Thursday, July 24, 2008

பழங்கதைகள் நினைத்து... .

பொய்யான புன்னகை முகமூடி,
தன்னிலை குறித்தே எப்போதும் சிந்தனை...
வேலை வந்தாலும், செலவு வந்தாலும்,
அடுத்தவரிடம் காட்டும் தனி அன்பு...
தேவையில்லாமல் கொடுப்பவன் ஏமாளி எனும் அடைமொழி...
வாழ்விற்கும் புன்னகைக்கும் தொடர்பொன்றும் இல்லை.. .
அது டாலர் மதிப்பிலேயே இருக்கிறது என்ற வாக்குவாதங்கள்....

பணிபுரிவதிலும் பாங்காக அரசியல்,
அப்ரெயிசல் என்ற பெயரில் அழுக்கு பொய்கள்...
முன்னே புன்னகைத்து, நகர்ந்த பின்னர் பரிகாசம்...
பரிகாசம் செய்தியாக உடனுக்குடன் பரிமாற்றம்...

இந்த கூட்டம் எனக்கு ஏனோ பிடிக்கவில்லை....
இதை நான் இயல்பென்று ஏற்க விரும்பவில்லை...

பழைய நட்புகள் மீண்டும் கிடைக்குமா?

பல் தெரிய பெரும் சிரிப்பு,
கைக்குட்டையில் காசு சேர்த்து,
ஐயங்கார் பேக்கரியில் கூட்டுறவு சிற்றுண்டி
சமோசாவை கூட காக்கா கடி கடித்த அழகு

முணியாண்டி விலாசில் மலிவு விலை பரோட்டாக்கள்...
புறநகர் இரயில் - மூன்று இருக்கையில், ஆறு பேர்..
கரம் பிடிக்கும் கட்டை தொங்கி,
டார்சன் கருத்துவிளக்கம்...

மதிய கட்டுச்சோறு 10 மணிக்கே மாயமாகும்.
பகல் சாப்பாடு, ஆந்திரா மெஸ்ஸில்,
கோங்குரா.. சாம்பார், சாம்பார், சாம்பார், மோர்.. இன்னொரு சாம்பார் என சிரிப்பினூடே வைத்துக்கொண்ட சாப்பாட்டு பந்தயங்கள்...

ஆய்வு அட்டவணை (records) அனைத்தும் நீ முன்னே முடித்தாலும்,
நான் முடித்த பின் கையெழுத்து வாங்கும், நட்பிற்கான இங்கிதம்...
மூன்று மணிநேர தேர்வை ஒரு மணி நேரத்தில் முடித்த பின்னும், எம்முடன் பயணிக்க நீ காத்திருந்த காரணம்...

கல் எடுத்து குறிபார்த்து எரிய, நிசப்தம் ஆகும் சுவற்றுக்கோழிகள்...
நான் அடித்த கல் அவற்றை அடக்கவில்லை என்றால்...
இன்னொரு ரவுண்ட் ட்ரை பண்ண சொல்லும் அன்பு

1 ரூபாய் நாணயம் வைத்து கந்தமாகுமா என ஆராய்ச்சி செய்து,
பல நாணயங்களை தண்டவாளத்தில் தற்கொலை செய்யவைத்த நாட்கள்...
கந்தகமாகவில்லை என அறிந்தும்,
அது metal alloy, இப்போது இருபது பைசாக்களை ஆராய்வோம் என
வரிசையாய் அடுக்கிவைத்து அறிவு வளர்த்த நாட்கள்

உள்ளத்தில் உள்ளதை உள்ளவாறே உளறி,
உவகை பூத்த காலங்கள்....

எதிர்பார்ப்பு எதுவுமின்றி, இயல்பாய் பழக,
இதயத்தில் எப்போதாவது கனமிருந்தால் இறக்கி வைக்க...
இரைச்சலின் அமைதியை கொலை செய்து, சில வார்த்தை இனிமை பேச,
யாராவது உடனே வேண்டும்... நான் நானாக வேண்டும்...

4 comments:

கோவை விஜய் said...

நட்பின் ஆழத்தை நயமாய்ச் சொல்லியுள்ளீர்கள்
தி.விஜய்
http://புகைப்பெழ்ஹாஇ.blogspot.com/

Nilofer Anbarasu said...

கொஞ்சம் உரைநடை கொஞ்சம் கவிதை, இரண்டும் கலந்த எழுத்து நடை........ரொம்ப நல்லா இருக்கு.

//ஆய்வு அட்டவணை (records) அனைத்தும் நீ முன்னே முடித்தாலும்,
நான் முடித்த பின் கையெழுத்து வாங்கும், நட்பிற்கான இங்கிதம்...
//
இந்த வரி தான் ரொம்ப டாப்......

Natty said...

நன்றி விஜய்...

Natty said...

நன்றி ராஜா... உங்கள் பதிவுகளின் மொழி நடை அழகாக உள்ளது... சி. ஆர். எம். இது வரை புரிந்ததில்லை.. படித்து புரிந்துகொள்ள முயற்ச்சிக்கிறேன்... ;) வருகைக்கு நன்றி...