Friday, May 7, 2021

திருமண நாள் நல்வாழ்த்துகள்.

 சார், ஒரு கதை சொல்லட்டுமா சார்.....


பல பல வருடமாய் வேவ்வேறு துருவங்கள்,

மனம், அறிவு, கொள்கை, வாழ்வியல் தத்துவம்,

அத்தனையும் வெவ்வேறாய் கரம் பிடித்த காதலர்கள்,

மொத்தமும் ஒன்றாய் மாறி, ஒருவராய் இன்று...


எண்ணமெலாம் வாழ்வாய் ஒருவர்,

இன்று மட்டும் இயல்பென்றார் ஒருவர்,

இயற்கை என்றும், இறைமை என்றொருவர்,

இயன்ற முயற்சி உழைப்பே என்றொருவர்,



தான் கண்ட தத்துவமே தெய்வமென்றொருவர்,

தெய்வமெலாம் நம்மவர் என்றொருவர்,

சிந்தையும் சீர்வினையுமாய் ஒருவர்,

செல்வழி செல்வோம், சீராய் என்றொருவர்,



காலம், 

எரிந்திருந்த தீயை, கல்லாய், மண்ணாய் மாற்றி,

நீரால் கணிவித்து, மெலிதாய், மிக அழகாய், 

பரலாய், மணலாய், மண்ணாய் மாற்றி, 

உயிர் ஏந்த வைத்திடும், உரமாய் மாற்றிடும்.



மானுடம், 

விந்தை சிந்தை உந்த உந்த

வினை பல ஆற்றி, வியப்புற வைக்கும்,

களைப்பினை தாண்டி, களிப்பினை தேடும்,

நன்றே நாடும், நலமே பயக்கும்,



இல்லறம் எனும் நல்லறம், 

காலத்தின் கணிதம் கச்சிதமாய் 

மானுடவியலை மாண்புற செய்யும்,

எல்லாம் ஒன்றாகும் மாயம் செய்யும்.


உயர்வென்றும் தாழ்வென்றும் இல்லை,

உணர்ந்தபின் உணர்வுக்கு வேற்றுமை இல்லை,

நீயென்றும் நானென்றும் இல்லை, உம்

நீண்ட மணவாழ்வில் அன்பினால் எல்லையே இல்லை.



சிவ வசந்தி அரியரன் வாழ்க.

நூறாண்டு நீர், ஒரு குறையும் இன்றி,

சிரித்தே மகிழ்ந்திருந்து, 

சிந்தை சிவமாய் வாழி



அன்னைக்கும், அன்பின் தந்தைக்கும், திருமண நாள் நல்வாழ்த்துகள்.



No comments: