Monday, January 12, 2009

பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்..

வீட்டிலே துக்கம் நடந்தால்

விழா எடுக்கக்கூடாதென

விதிமுறை இருப்பதாலே

அடுத்த மாதம் வரை இருந்திருக்கலாம்

அன்பு கலந்த வார்த்தைகள்...

 

எந்த ஆண்டு நன்றாய் இருந்தது

எங்கேனும் யாரானும் மரித்துக்கொண்டே இருப்பார்கள்

பண்டிகையின் அன்று கூட பக்கத்து தெருவிலே

பட்டாசு இல்லை என பல குழந்தை அழுவார்கள்...

 

இலங்கை என்றில்லை...

அறிமுகம் இல்லா ஆப்ரிக்க நாடுகளில்,

ஆண்டுகள் தோறும், அடுத்தடுத்த காரணிகள்

ஆயிரமாயிரம் ஆட்கள் மரணம்,

ஆப்ரிக்காவில் இருப்பவன் தொப்புள் கொடி உறவில்லையா?

அவரெல்லாம் மனிதர் இல்லையா?

 

இங்கு விழாக்கள் எடுக்க காரணங்கள் இருந்தன

ஊக்கமளிக்க, உறவு நிலைக்க,

உணர்வு பகிர்ந்து, உரமளிக்க

இங்கு விழாக்கள் எடுக்க காரணங்கள் இருந்தன,

 

வெறும் களிப்பும் கூத்தாட்டமும் என்றால்,

விழாக்கள் தேவையில்லை,

விலை விடுதிகள் போதும்,

 

வருத்தம் தவிர்க்க மருந்தொன்று உண்டா,

வருத்தம் தவிர்க்கும் செயல்தான் மருந்து!

இயன்றன செய்வோம்...

 

அவதியில் தெருவிலே வாழும்

தொப்புள் கொடி உறவிற்கு,

அரை வயிறு உணவாயினும்,

அன்புடன் தருவோம்...

 

அன்பு பொங்கிட, புன்னகை பரவிட

பொங்கல் கொண்டாடுவோம்...

வளம் சிறக்க வாழ்த்துக்கள்...


4 comments:

பழமைபேசி said...

//அரை ப்ளேட் பிரியாணி,//

அருமையாய் தமிழ்நதி
அன்னநடை நடந்துவர‌
அந்த ஒருகணம்
அடிசறுக்கியது ஏனோ?

பழமைபேசி said...

//அரை ப்ளேட் பிரியாணி,//

அரைத்தட்டு அவிச்சசோறுன்னு மாத்துங்க... இல்லாங்காட்டி, ஒபாமாவோட சகோதரிகிட்ட சொல்லி முறையிடுவோம்!

Natty said...

நல்ல கருத்து.. . மாத்திட்டேன்...

Natty said...

// ஒபாமாவோட சகோதரிகிட்ட சொல்லி முறையிடுவோம்! //

மச்சான்ஸ்... ஓபாமா சிஸ்டர் சிங்கிளா? அடுத்த முறை ஹவாய் வரும் போது அட்ரஸ் கொடுத்து அனுப்பவும் ;)