இருப்பது போல் இருந்தாலும்,
இல்லையோ என ஐயம் தரும்
மறுப்பது போல் முயன்றாலும்,
இருக்கிறதென ஐயம் தரும்
நினைவில் தரும் உவகை
நித்தம் நினைக்க தவிக்கும்,
வினை மாற, கவலை
பித்தம் பிடிக்க வைக்கும்.
அறிதலும், புரிதலும்,
அருகிலும் வாய்க்காமல்,
அறிவினால் சிந்தித்தால்,
அபத்தாமாய் சிரிக்கவைக்கும்...
புரியாது என்றாலும்,
புவி முழுதும் ஈர்க்கவைக்கும்,
காதலும் கடவுளும்,
கவி எழுத வைத்திடும்.
5 years ago
3 comments:
ம்ம்ம் நல்லா இருக்கு. தமிழ்மணத்திலும் வந்து இருக்கு .. கலக்குங்க..
நன்றி தல :)
appadiya ?
Post a Comment