சமயமும், கலையும் ,
இலக்கியமும், சங்க கால கதைகளும்,
அறிவியலும், புனைவுகளும்,
இயற்கையின் விதிகளையும்,
இன்னும் பலவும்,
புவியியல் விதி இது, பூளோக பொருள் இது,
என எங்கே எப்போதோ படித்து
செரிமாணம் முடியாத தகவலை,
வரிவரியாய் சொன்னாலும்,
மாறாத புன்னகையில்,
மறுப்பேதும் சொல்லாமல்,
விருப்போடு கேட்பாயே!
செறுக்கை கொல்ல
இந்த வழியை எங்கிருந்து நீ அறிந்தாய்?
8 comments:
மெளனம்?
அமைதி காப்பது??
Ignorence(அலட்சியம்)???
சுத்தல்ல வுடுறீங்களே?!
ஞானம்...
புரிந்துணர்வு...
உங்க அளவுக்கு அனுபவம் இல்லீங்கண்ணா... ஆனா நல்லா இருக்கு....
அது புரிந்துணர்வு எனத்தோண்ருகிறது.. ...
ஞானமான்னு தெரியல...
ஒரு குட்டி கதை போட்டு இருக்கேன்... படிச்சுட்டு ஒரு பின்னூட்டமும் போடுங்களேன்....
நீங்க திருப்பி எதுனா செய்றதுதானே தமிழர் பண்பாடு...
கொக்க மக்கா, இன்னும் இதுக்கு ஒரு பதில் இல்லியா????
...பாஸூ.. கேள்வி என்னன்னே புரில.. மறுக்கா சொல்லுங்க... ;)
//Natty said...
...பாஸூ.. கேள்வி என்னன்னே புரில.. மறுக்கா சொல்லுங்க... ;)
//
இது என்னவென்று உனக்கு தெரியுமா?
கேள்வியக் கேட்டுபிட்டு, நீங்களே திருப்பியுங் கேட்பீங்களோ? மாயாகிட்டச் சொல்லத்தான் கிடக்கு...
சிமெண்ட் பதிவை எதிர் பார்க்கிறேன்
Post a Comment