Saturday, September 18, 2021

வாடா தோழா கூத்தடிப்போம்

 கற்றல் புரியாது கல்வி தந்த வேதனை,

முற்றும் முடியாது என்  வேலை தந்த சோதனை,

செயல் முடிக்க எனது வலிவிங்கே குறையில்லை,

என்னை நெறியமைக்க இங்கே ஒரு வழியில்லை.

 

பணமிங்கு முடிவில்லை, அதை தேட மட்டும் வாழ்வில்லை,

வாரம் முழுதும் ஓட்டம், வங்கிகடன், வட்டி போடும் குட்டி

சென்னைக்கு அருகென செங்கல்பட்டு, அரக்கோணம்

நிலம் ஒரு வீடு, என் எதிர்காலம் க்ரெடிட் கார்டு,

 

மனம் மகிழ, யூட்யூப், இன்ஸ்டா

ஏங்கிய ஆசையின் தேக்கம் எல்லாம்,

கனவோடிய கணங்களை நிழலாக்கி,

நினைவு போதையாய் பேதையாய் ....

 

தொலைகாட்சியும், திரையும்,

இணைந்தே இருக்கும் என் கைபேசியும்,

காதலும், காமமும், வீரமும், வஞ்சமும்,

எவனோ கண்டவாறு, எனக்கு கற்பிக்கும்,

 

நிற்க... எங்கே போகிறேன்... எவர் இவர்கள்? எதிர்காலம் என்ன?

என பல கேள்வி எனை சூழ...

 ............................


 

சிரித்திடுவோம், மனம் களித்திடுவோம்,

வாடா தோழா கூத்தடிப்போம்,

 

நடமிடிவோம், பல தடமமைப்போம்,

வாடா தோழா சிறகடிப்போம்.

 

உலக பொருளாதாரம், வாழ்வாதாரம் என

 ஒரு வேலை ஒருபுறம் இருக்கட்டும்,

 

இரசிகனாய் மட்டும் இருந்த நான் இனி

இறைவானாய் மாற கடவட்டும்,

மொழி விழியால், கலையின் வழியாய்,

இசையின் அசைவில் இன்பம் காண

 

ஒருவன் ஆட்டம் உள மகிழ்ச்சி,

இருவர் ஆட்டம் அன்பின் காதல்,

கூட்டம் ஆட்டம் கொண்டாட்டம்,

நம் கூட்டம் ஆட்டம் கொண்டாட்டம்.

 

பைந்தமிழ் தந்த வார்த்தைகள் இருக்கு,

பரம்பரை தாண்டிய கலைகளும் இருக்கு,

பறையும் அடவும், பல பல நடனமும்,

பாங்குற பயின்றிட பல கலை இருக்கு,

 

 சிரித்திடுவோம், மனம் களித்திடுவோம்,

வாடா தோழா கூத்தடிப்போம்,

Sunday, August 29, 2021

பறை மொழி - அடிப்படை பாடம் - சொற்கட்டு வரிசை

மண்ணுக்கு வணக்கம்,

 

கருவிக்கு வணக்கம்,

 

கலைஞருக்கு வணக்கம்.

 

  

1)    தாய் தந்தை குரு பறை

(தி -         -            தி            - )

 

2)    த கூ கு    தா

( தி       தி )

 

3)    த கூ க     த கு தீம்

( தி தி          தி தி )

 

4)    தீம் தீம்     தகுகு தகு

(திம் திம்    ததிதி ததி)

 

5)    தகதகதிம் தகதகதிம்             தகதக தகதக தகதகதிம்

(திததிததிம் திததிததிம்                     திததித திததித   திததிததிம்)

 

6)    திம் தக்கு           தாதக்கு

(திம் ததி                        தி )

 

தா தக்கு தகு தினதின

(தததி          ததி திததித)

 

7)    தீம் தின குகுதா தினதின

(திம் தி த   திதித       தித தித)

 

8)    தகுகூ தகுகு

(ததிதி ததிதி)

 

9)    திம்குதகு               திதின்திம்

(திம் தித்தி               ததிதிம்)

 

சா சா சா சா

(த    த    த     த)

 

10)  திம்குகூ  தகு

(திம் திதி த்தி)

 

11)  திதிம் தகுகூ        தகுகூ தகு

                   (திம் திம் ததிதி          ததிதி ததி)

Friday, May 7, 2021

திருமண நாள் நல்வாழ்த்துகள்.

 சார், ஒரு கதை சொல்லட்டுமா சார்.....


பல பல வருடமாய் வேவ்வேறு துருவங்கள்,

மனம், அறிவு, கொள்கை, வாழ்வியல் தத்துவம்,

அத்தனையும் வெவ்வேறாய் கரம் பிடித்த காதலர்கள்,

மொத்தமும் ஒன்றாய் மாறி, ஒருவராய் இன்று...


எண்ணமெலாம் வாழ்வாய் ஒருவர்,

இன்று மட்டும் இயல்பென்றார் ஒருவர்,

இயற்கை என்றும், இறைமை என்றொருவர்,

இயன்ற முயற்சி உழைப்பே என்றொருவர்,



தான் கண்ட தத்துவமே தெய்வமென்றொருவர்,

தெய்வமெலாம் நம்மவர் என்றொருவர்,

சிந்தையும் சீர்வினையுமாய் ஒருவர்,

செல்வழி செல்வோம், சீராய் என்றொருவர்,



காலம், 

எரிந்திருந்த தீயை, கல்லாய், மண்ணாய் மாற்றி,

நீரால் கணிவித்து, மெலிதாய், மிக அழகாய், 

பரலாய், மணலாய், மண்ணாய் மாற்றி, 

உயிர் ஏந்த வைத்திடும், உரமாய் மாற்றிடும்.



மானுடம், 

விந்தை சிந்தை உந்த உந்த

வினை பல ஆற்றி, வியப்புற வைக்கும்,

களைப்பினை தாண்டி, களிப்பினை தேடும்,

நன்றே நாடும், நலமே பயக்கும்,



இல்லறம் எனும் நல்லறம், 

காலத்தின் கணிதம் கச்சிதமாய் 

மானுடவியலை மாண்புற செய்யும்,

எல்லாம் ஒன்றாகும் மாயம் செய்யும்.


உயர்வென்றும் தாழ்வென்றும் இல்லை,

உணர்ந்தபின் உணர்வுக்கு வேற்றுமை இல்லை,

நீயென்றும் நானென்றும் இல்லை, உம்

நீண்ட மணவாழ்வில் அன்பினால் எல்லையே இல்லை.



சிவ வசந்தி அரியரன் வாழ்க.

நூறாண்டு நீர், ஒரு குறையும் இன்றி,

சிரித்தே மகிழ்ந்திருந்து, 

சிந்தை சிவமாய் வாழி



அன்னைக்கும், அன்பின் தந்தைக்கும், திருமண நாள் நல்வாழ்த்துகள்.



Monday, March 8, 2021

அவள்.

 


அவள்.... 


ஆணின் பார்வையில்,


அனைத்தும் தந்தவள், அமுதினை அளித்தவள்,

கண்ணென காத்தவள், கருணையே வார்த்தவள்,

பிழை நான் செயினும், குறைவிலாது வளர்த்தவள்,

அனைத்துமாய் இருந்தவள், அன்னை, என்னவள் அவள்.


அவள்... 

அழகிய சிரிப்புடன், ஆருயிர் ஈர்த்தவள்

பழகிய உணர்விலே, பலம் பல தந்தவள்,

என்னுள் எல்லாமாய், என்னை கண்டவள்,

கண்ணின் காதலி, என்னவள் அவள். 


அவள். 

கடிமணம் முடிந்து, கைபிடித்த செல்வம்,

அன்னையின் தன்மையில், அடுத்தவந்த தெய்வம்,

என் கோபமும், வேகமும், நீர்க்கவைத்த வீரம்,

மனைநலம் மனைவி, என்னவள் அவள்.


அவள்...

குழவியாய் மார்பினில் தவழ்ந்தவள் அவள்,

குழந்தையாய் எனையும் மாற்றினாள் அவள்,

மனநிலை, மாண்பினை உயர்வித்தால் அவள்,

மகள் அவள், என் மனம் அவள், என்னவள் அவள். 


அவள். 

பேணுதல் பெண்மை, ஆளுதல் ஆண்மை,

புரிதல் தவறன, புரிவித்த பாவை, 

பெண்மையின், வீரமும், கலையும், வாழ்வியல் நெறியும்,

உண்மையில் உணர்த்திய தோழி, என்னவள் அவள்.