Saturday, September 18, 2021

வாடா தோழா கூத்தடிப்போம்

 கற்றல் புரியாது கல்வி தந்த வேதனை,

முற்றும் முடியாது என்  வேலை தந்த சோதனை,

செயல் முடிக்க எனது வலிவிங்கே குறையில்லை,

என்னை நெறியமைக்க இங்கே ஒரு வழியில்லை.

 

பணமிங்கு முடிவில்லை, அதை தேட மட்டும் வாழ்வில்லை,

வாரம் முழுதும் ஓட்டம், வங்கிகடன், வட்டி போடும் குட்டி

சென்னைக்கு அருகென செங்கல்பட்டு, அரக்கோணம்

நிலம் ஒரு வீடு, என் எதிர்காலம் க்ரெடிட் கார்டு,

 

மனம் மகிழ, யூட்யூப், இன்ஸ்டா

ஏங்கிய ஆசையின் தேக்கம் எல்லாம்,

கனவோடிய கணங்களை நிழலாக்கி,

நினைவு போதையாய் பேதையாய் ....

 

தொலைகாட்சியும், திரையும்,

இணைந்தே இருக்கும் என் கைபேசியும்,

காதலும், காமமும், வீரமும், வஞ்சமும்,

எவனோ கண்டவாறு, எனக்கு கற்பிக்கும்,

 

நிற்க... எங்கே போகிறேன்... எவர் இவர்கள்? எதிர்காலம் என்ன?

என பல கேள்வி எனை சூழ...

 ............................


 

சிரித்திடுவோம், மனம் களித்திடுவோம்,

வாடா தோழா கூத்தடிப்போம்,

 

நடமிடிவோம், பல தடமமைப்போம்,

வாடா தோழா சிறகடிப்போம்.

 

உலக பொருளாதாரம், வாழ்வாதாரம் என

 ஒரு வேலை ஒருபுறம் இருக்கட்டும்,

 

இரசிகனாய் மட்டும் இருந்த நான் இனி

இறைவானாய் மாற கடவட்டும்,

மொழி விழியால், கலையின் வழியாய்,

இசையின் அசைவில் இன்பம் காண

 

ஒருவன் ஆட்டம் உள மகிழ்ச்சி,

இருவர் ஆட்டம் அன்பின் காதல்,

கூட்டம் ஆட்டம் கொண்டாட்டம்,

நம் கூட்டம் ஆட்டம் கொண்டாட்டம்.

 

பைந்தமிழ் தந்த வார்த்தைகள் இருக்கு,

பரம்பரை தாண்டிய கலைகளும் இருக்கு,

பறையும் அடவும், பல பல நடனமும்,

பாங்குற பயின்றிட பல கலை இருக்கு,

 

 சிரித்திடுவோம், மனம் களித்திடுவோம்,

வாடா தோழா கூத்தடிப்போம்,

No comments: