நேத்து ஒரு ஆப்பு... (Application Outage).... இந்திய பெட்டி தட்டும் மேதைகளை கொண்ட ஒரு டீம், Client Director - அவரோட மானேஜர் எல்லாரும் War Room ல்ல உக்காந்திருக்க...
Client Director: டேய் ப்ரோக்கிராமர்களா (எம்ப்ளாயீஸ் பாத்து)... இந்த Bug எல்லாத்தையும் சீக்கிரமா ஃபிக்ஸ் பன்னுங்கடா...
(நம்ம கன்சல்டன்ட் தோழர்களும் அவசர அவசரமாக லேப்டாப் திறக்க...)
Client Director: டேய் அப்ரன்டிஸ்களா... பன்னதெல்லாம் போதாதா? யோவ், நீ இங்க வா..., இந்த பசங்கள பாத்துக்க வேண்டியது உன்னோட பொறுப்பு....
Manager: சரிங்க... இந்த பசங்க இனிமே ப்ரேக் எடுக்காம ஒழுங்கா வேலை செய்யராங்கலான்னு உஷாரா பாத்துக்குறேன்...
Client Director: யோவ்... அவங்க வேலை செஞ்சி பாத்தது போதும்... இந்த அறிவாளிங்க கோட்ல கைய வெக்காம பாத்துக்குறதுதான் உன்னோட வேலை... புரிஞ்சுதா... யவனாவது Codeல கைய வைச்சீங்க அவ்வளவுதான்... கோட் அடிக்கிறாங்கலாம் கோட்...
நீங்கல்லாம் போயி அந்த ரிப்போர்ட்டிங் டூல்ல இருக்குற ஆணியெல்லாம் புடுங்குங்க....
(மொத்த 20 கன்சல்டன்டுகளும் ரிப்போர்ட்டிங் டூல் டாக்குமென்டேஷன் எடுத்து முறைத்து பார்க்க தொடங்க.... )
டேய் என்னடா பன்றீங்க... நீங்கல்லாம் ஆணியே புடுங்க வேண்டாம்டா...
(எல்லாரும் ஜி-டாக் விண்டோவை மாற்ற....)
டேய் ஏன்டா கொல்றீங்க.... நீங்க 5 பேரு ரிப்போர்டிங் ஆணிய புடுங்குங்கடா... நீங்க 10 பேரு டாக்குமென்டேஷன் பண்ணுங்கடா... நீங்க 5 பேரு Excel , Power Point, Word எல்லாம் ஓபன் பன்னி ஏதாவது பண்ணுங்கடா...
(டெவலப்பர் ஒருத்தர், அப்ளிகேஷன் ஓபன் செய்து ஸ்க்ரோல் அப், ஸ்க்ரோல் டவுன் செய்து கொண்டிருக்க....)
டேய்.. என்ன பன்றே....
டெவலப்பர்: பக் பிக்ஸ் பன்றேன்....
பாத்து.. மெதுவா க்ளிக் பன்னு... மவுஸூக்கு வலிக்க போது.... டேய் ஃபைலை ஓபன் பன்றா.... கமென்ட் போடுடா.... ஏதாவது Code அடிடா... Build பன்னுடா... Debug பன்னுடா....
ஏன்டா என் உசுற வாங்குறீங்க... ஒரு 10 $ குறைவா கிடைக்கும்னு உங்கள வேலைக்கு வெச்சதுக்கு... உஸ்ஸஸ்ஸஸ்ஸஸ்ஸஸ்ஸ இப்பவே கண்ண கட்டுதே....
கண்ணை மூடி கண்ணை திறப்பதற்குள்.... BRB - After a break, மெசஞ்சர்ல Status மாறி மொத்த கும்பலும் எஸ்கேப்...
1 day ago
6 comments:
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
:)
என்னங்க ஹவாய் ல இதான் செய்து கொண்டு இருக்கீங்களா? நான் கூட நீங்க ஏதோ வேலை செய்றிங்க ன்னு நினைத்தேன்!
ஆமா, இதுல நீங்க யாரு?
இது ஹவாய்ல இல்லடா... போன ப்ராஜெக்ட்... டெக்சஸ்ல.... நடந்தது இதேதான்... ஆனா... சொல்லப்பட்ட ஸ்டைல் மட்டும்தான் வேற... அந்த கன்சல்டன்ட் கூட்ட தலைவனா ;) நான் 2 வருஷம் ஆணி புல்லிங் பன்னேன். ;))
தங்கள் வலைப்பூவில் என் முதல் comments.
ஆணி புடுங்கறத பத்தி நச்சுனு எழுதுறீங்க போங்க
நன்றி குமரேசன்.... வருகைக்கும் தருகைக்கும். ;)
humour sense jasthi pa IT pasangaluku
Post a Comment