மதிப்பிற்குரிய தமிழா!
தமிழினத்தில் பிறந்த தவறாலேயே
தவறாமல் நீ ஏசப்படுகிறாய்,
இங்கு மட்டுமே, ஜாதி எதிர்ப்பாளர்கள்,
ஜாதியை பேசி பழிதீர்ப்பார்கள்,
நீ எந்த குலத்தை சேர்ந்தவனானாலும்
ஏசப்படுவது உறுதி
இங்கு மட்டுமே, ஐ. டி துறையா அறிவிலி என
செய்யும் தொழிலால் கூட வேற்றுமை பார்ப்பார்கள்
நீ எந்த தொழில் செய்துவந்தாலும்,
இகழப்படுவது உறுதி
அறிவியல் ஆகினும், ஆன்மீகம் ஆயினும்,
புரிதல் இன்றியே பிதற்றி பழிப்பார்கள்,
நீ ஆன்மீகத்தில் இருந்தாலும், அன்பு நிலையில் இருந்தாலும்,
மனிதபண்புகளை மட்டும் மதிக்க கற்றிருந்தாலும்
பழிக்க ஒரு கூட்டம் வழி மீது காத்திருக்கும்
சமூகத்தில் சிரித்து பழகுவாயா? சிந்தனையில் உணர்ந்திடுவாயா?
பொறுப்பற்றவன் என்றோ, பைத்தியம் என்றோ,
சந்தி முனையில் ஒரு கூட்டம் கட்டாயம் கருத்துரைக்கும்
ஆண் பெண்ணிடமோ, பெண் ஒருத்தி ஆணிடமோ,
அதை தவிற வேறோன்றும் செய்ய முடியாது,
என அறுதியிட்டு அறிந்து வைத்துள்ள ஒரு சமூகம்.
திரையில் காதல் என்றால், திகட்ட விசிலடித்து,
நண்பன் நட்பை கூட கொச்சையாய் பேசிடும்.
இங்கு சமூக வாழ்க்கை என்பது,
அடுத்தவர் பற்றிய கருத்துக்கள்,
தனி நபர் கருத்து சுதந்திரம் என்பது,
நாகாரீகம் தாண்டிய உரிமை
ஊடகங்கள் ஒவ்வொன்றிலும்,
உதவாத தகவல்கள்,
இன்னும் நிறைய...
எனக்கும் குறை காண்பது எளிதாகவே உள்ளது
எல்லா சமூகத்திலும் நன்றும் தீமையும்,
எப்போதும் கலந்திருக்கும் இது நீதி என்றாலும்,
ஈழத்தில் படுகொலையா... முதுகெலும்பில்லாத தமிழா
சட்ட கல்லூரி தாக்குதலா.... அறிவில்லாத தமிழா...
மின்சார வெட்டா... மூளையில்லாத தமிழா..
அடுத்த ஆட்சிக்கு யார் வந்தாலும்,... ஆண்மையில்லாத தமிழா
வசவுகளை கேட்பது வாடிக்கையாகிவிட்டது.
இதற்கான தீர்வு என்னிடம் இல்லை...
ஆனால் நம்பிக்கை உள்ளது,
பத்து பதினைந்து ஆண்டுகள் கழித்து,
இது பழகிபோய்விடும் என்று...
3 years ago
6 comments:
nanraaka irukkiradhu
கடைசி பத்தி சூப்பர்:):):)
நன்றி டி.வி. ஆர்... நன்றி ராப் :)
//பத்து பதினைந்து ஆண்டுகள் கழித்து,
இது பழகிபோய்விடும் என்று...//
இது தவறான ஒன்று... நமது சமூகத்திற்கு எதிர்காலத்தில் ஈதே பிரச்சனைகளை நீரூட்டி வளர்ப்பதற்கு இது சமம்...
ஹாய் விக்கி... கருத்தளவில் உடன்படுகிறேன்... ஆனால், செயல்முறை அளவில் என்ன செய்ய முடியும் என்று தெரியவில்லை.... பெருமூச்சு விடுவதை தவிர....
காலம் வலுவானது... மாற்றங்களை மாறாமல் கொண்டது என்ற நம்பிக்கையும் ஊடே இருந்தாலும், கடந்த பல நூற்றாண்டுகளாக கலாச்சாரம், பண்பாடு என பேசி இறுமாப்படையும் நம் மக்கள், இன்னமும் பல சின்னஞ்சிறு கதைகள் பேசி, பிறர் வாட செயல்கள் பல புரிவதிலேயே மகிழ்வெய்துகிறார்கள் என்னும் உண்மைதான் கடைசி வரிகளின் கையாலாகாத சொற்களாக வெளிவந்தது என நினைக்கிறேன்...
நியாயமான உள்ளக்குமுறல்
Post a Comment