இன்று நண்பர்கள் தினம்,
ஜி-டாக்கில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் பிங் செய்து, நன்றி, வாழ்த்துக்கள், என சொல்லி பழைய நினைவுகளை உயிர்ப்பிக்க ஆசை இருந்தாலும், நிறைய நண்பர்கள் Do not disturb என்ற நிலையிலும், 5 நிமிடங்களுக்கு மேலே இன்டரஸ்டிங்கா பேச முடியாத என்னுடைய இயலாமையாலும்... ;) அந்த எண்ணத்தை கைவிட்டேன்.. ஆனால், காலை முதல் மதியம் வரை நிறைய நினைவுகளின் நிறைவுகள்.... இது மன நோயா என தெரியவில்லை... கடந்த சில மாதங்களாக, வெட்டியாக நிறைய நேரம் இருப்பதால், நினைவுகளிலேயே செலவிடுகிறேன்... எத்தனை இதயங்கள்.... பள்ளி நாள் முதல் இன்று வரை... நிறைய நினைவலைகள்.... அம்மா கூட சில சமயங்களில் தோழியாக தெரியும் போது பாசம் அதிகமாகும்.
நிறைய இதயங்களை நான் காயப்படுத்தியுள்ளேன்... நிறைய காயப்பட்டுள்ளேன்... நிறைய புன்னகைத்துள்ளேன்... நிறைய கற்றுக்கொண்டுள்ளேன்... என்னை சுற்றி இருந்து ஒவ்வொரு இதயத்தில் இருந்தும் ஏதோ ஒன்றாவது அழகாகவும், அதிசயக்கவும், அல்லது எனக்கு ஒரு தூண்டுகோலாகவோ இருக்கும்.... இதோ இணையத்தில், இது வரை நான் பார்க்காத எத்தனையோ பேர் கணினி முன்னர் என்னை சிரிக்கவும், கண்ணீர் கசியவும் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்... .
புன்னகை பரப்பிட, வளம் சிறக்க அனைவருக்கும் வாழ்த்துக்கள்... நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...
5 years ago
3 comments:
அண்ணே சற்றே தாமதமான வாழ்த்துகள் நண்பர்கள் தினத்திற்கு.நன்பர்களுக்கு ஓரு தினம் கொண்டாடுறத விட தினமும் அனைவரும் நண்பர்களாவே இருக்கது நல்லது இல்லையா? :)
தல, அண்ணேன்னு சொல்லி என்னோட வயச அதிகபடுத்தாதீங்க... ;) வருகைக்கும் தருகைக்கும் நன்றி...
நா சாரி.. நா சாரி.. ஆனா உங்க கிட்டேர்ந்து அப்போவே அப்போவே அட்வான்ஸ் விஷ் வாங்கிட்டேனே!
இருந்தாலும், இனிய நண்பர்கள் தினம் வாழ்த்துகள் (நண்பர்கள் எல்லாம் ஒரு நாள் வச்சு கொண்டாட கூடாதுங்க. தினம் தினம் கொண்டாட வேணும். அதன் உங்க நண்பர்கள் "பிஸி" என்று வைத்து கொண்டார்கள் போல! :) )
Post a Comment