அந்த புரிதலை பதிவாக்க - பத்தாண்டுகள் கழித்து இன்று ஒரு சிறு முயற்சி, இதே வகையில் பலவற்றையும் பதிவு செய்து, ஏற்கனவே தமிழ் பதிவர்கள் இட்டுள்ள அனைத்து நடைமுறை அறிவியல் மற்றும் விளக்கங்கள் குறித்த பதிவுகளை திரட்டி, தமிழ் வழி கல்வி பெறும் மாணவர்களுக்கு power point களாக அளிக்க வேண்டும் என்று ஒரு எண்ணம்... என்று நடக்கும் என தெரியவில்லை... இருந்தாலும் இதோ முதல் அடி ...
(இரட்டை அர்த்தத்தில் பேசுவது ஒரு குஜாலிட்டியாதான் இருக்கு... எஸ். ஜே. சூர்யா எவ்ளோ கஷ்டப்பட்டு யோசிச்சு எழுதுவாறோ?)
இது எவ்வளவு பயனுடையதாய் உள்ளது? அல்லது எவ்வளவு மொக்கையாய் இருந்தது என்பதை பின்னூட்டம் இடவும்... ஓரளவு தமிழ் இணையங்களை தேடிப்பார்த்ததில் howstuffworks போல எந்த ஒரு இணையதளமும் தெரியவில்லை... ஏற்கனவே இதை போல தகவல் தளங்கள் இருந்தால் தெரிவியுங்கள்... Why to re-invent the wheel?
சுண்ணாம்பு பாறைகள்
கடலை தாண்டி ஒரு 350 கி.மீ இருக்கும் திருச்சி, அரியலூர் பகுதிகளில் சுண்ணாம்பு பாறைகளின் படிமங்கள்... அங்கு பாறைகளினூடே புதைந்த சிப்பிகள், சங்குகள் எல்லாம் ஒரு காலத்தில் அங்கு கடல் அல்லது பெரிய நீர் பரப்பு இருந்ததாக தெரிவிக்கின்றன....

சுண்ணாம்பு படிமங்கள்
நாம் நுகர்வது எல்லாமே இயற்க்கையில் இருந்து வந்த பொருட்களே என்பதை நினைவூட்டும் வகையில், மண் , சிமெண்டாய் மாறும் வித்தையின் முதல் கட்டத்தில்....
செயற்க்கை கோள் படங்கள், மண் மற்றும் பாறைகளின் வேதியியல் ஆராய்ச்சிக்கு பிறகு சுண்ணாம்பு சுரங்கங்கள் (lime stone mines) அவற்றின் தரத்திற்கேற்ப வகைப்படுத்தப்படுகிறது... பாறைகளின் உறுதியை கணக்கிட்டு, அதற்கு ஏற்ற வகையில் Dimensions for Drilling - ஓட்டைகளின் ஆழம் மற்றும் அகலம் கணக்கிடப்படுகிறது, ட்ரில்லிங் முடிந்த பிறகு அதில் நைட்ரோ வெடிபொருட்களை ப்ளாஸ்ட்டிக் பைகளில் ஒயர்களை சேர்த்து விடப்பட்டு, டெட்டோனேட்டர் (ஒரு சிறிய அளவு மின் அதிர்வை தரும் இயந்திரம்) கொண்டு பாதுகாப்பாக வெடிக்கப்படுகிறது...

தூளாகும் பாறைகள்...

அது வெடிக்கும் அழகு பார்த்து பத்தாண்டுகள் கழித்தும் கண் முன்னே நிற்கிறது.... பாறைகளாக மாறிய (Limestone rocks) பூமியின் படிமங்களை பெரிய அளவு டிப்பர் லாரிகள் மற்றும் போக்கலைன் இயந்திரங்கள் கொண்டு சிமெண்ட் ஆலைக்கு கொண்டு செல்வார்கள்...

இங்கு முதல் கட்டம் - Crushing - ஹாமெர் மில் (Hammer Mill) என்னும் நிலையில், பெரிய பாறைகள், சிறிய கற்கலாக மாறுவது... பெரிய சம்மட்டிகளை தொடர்ந்து சுழற்றி சுழற்றி அடித்தால் எப்படி இருக்கும் ? அதே போலத்தான் Hammer Mill….. வேகமாக ஓடும் ஒரு உருளையை சுற்றி பல சம்மட்டிகள்.... மேலே விழும் பாறைகள் 25 - 40 மிமி அளவில் சிறிய கற்களாக ....
இந்த சிறிய கற்கள் பெல்ட் கன்வேயர்கள் மூலமாக ஒரு கிடங்கில் குவிக்கப்படும்.. இதை Stacking - ஸ்டாக்கிங் என்று அழைப்பார்கள்.... இவ்வாறு குவிக்கப்படும் குவியல்கள் சிமெண்ட் ஆலையின் input buffer என்ற முறையில் production fluctions ஐ தவிர்ப்பதாக அமைகிறது...
அடுத்த பதிவுகளில் இந்த கற்கள், தூளாய் மாறி, நெருப்பாற்றில் நீந்தி, மீண்டும் பாறையாய் மாறி, தூளாகி, பையில் அடைபட்டு, எப்படி பலமாடி கட்டிடங்களை தாங்கிடும் ஆற்றலை பெறுகிறது என்ற தகவலையும் பார்ப்போம்.
6 comments:
ஆந்திராவில் இந்த கற்கள் சமவெளிக்கு கீழே சில அடிகளிலேயே கிடைக்கிறது.
அங்கு சிமிண்ட் தொழிற்சாலையில் வேலைப்பார்த்து பலவற்றை தெரிந்துகொண்டேன்.
அவற்றின் படங்களை என் முன் பதிவுகளில் பார்க்கலாம்.
நன்றி குமார், உங்கள் வலைப்பூவில் நிறைய தகவல்கள் இருக்கிறது... நீங்கள் குறிப்பிடும் பதிவிற்கு லிங்க் பிளீஸ்.... நன்றி வருகைக்கும் , தருகைக்கும்.. ;)
http://madavillagam.blogspot.com/2006/09/1987-1988.html
தேடவைச்சிட்டீங்க.... :-)
Vazhga Ungal Tamil Thondu....
கார்த்தி தல, நன்றி வருகைக்கும், தருகைக்கும்.. Unknown turf காலியா இருக்கே!
நல்ல முயற்சி. சுவராசியமாய் இருக்கிறது. தொடரவும்
Post a Comment