ஏழெட்டு வகுப்பு வரை,
எப்போதும் மாறாமல்,
இரண்டு மலை,
ஒரு சூரியன்,
ஒரு படகோட்டி,
ஒரு தென்னை மரம்,
ஒரு குடிசை வீடு,
நான்கு பறவைகள்...
எத்தனை முறை வரைந்தாலும்,
நல்லாத்தான் இருக்கு என்று விதைத்த
நம்பிக்கை விதைகள்....
கோபமும் அறியாமையும்
கொள்கையாய் ஊறாமல்,
மிகுதிக்கண் இடித்து,
களை பறித்த கண்டிப்பு,
ஒழுக்கம் என்ற பெயரில்,
ஒழுங்கான நலம் வாழ
அடக்குமுறை பாணியில்,
ஆட்கொண்ட வேலிகள்....
ஈதல் அறம்,
திறன்றிந்து தீதின்றி ஈட்டல் பொருள்,
என பேச்சு வழக்கிலேயே
நல்லுணர்வு நண்ணீர்
பயிர் வளர்ந்தது,
பயன் முழுதும்.... பயிருக்கே!
3 days ago
3 comments:
நேர்த்தியான நனவோடை!
தலைப்பு மட்டும் தன்னிறைவுப் பயிர்கள்ன்னு வெச்சி இருக்கலாமோ?
தல, தலைப்பை மாத்திட்டேன்... ;) உண்மைதான்... அந்த உணர்வு தன்னலம் என கூற முடியாது...
romba pudinchirunthuchu intha padaipu
Post a Comment