Monday, January 26, 2009

சிதறல்

இதோ தொடு வானில்

வெளிச்சப்பெட்டிக்குள்  கரையான் ஓட்டை போல்

மொத்த வெளிச்சத்தையும்  கீற்றாக்கி மின்னியது..

கரிய கடல் பரப்பில்  வெள்ளி பாதை போட்டது...

 

உற்று பார்க்கிறேன், மேலும் பல நட்சத்திரங்கள்,

மேலும் பார்த்தால், மேலும் பல நூறு,

உரைக்க முடியாத வியப்பு,

நட்சத்திரங்களின்  மக்கள் தொகை 

நேற்று முதல் பெருகியதோ..!

 

வாழ்வாங்கு வாழ்ந்தவர் 

உலகை நீத்த பின்னர்

வின்மீனாகி வின்னகரம் அடைவாராம்,

இங்கும் விதி விலக்கு இருக்குமோ!


செல்வாக்கு இருந்தால், 

வின்மீன் பட்டாவும்

விலைக்கு கிடைக்குமோ!

இருக்கும்... இல்லை என்றால் 

இத்தனை வின்மீன்கள் எங்கிருந்து முளைத்திருக்கும்.

 

இப்படி எல்லாம் சிதறி விழும் எண்ணங்கள்

சிதறி விழும் எண்ணங்களில்,

வலுவாய் ஒரு எண்ணம்...

 

பிரபஞ்சத்தில் ஆயிரம் கோள்களாம்,

பிரபஞ்சத்தை தாண்டி  பல்லாயிரம் பிரபஞ்சகளாம்...

 

இந்த நட்சத்திரம்  இத்தனை ஒளி ஆண்டுகள்

தாண்டி இந்நிலையில்  இருக்கிறதாம்.

அந்த நட்சத்திரங்களுக்கும்  வாழ்வு உண்டாம்...

இன்னும் சில ஆயிரம்  ஒளி ஆண்டுகளின் பின்னால் மாண்டு போகுமாம்!

 

ஹைட்ரஜனும் ஹீலியமும் ஒளி வீச காரணமாம்..

அவற்றின் வடிவம் பெரிதானால் வாழ்க்கை சிரிதாகும்,

விக்கிபீடியாவும்,  அரை வேக்காடு புத்தக அறிவும்,

வேண்டாமல் வந்ததும்  வியப்பெல்லாம் சிதறியது...

 

இன்றும் இருண்ட வானில்

நட்சத்திரங்களை பார்க்கிறேன்...

இருபது வருடத்திற்கு  முன்னால்

இனம் புரியா மகிழ்ச்சி  இன்றில்லை...

 

எல்லா புரிதல்களும்

பலன் அளிப்பதில்லை...

இதோ அடுத்து விக்கிபீடியாவில்,

அலை எழுவது எப்படி  என படிக்க விழைகிறேன்... 

7 comments:

goma said...

நட்சத்திரக் கூட்டமென மண்ணில் சிதறிக் கிடக்கும் மனிதன் என்ற இந்த மண்மீன்களின் மனதைப் புரிந்து கொள்ள இயலாத போது விக்கிபீடியா துணையோடு விண்மீன்களைப் படித்து என்ன செய்யப் போகிறோம்?

Natty said...

கோமா.. வருகைக்கு நன்றி...

Divya said...

அருமை:)

Natty said...

நன்றி திவ்யா... உங்கள் கவிதைகளும் அழகாய் இருக்கிறது...

A N A N T H E N said...

//விக்கிபீடியாவும், அரை வேக்காடு புத்தக அறிவும்,

வேண்டாமல் வந்ததும் வியப்பெல்லாம் சிதறியது...//

விஞ்ஞானத்தைப் பற்றிய மாறுபட்ட கோணல்! சிதறல் எங்கும் சிதறவில்லை... வியப்போடே இருங்க, உங்க குழைந்தைகளுக்கும் அதே கதைய சொல்லுங்க...

எம்.எம்.அப்துல்லா said...

aahaa :))

*இயற்கை ராஜி* said...

nice:-))