Thursday, August 14, 2008

நன்றி மறப்பது நன்றன்று

சுதந்திர நாள் …… டேய் நீயெல்லாம் இத பத்தி பதிவெழுதனுமான்னு பல முறை யோசிச்சு, எழுத தொடங்குனது.......

நிறைய பதிவுகளில்.... அரசியல் சரியில்ல... வெளிநாட்டு அடிமையா வேலை செய்யும் இளைஞர்கள்.... நடிகர் நடிகைகளுக்கு முக்கியத்துவம் தரோம்.... விலைவாசி ஏறுது.... ஒலிம்பிக் ல ஒரே ஒரு தங்கம் தான் ஜெயிச்சோம்.... இத்தனை கோடி மக்கள் ஏழ்மையில் இருக்காங்க.... குண்டு வெடிச்சது... குண்டு இருந்து வெடிக்கல.. அது அரசியல் சதி... விவசாயம் குறைஞ்சிடுச்சு.... தண்ணி இல்ல... வேலைவாய்ப்பு இல்ல... க்ரிக்கெட்ல ஜெயிக்கிறாங்க, அப்புறமா தோத்துடறாங்க... . டிஸ்கோ ஆடுராங்க.. கலாச்சாரம் சீரழீது... போலீஸ் கெட்டு போச்சு.... கலர் டீ. வி. தராங்க... எம். பி எல்லாம் இலஞ்சம் வாங்குனாங்க.. என்னை கேக்காமலேயே அணு ஆயுத ஒப்பந்த்ததில கையெழுத்து போட்டுட்டாங்க.... இப்படி எல்லா குறைகளையும் பெரிய பூதக்கண்ணாடியை வெச்சு பாத்து..... கடைசியா நக்கல் பண்றா மாதிரி ஒரு பாரத மாதா வாழ்கன்னு சொல்லி....


அடுத்தவங்களுக்கு அறிவுரை கூறுமளவுக்கு நான் அறிவாளி இல்லை... ஆனா... கருத்து பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு....


இரண்டு முறை கூகிள் செய்து தெரிந்து கொண்டதையும், விக்கிபீடியாவில் படித்ததும் தான் நம்முடைய அறிவின் ஆழம்... கொஞ்சம் யோசிச்சு பாருங்க... மக்கள் தொகை... வருமானம்... திட்டத்தேவைகள்... எதிர்கால தேவைகள் குறித்த திட்டங்கள்.... நாட்டை நிர்வாகம் செய்வது கிள்ளுக்கீரையா? அவ்வளவு வேண்டாம்..... ஒரு நூறு பேர் இருக்கும் குழுவை மேலாண்மை செய்வதில் எவ்வளவு சிக்கல் இருக்கும் என்பது அங்கு இருந்து பார்த்தால் தான் தெரியும்...

நுகரும் நலன்களை எல்லாம் ஒவ்வொன்றாக எண்ணிப்பாருங்கள்... . காலை வீட்டுக்கு வரும் பால், பேப்பர் முதல், இரவு விழித்து பார்க்கும் தொலைகாட்சி நிகழ்ச்சி வரை... இந்த சுதந்திர நாட்டின் பங்களிப்பு இல்லாமல் ஏதேனும் ஒரு விஷயம் இருக்கிறதா?

உங்களுக்காக உங்களை சுற்றி வரும் வளர்ச்சிகளை கொஞ்சம் கவனித்து பாருங்கள்.... நம்முடைய அடிப்படை சுகாதாரத்தில் இருந்து, அறிவியல் தாகம் வரை... அனைத்தையும் பூர்த்தி செய்து.... அதற்கு மேலாக.... அறிவாளித்தனமான நம்முடைய கருத்து சுதந்திரத்தையும் அளித்துள்ள நாட்டிற்கு... பெருசா எதுவும் செய்யலனா கூட பரவாயில்ல... குறை சொல்லாதீங்க... ப்ளீஸ்....

நன்றி மறப்பது நன்றன்று.....

5 comments:

Anonymous said...

கருத்து பகிர்வுக்கு நன்றி!

Natty said...

புனிதா ஜி... நன்றி வருகைக்கும் தருகைக்கும்... :)

புதுகை.அப்துல்லா said...

நுகரும் நலன்களை எல்லாம் ஒவ்வொன்றாக எண்ணிப்பாருங்கள்... .
//

அண்ணே! நாம் தேவைக்கு அதிகமாகவே நுகர்ந்து நம் எதிர்கால சந்ததிக்குத் தேவைபடும் இயற்கை வளங்களையும் ஓன்றும் இல்லாமல் செய்கிறோமோ என்று தோன்றுகின்றது. :(

Natty said...

புதுகை பாஸூ.... மறுபடி அண்ணேன்னு கூப்பிடக்கூடாது... நான் ச்சின்ன பையன் தான்............... சொல்லிட்டேன்... ;)

Jags said...

//காலை வீட்டுக்கு வரும் பால், பேப்பர் முதல், இரவு விழித்து பார்க்கும் தொலைகாட்சி நிகழ்ச்சி வரை... இந்த சுதந்திர நாட்டின் பங்களிப்பு இல்லாமல் ஏதேனும் ஒரு விஷயம் இருக்கிறதா?

என்ன முதல்வன் படம் பார்த்துட்டு பதிவு எழுத ஆரம்பிசீங்கள..?? இல்ல எதாவது captain படமா..?