Friday, January 16, 2009

விழித்திருத்தலின் வலி..

முன் நிகழ்ந்த நினைவுகளால்

நிறைவாய் ஒரு கனவு,

நித்தம் ஒரு நிலவு வேண்டுமென

சித்தம் விழைந்தது

 

மொத்தமும் அழகாய்,

விளிம்பில்லா வியப்பாய்

முத்து நகை சிரிப்பாய்,

நித்தமும் முழு நிலவாய்

 

வட்ட வடிவத்தில்,

வானில் ஒளி பாய்ச்சி

முட்டி வரும் மேகங்களில்,

முகம் மறைத்து உணர்வளித்தும்

 

மௌனத்திலேயே பேசுகிறேன்..

மொழியின் குறையெல்லாம்

உன்னாலும், அவளாலும்,

அடிக்கடி புரிந்திடும்.

 

துயில் கலைந்து, கண் விழித்து,

சாளரத்தின் வழியே

தலை சாய்த்து பார்க்கின்றேன்,

கனவில் மகிழ்வித்த  கவின் நிலவு அங்கில்லை

 

விழித்திருத்தலின் வலி..

விழிகளை வலிந்து மூடி

கரிய இருள் வரவழைத்து,

கனவினை தேடி பிழைக்கிறேன்...

6 comments:

பழமைபேசி said...

அம்சமாத் தவழ்ந்து வருது வரிகள்... சபாசு!

ச்சும்மா ரெண்டு சீசாவ உள்ள அனுப்புங்க.... விழிச்சிருந்து தேகம் பழுதுபடப் போவுது? சுவர் இருந்தாத்தான் சித்திரம்...???

கப்பி | Kappi said...

white fontla postaa..google readerla onum theriya maatenguthu thala..maathunga pls :)

எம்.எம்.அப்துல்லா said...

அட :)

Natty said...

கப்பி, மாத்திட்டேன்... இப்ப எங்க இருக்கீங்க.. டலாஸ், சென்னையா?

Anonymous said...

நல்ல கவிதைங்க சாமியோவ்..மொத தபா படிக்கொ சொல்லோ நல்லாந்ச்சுங்கோ...ரெண்டாந்தபா படிக்கொ சொல்லோ நெலாவே வ்ந்துட்சுங்கோ

Divya said...

\\மௌனத்திலேயே பேசுகிறேன்.. மொழியின் குறையெல்லாம் உன்னாலும், அவளாலும், அடிக்கடி புரிந்திடும்.\\

இந்த வரிகள் ரொம்ப நல்லா இருக்கு:)