விஞ்ஞானம்... ஒவ்வொரு நொடியும் வியக்க வைக்கும்...
கடந்த பொருட்களை சுட்டிக் காட்டி...
விஞ்சிடும் அளவில் வியப்புண்டாக்கி...
இதோ இது பால் வெளி... .அண்டம் முழுவதும் கோள்கள்...
அந்த கோளில், ஆயிரம் ஒளி ஆண்டு அருகில்...,
அதோ ஒரு மேடு.... இன்னும் சில ஆயிரம் ஆண்டுகளில் இங்கு புதிய உயிர் பிறக்கும்...
இந்த சந்திரன் மேலே கட்டிடம் அமைப்போம், சாத்தியம் உண்டு....
ஒரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு
ஒலியில் வேகத்தில் பயணிக்க...
உடைகள், உணவுகள், உறைவிடம்,
உள்ளது சிறக்க, உவகை பெருக்க....
மாற்றங்களை மாறாமல் செய்வதால்,
மாபெரும் சக்தியானாய்...
ஏற்றங்கள் பல தந்தாய், தருவாய்,
மேலும் தருவாய்...
மனிதர்கள் நாங்கள்...
அப்படியே ஏற்றக்கொண்டால்,
மரபணுக்கள் கேலி செய்யும்.
குறைகள் பார்ப்பது எங்கள் குலவழக்கம்....
பாலி-எதிலின் வந்தால், சுற்றுச்சூழல் பற்றி சிந்திப்போம்...
மரத்தை காக்க மாற்று வந்தால், பழமை போனது என்று பரிதவிப்போம்...
மரபணு மாற்றி புதிய பயிர் வந்தால்,
வழி வழி பயிரை மாய்த்தாய் என்போம்..
உவற் நீரிலும், உலர்ந்த காட்டிலும்
பயிர் விளைவிக்காத அறிவியல் ஏனென்போம்...
நன்றாய் நாங்கள் இருக்கும் வரை...
மருத்துவ அறிவியல் காசு பார்க்க என்போம்..
மென்பொருள் படித்த ஒவ்வொரு மனிதனும்,
சமுதாய உழைப்பை சுரண்டும் காட்டுமிராண்டி என்போம்..
அணு சக்தி, எரிபொருள். வான்வெளி, கோள்வழி,
பங்கு சந்தை, உலக அரசியல், மரபணு, தொழில் நுட்பம்,
தகவல் தொடர்பு, மேலாண்மை, எல்லாமும் எனக்கே தெரியும்...
நாங்கள் கேள்விகளை கேட்கவும், எதிர்ப்புகளை தெரிவிக்கவும்,
எந்த ஒரு கட்டுப்பாடும் எப்போதும் கொண்டதில்லை...
நாளை வளமாகும், உலகின் குறைபாடுகளுக்கு,
ஒரே தீர்வாக எப்போதும் விஞ்ஞானம் காத்திருக்கும்..
அதற்கு வியாபாரமோ, மனித நேயமோ, அரசியலோ,
எது வேண்டுமானாலும் காரணியாக இருக்கலாம்...
நாங்கள் மாறமாட்டோம்...
நலன்களை எல்லாம், நன்றாய் நுகர்ந்தாலும்,
எது வந்தாலும் எதிர் குரலெழுப்புவோம்...
5 years ago
2 comments:
இரண்டு நாட்களுக்கு முன்புதான் 'அக்கினிச் சிறகுகள்' படித்து முடித்தேன். அந்த பாதிப்பு நீங்காத நிலையில் இந்த பதிவு இரசிக்க வைத்தது. நன்றி..அறிவியலுக்கா? அதைக் கண்டுப் பிடித்த மனித குலத்திற்கா!
அணுசக்தி குறித்து எத்தனை சர்ச்சைகள்... ஒவ்வொரு புதுமை வரும் போதும், ஏற்றுக்கொள்ள பக்குவம் இல்லாமல், சிந்திக்க போதுமான அவகாசம் எடுத்துக்கொள்ளாமல், எடுத்தவுடன் குறை சொல்லும் எத்தனை பேர்......... இது பழக்கமாகிவிட்டது.. என்றாலும் இதயத்தின் முனகலுக்கு வடிகால்.. ;) கிறுக்கல்...
Post a Comment