Wednesday, September 10, 2008

ஒவ்வொரு விநாடியும்

எதற்கென புரியாமல்,
ஏனென்ற தெளிவில்லாமல்,
ஏதோ ஒன்றை நோக்கி,
எழுகின்றேன்... விழுகின்றேன்...

வீட்டுக்கடன், வரவு செலவு,
வருமான வரி, வராத கடன்,
காசோலை, போன வழி வந்ததால்,
தேவையில்லாமல் அழிந்த ரூபாய் ஆயிரம்.
வணிக சந்தை எப்போது உயரும்,
விட்ட பணத்தை எடுக்க வேண்டும்.
நான் முதலீடு செய்யும் போது மட்டும்,
ஏன் பொருளாதாரம் நடுங்க வேண்டும்?..

காலிங் கார்டு செலவு மட்டும் மாதம் 40 டாலரா?
காபி குடித்த செலவு மட்டும் 50 டாலரா?
வால்மார்ட்டில் வாங்கலாமா? சாம்ஸில் வாங்கலாமா?
44 களில் பணம் இருக்குமா? இன்னும் உயருமா?

எதிர்பார்த்த லாபம் இல்லாததால்
சம்பள உயர்வு குறைவாகத்தான் இருக்குமாம்....
என்னுடைய உழைப்பிற்கு மணி நேரத்திற்கு 70 டாலர் வாங்கி கொண்டுதானே இருக்கிறார்கள்!

சென்னைக்கு செல்ல வேண்டும்..
இட்லி சாம்பார் சாப்பிட்டு எத்தனை மாதங்கள் ஆனது,
வேக வைத்த பருப்பை பார்த்தால் ஏனோ கோபம் வருகிறது....
மாத வருமானம் பாதியாய் குறையுமே!
பரவாயில்லை... வேண்டாம்.....
பருப்பு வேண்டாமென்றால், பர்கர் இருக்கிறது....

செலவு கணக்கு பார்க்காத நான் சில நேரம்
சில்லரை கணக்கு பார்க்கும் போது....
ஒவ்வொரு விநாடியும் என்னை தொலைத்து....

4 comments:

Jags said...

Enna Idhu chinnapulathanama....:-))

Subash said...

புலம் பெயர்ந்தவர்களின் எண்ணங்களை அப்படியே பிரதிபலிக்கின்றது உங்கள் எழுத்துக்கள்
வாழ்த்துக்கள்

புதுகை.அப்துல்லா said...

7வது படிக்கும் போது எனக்கும் ஓரு சைக்கிள் வந்தது. உங்கள் பதிவை படித்தவுடன் சைக்கிளை எங்கள் பள்ளி ஸ்டாண்டில் வைத்து விட்டு 7 ஆம் வகுப்பு "ஆ" பிரிவில் போய் அமர்ந்து கொண்டேன்.

Known Stranger said...

samatiyalla adicha mathiri iruku