Tuesday, February 17, 2015

கருப்பு - பகுதி 1

வாட் தி ஃபிஷ் மேன்....  என்னதான் கஸ்டரமரா இருந்தாலும், அவர் சொன்ன வார்த்தைகள் வலித்தது.  50 பேர் இருந்த மீட்டிங், எனக்கு காது மடல் சிவந்து, ஜிவ்வென்று சூடேறினாலும், என்னுடைய டீம் செய்த வேலைக்கு அந்த பேச்சையெல்லாம் வாங்கிதான் ஆகனும். ப்ரொடக்ஷன் சேன்ஜ் முடிந்து 5 மணி நேரமாக சிஸ்டம் டமால்

இந்த சேன்ஜ் ரொம்ப முக்கியமானது. ஒரு பிசிறு கூட தவறு ஏற்பட கூடாது என டி-மைனஸ், செக்லிஸ்ட் எல்லாம் பாத்து பாத்து செஞ்சோம். என்ன மிஸ் ஆச்சுன்னு இது வரைக்கும் புரியவில்லைபுது ஃபைல்ஸ் போனதும், ஆர்டர் வரவில்லை என தெரிந்த உடன், கஸ்டமர் டைரக்டர், வி. பி எல்லாம் ரோல்பேக், ரோல்பேக் என ஆணையிட, உடனே ரோல் பேக் செய்தோம்ரோல்பேக் செய்த பின்னரும் சைட் டவுன், கூடவே சேர்த்து என்னுடைய மானம், மரியாதை, எல்லாமே

இன்னும் ஒரு மணி நேரம் அவகாசம் கேட்டோம். முதல் முறையாக முறைக்க கூட முகத்தை பார்க்காமல், வாட்எவர் என எழுந்து சென்றார் என் டைரக்டர். மடி கணினியை திறந்து கடைசி முறையாக முயற்ச்சிப்போம் என பார்த்த போது சட்டனெ மாட்டியதுகொய்யாலே, இரண்டு டேபில் ப்ரொடக்ஷன்ல காணோம்

கிணத்தை காணோம்னு வடிவேலு சொல்லும் போது அந்த இன்ஸ்பெக்டர் முழித்தது போல முழித்தேன். ஆடிட் டெரெயில் எடுத்து பாத்தா, நம்ம செல்லாக்குட்டி ஆப்பு ஷோர் .... கோபமாக போன் எடுத்து பேசும் முன்னர், நமக்கு இன்னொரு -மெயில் - ஸாரி - ப்ரொடக்ஷன் ப்ராப்ளம் பாக்க ட்ரை பண்ணும் போது, டெஸ்ட்க்கு பதிலா ப்ரொடக்ஷன்ல டேபில் டெலிட் செஞ்சிட்டோம்டி.பி. கிட்டி பேசி பேக் அப் எடுத்து போட்டுடங்கன்னு.

வெட்கம் மறைத்து டைரக்டர் அலுவலகம் சென்று, மீண்டும் ஃப் மற்றும் எஸ் வார்த்தைகளை ஏற்று மேலும் 2 மணி நேரத்திற்கு பின்னால் சிஸ்டம் வாஸ் அப் அன்ட் ரன்னிங்.

மென்பொருள் துறையில் இதெல்லாம் சாதாரணம் என என்னுடைய மேனேஜர் புன்னகைத்தார்ப்ராஜெக்ட் லீட் பெரிய அப்பாட்டக்கர் மாதிரி எல்லாத்தையும் அடுத்தவனுக்கு கொடுத்து ஓபி அடிக்கிறதை , மாடுல் லீட், சீனியர் டெவலப்பர், ஜீனியர் டெவலப்ப்பர், 2 மாதம் முன்னாடி சேர்ந்தேன் என அனைவரும் வேலையை தள்ளுவதில் திறமையை வளர்த்த அளவுக்கு, கொஞ்சமா சாப்ட்வேர் உருவாக்க திறமையை வளர்த்திருந்தா, நாம எங்கேயோ போயிருப்போம் என அவரையும் மனதில் நினைத்து பொருமினேன்.

சார், அடுத்த மாசம் கல்யாணம், 3 வாரம் லீவ் கேட்டுருந்தேன்... மேனேஜர் புன்னகைத்தார், ஒன்னும் ப்ராப்ளம் இல்லை. 2 வாரம் லீவ் எடுத்துக்க. 1 வாரம் ஆப்ஷோர் ஆபிஸ் போய் நம்ம டீமுக்கு கொஞ்சம் ட்ரெயினிங் கொடு. உன் டைரக்டர் கன்சர்ன் சென்னார், அவங்க விசிபிலிடி வரது உன்னோட முக்கிய பொறுப்பு என்றார்.

இந்தியாவில் ஒரு மாசம் இருந்தா நல்லாதான் இருக்கும். ஊர விட்டு வந்து 5 வருஷம் ஆகுதுநரேன்... (நரேந்திரன்ஒரு வாரம் ட்ரையினிங் வில் நாட் பி குட் . அடுத்த ரிலீஸ் வரைக்கும் நான் அவங்கள ட்ரெயின் பண்ணி ஒரு ரிலீஸை அங்க இருந்தே ரன் பண்ணா கஸ்டமர் கான்பிடன்ஸ் இம்பரூவ் ஆகுமேயோசிச்சு பாருங்களேன் என்றேன்

நல்ல ஐடியா... பில்லிங் அடி வாங்குமே...  நான் கஸ்டமர் சைட் பேசி பாக்குறேன் என்றான் நரேன்.
அடுத்த நாள் அழைப்பு வந்தது... ஆல் அப்ரூவ்டு. 3 மாசம் இந்தியா ஆபிஸ்ல இருந்து வேலை செய்யலாம். அடுத்த ரிலீஸ் ரொம்ப க்ரிட்டிகல், “I want you to make a difference to the customer with improved perception about the offshore team.”  

செஞ்சிடுவோம் நரேன் ...


எமிரேட்ஸ் விமானம், அடுத்த 20 மணி நேரத்தில் இந்தியா.  ஐந்தாண்டு கழித்து மீண்டும் தாய்நாட்டிற்கு பயணம். 'உனக்கென வேணும் சொல்லு' விழி மூடியது.

No comments: