என்னையும் ஒரு இணைய எலக்கியவாதியா நினைச்சு தொடர் விளையாட்டுக்கெல்லாம் அன்போட கூப்ட விக்கி அண்ணாச்சிக்கு (விக்கி... நான் அப்படியெல்லாம் நினைக்கலன்னு பின்னூட்டத்துல போடாதீங்க) நன்றி....
1)முதன் முதலில் எப்போது பத்திரிக்கையை(நாளிகை) படிக்க தொடங்கினீர்கள்?
நினைவில் இருப்பது, அம்புலிமாமா, கோகுலம் மற்றும் Twinkle தான்... ஆரம்ப பள்ளி காலங்களில் இருந்தே (4 அல்லது 5ஆவது வகுப்பு முதல்) சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவநேய பாவாணர் நூலகத்தில் விடுமுறை நாட்கள் செலவிடப்படும். அங்கு சில ஆண்டுகள் சிறுவர் நூலகத்திலும், பல ஆண்டுகள் சிறுகதை, நாவல், நவீனம் பகுதியிலும் முழு நாளையும் செலவாக்கும் கட்டாயத்திற்கு உட்பட்டேன் ;)) ... என்னுடைய தந்தையார் அதே கட்டிடத்தில் மேல் தளத்தில் உள்ள அலுவலகத்தில் பணியாற்றிய ஒன்றுதான் காரணம்... பின்னாளில் அதே அலுவலகத்தின் பின்னால் இருக்கும் British Council Library கொஞ்சம் படிக்க வைத்தது
ஆனால் இன்றைக்கும் கூட, நக்கீரன் அல்லது குமுதம் படிப்பதை விட கோகுலம் படித்தால் நலன் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து...
2)அறிமுகமான முதல் புத்தகம்
திருக்குறளும், திருவாசகமும், வீட்டில் கட்டாய பாடமாக்கப்பட்டது... அவைதான், குறிப்பாக திருக்குறள்தான் முதல் அறிமுகம் என நினைக்கிறேன்….. அதை தவிர்த்து முதலில் புரிந்து, உணர்ந்து அனுபவித்த புத்தகமாக நினைவில் இருப்பது, “புலவர் மகன்”, பூவண்ணன் எழுதியது என நினைக்கிறேன்.. அதே போல அறிவியல் புனைவு கதைகளாக மிட்டாய் பாப்பா.... முதல் துவங்கி முல்லா கதைகள், பீர்பால், புத்த ஜாதக கதைகள், மரியாதை இராமன், சிறுவர் கதைகள் என ரொம்ப காலத்துக்கு ச்ச்சின்ன புள்ள தனமாவே என்னுடைய புத்தக ஆர்வம் இருந்தது (கல்லூரி காலத்தில் கூட கோகுலம் படிப்பேன் ... ;))
நியூ சென்சுரி புக் ஹவுஸ் என சாலையெங்கும் புத்தக கடைகளை பார்த்த காலமும் உண்டு... ருஷ்ய மொழியாக்கள் நிறைய படிக்கும் வாய்ப்புக்கள் கிடைத்தது... தி மாபின் சிபிரியாக் தன் மகளுக்கு சொன்ன கதைகள் என்னும் சிறுகதை தொகுப்பு இன்னும் மனதில் உள்ளது...
கோகுலம், அம்புலிமாமா, சிறுவர் மலர், Twinkle, கல்கண்டு, மஞ்சரி, கல்கி, குமுதம், விகடன், ஜூ.வி. வார மலர், வள்ளுவர் வழி, முகம், சித்தாந்தம், இராம கிருஷ்ண விஜயம், Divine Life, இந்தியா டுடே, competition success review, Sputnik, Readers digest, National geographic collection, என வேறுபாடே இல்லாமல் அனைத்தையும் ஆர்வத்துடன் நுனிப்புல் மேய்வேன்...
கொஞ்சமாக தமிழ் இலக்கியங்கள் (சிலப்பதிகாரமும், மணிமேகலையும், திருமுருகாற்றுப்படையும், கம்பராமாயணமும் ஸ்பெஷல்)... மற்றும் மு.வ எழுதிய புத்தகங்கள், விவேகானந்தரின் தொகுப்பாகிய ஞான தீபம், கண்ணதாசன் அவர்களின் புத்தகங்கள், என நிறைய மேய்ந்திருக்கிறேன்... வீட்டில் அன்னை நூலகம் என என்னுடைய தந்தையார் ஒரு மினி-புத்தக நிலையத்தை வைத்து, படிப்பதை ஊக்கப்படுத்தியதாலேயே... இத்தனை அறிமுகங்களும் கிடைத்தது...
3)பள்ளியில் கதை படித்து மாட்டிய அனுபவம்?
பள்ளியில் தமிழ் பாடங்களை உரக்க படிக்கும் வேலை அவ்வப்போது எனக்கு அளிக்கப்படும்... புத்தகத்தை தலைகீழாக வைத்து படிப்போம். (ஃபிலிம் காட்டுறதுதான்...) தமிழ் ஆசிரியர் புன்னகைப்பார்.. ஆனால் திட்டியதில்லை.... பி.கு கல்லூரியில் வகுப்பில் தூங்கி மாட்டியதும், எம்.பி.ஏ Operations Research வகுப்பில் டிக் டேக் டோ விலையாடி மாட்டியதும் என்னுடைய சரித்திரத்தில் சாகச கோடுகள்.. ;)
ரொம்ப்பப்பப பயந்த சுபாவம்ங்கோ...
4)நாவல்கள் படிக்கும் பழக்கம் உண்டா?
படிக்கும் பழக்கம் இருந்தது... க.பி படிப்பெல்லாம் மூட்டை கட்டி வெச்சாச்சு...
பி.கு... எங்க வீட்டு தங்கமணி என்னோட ப்ளாக் எல்லாம் படிக்க மாட்டாங்க ;))
3 years ago
8 comments:
நினைவில் இருப்பது, அம்புலிமாமா, கோகுலம் மற்றும்
சரீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஇ
நக்கீரன் அல்லது குமுதம் படிப்பதை விட கோகுலம் படித்தால் நலன் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து...
ஒட்டுமொத்த கருத்தும் அதுதாங்கோ
பி.கு... எங்க வீட்டு தங்கமணி என்னோட ப்ளாக் எல்லாம் படிக்க மாட்டாங்க ;))
கொடுத்து வைச்சவர்..........
வருகைக்கு நன்றி, சுரேஷ்... :)
roomba gap vittinga??? yethavathu pathivu poodunga :)
:-o)
மதிப்பிற்குரிய நண்பர் அவர்களுக்கு,
உங்களுடைய பதிவு கண்டேன். கீழ்க்கண்ட வாக்கியம் என்னை மிகவும் கவர்ந்தது.
"தி மாபின் சிபிரியாக் தன் மகளுக்கு சொன்ன கதைகள் என்னும் சிறுகதை தொகுப்பு இன்னும் மனதில் உள்ளது"
ஏனெனில் எனக்கும் அந்த சிறுகதை தொகுப்பு இன்னும் மனதில் உள்ளது.. சிறு வயதில் நான் மிகவும் ரசித்த கதை தொகுப்பு அது. என் போன்ற கருத்துடைய உங்களை அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி.
என்னுடைய மகளுக்கு அந்த புத்தகத்தை பரிசளிக்க தேடிக்கொண்டிருக்கும் போது தான் உங்கள் பதிவை கண்டேன். உங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.
என்றென்றும் அன்புடன்,
சங்கர் சாமியப்பன்
Post a Comment