5 years ago
Monday, June 23, 2008
கோடைக்கால திருவிழா!
சென்ற வார இறுதியில்,
ஹவாய் ஏர்லைன்ஸ்... கோடைகாலத்தை வரவேற்க ஒரு விழா கொண்டாடி... (இதெல்லாம் ஓவர்னு நீங்க சொல்றது எனக்கே கேக்குது) எங்களையும் (ஐ. டி வெட்டி ஆஃபிசர்ஸ்) வரவேற்றது.
ஏர்போர்ட் அருகே இருக்கும் என எண்ணி, பேருந்து பிடித்து மொத்த வெட்டி ஆஃபிசர்ஸ் கும்பலும் ஏர்போர்ட் அருகே சென்ற பின்னர் தான், அது ஒரு 20 நிமிடம் நடை போட வைக்கும் என புரிந்தது... இஸ்ரேலை சேர்ந்த ஒரு சக ஆஃபிசர், டேக்சி பிடிக்கலாம் என கூறியதும், ஒரு கிங் சைஸ் லிமோசைன் வந்தது... சும்மா சொல்லக்கூடாது... 10 $ கொடுத்து லிமோ ல போன மொதல் தமிழர்கள் என்று நாங்களும் சரித்திரத்தில் இடம் பிடிச்சிட்டோம்ல... ;)
கொடுத்த 10$ சரியாகும் வகையில் பல வகையிலும் கேமராவை க்ளிக் செய்து பின்னர் விழா இடத்தை கஷ்டப்பட்டு அடைந்தோம்.
ஏர்போர்ட் பக்கத்துலேயே ஒரு ஏரியாவை வளைத்துப்போட்டு, குழந்தைகள் விளையாட உபகரணங்கள்.. பெரியவர்கள் மொக்கைகளை தவிர்த்து எஸ்கேப் ஆக ஒரு லைவ் பேண்ட்….. கிடார், ட்ரம்ஸ் எல்லாம் வெச்சிட்டு ராக், பாப், கன்ட்ரி ன்னு ஒரு பக்கம்..... அத விட அல்டிமேட் ரெண்டு விஷயம்... Thanks for the hardwork.. Mahalo ... உங்கள் உழைப்பிற்கு நன்றி.. என்ற பெரிய பேனர்... நெஞ்சை தொட்டுட்டாங்கையா.... ;) அல்டிமேட் மேட்டர் என்னனா... ஒரு பெரிய போயிங் ப்ளேனை ஓட்டிட்டு வந்து, பார்ட்டி ஏரியால விட்டுட்டாங்க... லகேஜ் ஏரியா, கன்ட்ரோல் ஏரியா... காக்பிட் உட்பட எங்கு வேணும்னாலும் சுத்தி பாக்கலாம்.. அப்படின்னு...
உள்ளே போனதும், சாப்பாடு ஐடம் என்ன இருக்குன்னு தேடிப்பாத்தா... ஹாம்பர்கர், ஹாட் டாக் அப்படின்னு off பண்ணிட்டாங்க... நாங்க எப்பவும் போல தாக சாந்தி (coca cola and plain water) செய்த பின்னர்... ஏர் ஹோஸ்டஸ் எல்லாம் எங்கன்னு யோசிச்சிக்கிட்டே நின்றிருந்த விமானத்தில் ஏறினோம்...
கோவிந்தா.. கோவிந்தா ரேஞ்சுல சின்ன க்யூ நின்னு விமான ஓட்டுனர் (அதாங்க தமிழ்ல பைலட்) இடத்துக்கு வந்தோம்... அதுக்கு முன்னாடி நம்மவர்கள் அனைவரும் இது ஏர் ஹோஸ்டஸ் ஒக்கார இடம்னு, flight attender சீட்ல உக்காந்து மகிழ்ச்சி தவழ புன்னகைத்தார்கள் ;)
பைலட் இடத்திற்கு சென்ற பின்னால், அவரை கொஞ்சமாய் மக்கள் மொக்கை போட்டு, சில பல தகவல்களை உள் வாங்கி, க்ளிக் முடித்து வெளியேறினோம்...
அதுக்கப்புறம் - patty இல்லாத ஹாம்பர்கர்கள் மற்றும் பெயர் அறியாத உணவு வகைகள் சிலவற்றை உள்ளே தள்ளி.. ;) எஸ்கேப் ஆகலாம் என்று முடிவெடுத்தோம்..
ஹாம்பர்கர் அளித்த ஒரு ஆன்ட்டி , நிறுவனத்தில் பணிபுரியும் சீனியர் டைரக்டர் என்பதும்... பார்ட்டி விட்டு வெளியே வந்த எங்களை ஒரு வேனில் ஏற்றி அருகே உள்ள பேருந்து நிலையத்தில் (அதாங்க தமிழ்ல பஸ் ஸ்டான்டு) ட்ராப் செய்த நபர் கஸ்டர் சர்விஸ் வைஸ்-ப்ரிசிடன்ட் என்பதும்..... நெஞ்சை லேசாக நெகிழ வைத்தது...
வளம் சிறக்க வாழ்த்துக்கள்.... Aloha
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
/
கொடுத்த 10$ சரியாகும் வகையில் பல வகையிலும் கேமராவை க்ளிக் செய்து
/
தமிழனின் தனித்தன்மையை நிரூபிச்சிருக்கீங்க அங்க போயும் வாழ்த்துக்கள்
/
ஏர் ஹோஸ்டஸ் எல்லாம் எங்கன்னு யோசிச்சிக்கிட்டே நின்றிருந்த விமானத்தில் ஏறினோம்...
/
:))))
/
அனைவரும் இது ஏர் ஹோஸ்டஸ் ஒக்கார இடம்னு, flight attender சீட்ல உக்காந்து மகிழ்ச்சி தவழ புன்னகைத்தார்கள் ;)
/
:)) ROTFL
படிக்க நகைச்சுவையுடன் இனிமையா இருக்கு , கலக்குங்க தொடர்ந்து.
நன்றி தல...
Post a Comment