், வாழ்வியல் நெறியும்,

உண்மையில் உணர்த்திய தோழி, என்னவள் அவள்.