
மோட்டார்களால் உருண்டு கொண்டே இருக்கும் ஒரு பெரிய உருளை... அந்த உருளைக்குள்ளே பெரிய பெரிய உலோக பந்துகள்.... உருளையின் சுழற்ச்சியால், மேலே வரை சுழன்று, பொத்தென கீழே விழும்... இதன் நடுவே இருக்கும் சுண்ணாம்பு கற்கள் எல்லாம் தூள் தூளாகும்.. .இவ்வளவு தான் ball mill....... இரும்பு குண்டுகளின் எடை, மற்றும் மில்லின் விட்டத்தை பொருத்து மில்லின் சுற்று வேகம் (rotation / revolution per minute) இருக்கும்.

இப்போது தூளான துகள்கள் (ரா மீல் – Raw Meal என்று அழைப்பார்கள்) காற்று மூலம் உறிஞ்சப்பட்டு சுட்டெரிக்கப்படும்....
இந்த சுட்டெரிக்கும் செயல் எல்லாம் Kiln என்றழைக்கப்படும் ஒரு உருளைக்குள்ளே நடக்கிறது... சாதாரணமாக ஒரு 3 டிகிரி சாய்வில் இந்த உருளை சுற்றிக்கொண்டே இருக்கும்... ஒரு பக்கத்தில் காற்றும் , கரித்தூளும் நெருப்பாக அனல் தகிக்க, மறு புறர் ரா - மீல் காற்று வழியாக வந்திறங்க... இப்போது ரா-மீல் தகிக்கும் பாறைகளாக வெளிவரும்... இதை க்ளிங்கர் Clinker என்று அழைப்பார்கள்...

இந்த சுடு கற்களை பக்கெட் கன்வேயர்கள் Bucket conveyers உபயோகித்து கிடங்கில் சேர்ப்பார்கள்... விவசாயத்தில் கேணி இறைப்பார்களே அதே போலத்தான்... இதை வெட்ட வெளியில் கூட சேமித்து வைக்கலாம்...

அடுத்த கட்டம், Cement Mill, உருகி உறைந்த க்ளிங்கர் பாறைகளை மற்றொரு Ball Mill கொண்டு மிக சன்னமான தூளாக - நாம் உபயோகிக்கும் சிமெண்டாக மாற்றம் பெரும் கட்டம்....
இந்த சிமெண்ட் சைலோ (silo) என்றழைக்கப்படும் பெரிய உருளைகளில் பாதுகாக்கப்படுகிறது...
காற்றின் மூலம் பின்னர் பேக்கேஜிங் பிரிவுக்கு இழுத்துச்செல்லப்படும் சிமெண்டு, மூட்டைகளுள் தானியங்கியாக நிரப்பப்பட்டு, இரயிலிலும், லாரிகளிலும் ஏறி நம்மை வந்தடைகின்றன

4 comments:
மிகவும் அருமையாக படம் போட்டு விளக்கமாக சொல்லி இருக்கிறீர்கள்.
நன்றி குசும்பன் தல...
சிமெண்ட் பத்தி தமிழ்ல எளிய ஆய்வு கட்டுரை. ஆமா software-ல இருந்துட்டு எப்படி இவ்வளவு விளக்கமா சிமெண்ட் பத்தி...என்ன பலமான foundation-ஒ ?
nandri kumaresan
என்ன பலமான foundation-ஒ ?
athae athae :))
Post a Comment