Wednesday, December 24, 2008

இது என்னவென்று உனக்கு தெரியுமா?

சற்றே செறுக்குடனே!  
சமயமும், கலையும் , 
இலக்கியமும், சங்க கால கதைகளும், 
அறிவியலும், புனைவுகளும், 
இயற்கையின் விதிகளையும், 
இன்னும் பலவும்,  

புவியியல் விதி இது, பூளோக பொருள் இது, 
என எங்கே எப்போதோ படித்து 
செரிமாணம் முடியாத தகவலை, 
வரிவரியாய் சொன்னாலும்,  

மாறாத புன்னகையில், 
மறுப்பேதும் சொல்லாமல், 
விருப்போடு கேட்பாயே!  

செறுக்கை கொல்ல
இந்த வழியை எங்கிருந்து நீ அறிந்தாய்?

நெஞ்சுக்கு நீ... தீ...

உலகின் மொழியில் எல்லாம் 
உச்சரிக்க முடியாதது
எனக்கு பரிச்சயமானது..... 
மௌனம்....  

ஓராயிரம் எண்ணங்கள் உளத்தில் எழுந்தாலும், 
மூளைகளின் நரம்பு துடிப்பு உடலில் உணர்ந்தாலும், 
இதயத்தின் இயக்க வேகம், இயல்பை விட அதிர்ந்தாலும், 
வெளிவரும் மூச்சில், வெப்பம் இயைந்தே போனாலும்.....  

பழகிய தாய்மொழியில் வார்த்தைக்கு பஞ்சமில்லை. 
உணர்வுகள் மோதுகையில், உதடுகளுக்கு ஒலியில்லை... 
காதல் என்றுதான் இல்லை, கோபம், வெறுமை, இனிமை,  
என பல நிலைகளிலும் நான் ஊமையாகி போகிறேன்...  

ஆனால், நீ.... 
நான் மௌனத்தில் இருந்தாலும், 
என் மனதின் சலனம் எல்லாம், எப்படி அறிந்தாய்?  

என் மன நிலைக்கு ஏற்ப,  
புன்னகைக்கவோ, பரிகாசிக்கவோ, 
பக்கத்தில் அமர்ந்து, கரம் பிடித்து தேற்றவோ, 
துக்கம் ஏற்பட்டால் தூர துரத்தவோ, எப்படி நீ அறிந்தாய்?.  

மௌனத்தில் அமைதியில்லை என, 
மௌனமாய் கற்றுத்தந்தாய்... 
இயல்பின் நான் திரும்பும்போது.. நீ 
இங்கில்லை... எங்கே சென்றாய்?

Tuesday, December 23, 2008

எங்க ஏரியா! உள்ள வரியா!

சென்ற வாரத்தில் கொங்கு நாடு, பாண்டிய நாடு, சோழ நாடு என ஊர் பெருமையை அழகாக உரைக்கும் பதிவுகளை படிக்க நேர்ந்தது..... .நம்ம சென்னையை பற்றி எந்த பதிவும் கண்ணில் படவில்லை.... பிறந்து, வளர்ந்து, சிரித்து, மகிழ்ந்த ஊரான சென்னையை பற்றி சிலாகிக்கவே இந்த மொக்கைஸ்

நீங்கள் கேட்ட பாடல் ரேஞ்சில் வாரம் ஒரு ஏரியா கவர் பண்ணலாம்னு ஐடியா... . 52 வாரம் ஈசியா ஓட்டிடலாம்லே! பதிவு போட இனிமேலும் மண்டைய குடைய வேண்டாம்....

தொடங்கும் முன் ஒரு டிஸ்கி ;) நிறைய தகவலுடன் இருக்க வேண்டும் என்பதற்காக கொஞ்சம் விக்கிபீடியா மற்றும் பிற இணையங்களின் உதவியும் கூகில் ஆண்டவர் அளிக்க பெற்று இந்த பதிவை சுட்டளிக்கிறேன் ;)




இணையத்தில் பழைய சென்னையின் அழகான புகைபடங்கள் நிறைய இருக்கிறது... காப்பிரைட் பயத்தின் காரணமாக... உங்கள் பார்வைக்கு... இந்த லிங்கை க்ளிக்கவும்...





“எவ்வழி நல்லவர் ஆடவர்,
அவ்வழி நல்லை ; வாழிய நிலனே!”

ஔவையார் பாடியது என நினைக்கிறேன்... இன்றளவும் எந்த ஊருக்கும் பொருந்தும்.

சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகள், ஒழுக்கமின்மை, இலஞ்சம், சாலை விதிகள் மீறல், சுகாதாரமின்மை, மக்கள் தொகை நெருக்கம், மாசு, தூசு, என குறைகள் எத்தனை இருந்தாலும், பல கோடி மக்களுக்கு வாழ்வின் ஆதாரமாக விளங்கி, ஒவ்வொரு நாளும் வளர்ச்சி பெரும், வாழ்வின் விளக்கமாக சென்னை தோற்றமளிக்கிறது...

இழுவை முடிந்தது.. இனி பதிவிற்கு....

வடக்கில் இருந்து தெற்கு நோக்கி பயணிப்போம்.... தொழிற்சாலையின் புகையிலும், ஏழ்மையின் தோற்றத்திலுமே சித்தரிக்கப்படும் வட சென்னை.... வளமான பகுதிகளையும் தன்னிடத்தே கொண்டது.... இங்கு வர்த்தக தொழிற்சாலைகளின் தண்டையார்பேட்டையில் இருந்து, வடக்கில் எண்ணூர் தாண்டி வளர்ந்து கொண்டே வருகிறது...... தியாகராய நகருக்கு அடுத்த படியாக ஜவுளி வாணிகம் நிகழும் வண்ணாரப்பேட்டை... மீன்பிடி துறைமுகம் இருக்கும் காசிநகர் (காசிமேடு)... சரித்திர சுவடுகளை தாங்கி இன்று மங்கி இருக்கும் இராயபுரம்... இரயில் தயாரிக்கும் பெரம்பூர், மற்றும் வளரும் சுற்றுப்புறத்தில், வில்லிவாக்கம் , கொரட்டூர், அண்ணா நகர் ஆகியவற்றை உள்ளடக்கியது....

உயர்நீதி மன்ற வளாகம் தாண்டி, வட சென்னை வர பயப்படும் நண்பர்கள் பலரையும் பார்த்திருக்கிறேன்.... இங்கு மட்டுமே... ஐந்து அடி அகல தெருவில், ஐந்து அடுக்கு மாடிகள் இருக்கும்... இங்கு மட்டுமே ஒவ்வொரு வீட்டிலும் ஏதேனும் ஒரு சிறு தொழில் நடக்கும்.... மாவு அரைத்து விற்பதானாலும், மளிகை பொருட்களை மீண்டும் பாக்கிங் செய்து சில்லரை விற்பனை செய்வதோ.... சாலைக்கு சாலை இருக்கும் பருப்பு ஆலைகளோ, சில்லரை வணிகமோ, இந்த மக்களிடம் வளம் சிறக்க வாழும் ஒரு முனைப்பை வெளிப்படுத்தும்.... ஓரளவில் ரவுடியிசம் மற்றும் கட்ட பஞ்சாயத்து உண்டென்றாலும், சென்னையின் எல்லா இடங்களை போலத்தான் இங்கும்... ஆக தலைப்புக்கு விளக்கம் சொல்லியாச்சு...

சமயம், இலக்கியம், சிவப்பு கொடி, அரசியல், , அடி தடி என சினிமா படம் போல எல்லாம் கலந்து இயங்கும் வாழ்க்கை... இரவு 2 மணிக்கு வெளியே சென்றாலும், சாலையில் மக்கள் நடமாட்டம்... காலை 3 மணிக்கெல்லாம் தேனீர் கடையில் கூட்டம்.... என வித்தியாசமான வாழ்க்கை.....

என் நினைவில் 90 களில் நிறைய கவிதை வட்டம், தமிழ் பேரவை கூட்டங்களில் கலந்த நினைவு.... மார்கழி மாதத்தில் எல்லா சபாக்களிலும் 50/100/500 ரூபாய் டிக்கட் என்றால், வட சென்னையில் மட்டும் இலவச இசை நிகழ்ச்சிகள்.... இராசா அண்ணாமலை மன்றமானாலும், கலைஞர்களும் பொதுமக்களோடு அமர்ந்து இசைக்கும் திருஅரங்கப்பெருமாள் கோவில் நிகழ்ச்சியாகட்டும்... இலவசமென்றாலும், இசைக்கும் பஞ்சமில்லை...

சமயம்; வடசென்னையின் திருவொற்றியூர் கோயில் தனிசிறப்பு, திருவொற்றியூரிலேயே வள்ளலார் வளாகம், பட்டினத்தார் ஜீவசமாதி அடைந்த இடம், கல்யாண வரதராஜ பெருமாள் கோயில், மின்ட் அருகில் உள்ள திரு ஏகாம்பரேசுவரர் கோவில், மன்னடி அருகில் இருக்கும் மல்லிகேசுவரர் கோவில், காளிகாம்பாள் கோயில், சென்ன மல்லீசுவரர் கோவில், கந்தகோட்டம் சுப்ரமண்ய சுவாமி கோயில், கச்சலீசுவரர் கோவில், காசி விஸ்வநாதர் கோவில், காலத்தீசுவரர் கோவில் என இந்து சமயம் இங்கு இழையோடுகிறது...

மன்னடி மற்றும் முத்தையால்பேட்டை பகுதியில் பழைய கட்டிடங்கள் பலவும் காணலாம்... சென்னையின் முதல் வணிக பொருளாதார வளாகமாக திகழ்ந்த இடம், இன்றும் பல கோடி ரூபாய்களை பரிவர்த்தனை செய்து கொண்டிருக்கிறது....

இராயபுரம் பகுதியில் கிருத்தவ கோயிலான மாதா கோவில் பழமையானது... அதே போன்று, ப்ராட்வே பகுதியில் பல புராதன சர்ச்சுகளும், மசூதிகளும் உண்டு.... மத வேறுபாடு, மத கலவரங்கள் இங்கு அரிது.... அடுத்த வீட்டு நபரின் பெயர் தெரியாத நபர்களின் எண்ணிக்கை வட சென்னையில் மிக குறைவு... ;)

பக்கிங்காம் கால்வாய் என ஒரு காலத்தில் படகு போக்குவரத்திற்கு உதவிய கால்வாயும், கூவத்தின் ஒரு பகுதியும் வட சென்னையில் பாய்கிறது... நம்பிக்கை இருக்கிறது... சில வருடங்களில் மீண்டும் இந்த ஆறுகள் புது உயிர் பெறும் என நம்பிக்கை உள்ளது....

சென்னை கோட்டையில் உள்ள புனித சர்ச்சும், அருங்காட்சியகமும் பார்க்க வேண்டியவை.. ஒரு நகரத்தின் வரலாற்றை தன்னுள்ளே புதைத்து வைத்துள்ள கோட்டை அருங்காட்சியகம் பலராலும் அறியப்படாமலே இருக்கிறது...

வளம் மிகச்சிறந்து, மக்கள் தொகை நெருக்கத்தால் பொலிவிழந்த வடசென்னை... இப்போது அடுத்த கட்டத்தில் உள்ளது.... பழைய ஆலைகளும், குடோன்களும் இப்போது தங்களிடத்தில் இருக்கும் நிலத்தின் அருமையை உணர்ந்து, குடியிருப்பு பகுதிகளாக மாறி கொண்டு வருகிறது.... பின்னர் வளர்ச்சி அடைந்த இடங்களான பெரம்பூர் முதல் கொரட்டுர் வரையிலான பகுதி ஓரளவிற்கு முறையான வளர்ச்சியின் அடிப்படையில் உள்ளது... எதிர்வரும் ஆண்டுகளில் வடசென்னை மீண்டும் முழு வளம் அடையும் என நம்பிக்கை உண்டு....

நிறைய எழுத நினைத்து, நிறைவில்லாமல் எழுதிவிட்டேன்... மீண்டும் அடுத்த வாரம் மத்திய சென்னையை பார்வையிடலாம்... பின்னூட்ட சூறாவளிகளே... சென்னையின் நினைவில் கும்மி தொடர அழைக்கிறேன்...

Wednesday, November 26, 2008

சுவையார்வம்!

என்னையும் ஒரு இணைய எலக்கியவாதியா நினைச்சு தொடர் விளையாட்டுக்கெல்லாம் அன்போட கூப்ட விக்கி அண்ணாச்சிக்கு (விக்கி... நான் அப்படியெல்லாம் நினைக்கலன்னு பின்னூட்டத்துல போடாதீங்க) நன்றி....


1)முதன் முதலில் எப்போது பத்திரிக்கையை(நாளிகை) படிக்க தொடங்கினீர்கள்?

நினைவில் இருப்பது, அம்புலிமாமா, கோகுலம் மற்றும் Twinkle தான்... ஆரம்ப பள்ளி காலங்களில் இருந்தே (4 அல்லது 5ஆவது வகுப்பு முதல்) சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவநேய பாவாணர் நூலகத்தில் விடுமுறை நாட்கள் செலவிடப்படும். அங்கு சில ஆண்டுகள் சிறுவர் நூலகத்திலும், பல ஆண்டுகள் சிறுகதை, நாவல், நவீனம் பகுதியிலும் முழு நாளையும் செலவாக்கும் கட்டாயத்திற்கு உட்பட்டேன் ;)) ... என்னுடைய தந்தையார் அதே கட்டிடத்தில் மேல் தளத்தில் உள்ள அலுவலகத்தில் பணியாற்றிய ஒன்றுதான் காரணம்... பின்னாளில் அதே அலுவலகத்தின் பின்னால் இருக்கும் British Council Library கொஞ்சம் படிக்க வைத்தது
ஆனால் இன்றைக்கும் கூட, நக்கீரன் அல்லது குமுதம் படிப்பதை விட கோகுலம் படித்தால் நலன் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து...

2)அறிமுகமான முதல் புத்தகம்

திருக்குறளும், திருவாசகமும், வீட்டில் கட்டாய பாடமாக்கப்பட்டது... அவைதான், குறிப்பாக திருக்குறள்தான் முதல் அறிமுகம் என நினைக்கிறேன்….. அதை தவிர்த்து முதலில் புரிந்து, உணர்ந்து அனுபவித்த புத்தகமாக நினைவில் இருப்பது, “புலவர் மகன்”, பூவண்ணன் எழுதியது என நினைக்கிறேன்.. அதே போல அறிவியல் புனைவு கதைகளாக மிட்டாய் பாப்பா.... முதல் துவங்கி முல்லா கதைகள், பீர்பால், புத்த ஜாதக கதைகள், மரியாதை இராமன், சிறுவர் கதைகள் என ரொம்ப காலத்துக்கு ச்ச்சின்ன புள்ள தனமாவே என்னுடைய புத்தக ஆர்வம் இருந்தது (கல்லூரி காலத்தில் கூட கோகுலம் படிப்பேன் ... ;))

நியூ சென்சுரி புக் ஹவுஸ் என சாலையெங்கும் புத்தக கடைகளை பார்த்த காலமும் உண்டு... ருஷ்ய மொழியாக்கள் நிறைய படிக்கும் வாய்ப்புக்கள் கிடைத்தது... தி மாபின் சிபிரியாக் தன் மகளுக்கு சொன்ன கதைகள் என்னும் சிறுகதை தொகுப்பு இன்னும் மனதில் உள்ளது...

கோகுலம், அம்புலிமாமா, சிறுவர் மலர், Twinkle, கல்கண்டு, மஞ்சரி, கல்கி, குமுதம், விகடன், ஜூ.வி. வார மலர், வள்ளுவர் வழி, முகம், சித்தாந்தம், இராம கிருஷ்ண விஜயம், Divine Life, இந்தியா டுடே, competition success review, Sputnik, Readers digest, National geographic collection, என வேறுபாடே இல்லாமல் அனைத்தையும் ஆர்வத்துடன் நுனிப்புல் மேய்வேன்...

கொஞ்சமாக தமிழ் இலக்கியங்கள் (சிலப்பதிகாரமும், மணிமேகலையும், திருமுருகாற்றுப்படையும், கம்பராமாயணமும் ஸ்பெஷல்)... மற்றும் மு.வ எழுதிய புத்தகங்கள், விவேகானந்தரின் தொகுப்பாகிய ஞான தீபம், கண்ணதாசன் அவர்களின் புத்தகங்கள், என நிறைய மேய்ந்திருக்கிறேன்... வீட்டில் அன்னை நூலகம் என என்னுடைய தந்தையார் ஒரு மினி-புத்தக நிலையத்தை வைத்து, படிப்பதை ஊக்கப்படுத்தியதாலேயே... இத்தனை அறிமுகங்களும் கிடைத்தது...


3)பள்ளியில் கதை படித்து மாட்டிய அனுபவம்?
பள்ளியில் தமிழ் பாடங்களை உரக்க படிக்கும் வேலை அவ்வப்போது எனக்கு அளிக்கப்படும்... புத்தகத்தை தலைகீழாக வைத்து படிப்போம். (ஃபிலிம் காட்டுறதுதான்...) தமிழ் ஆசிரியர் புன்னகைப்பார்.. ஆனால் திட்டியதில்லை.... பி.கு கல்லூரியில் வகுப்பில் தூங்கி மாட்டியதும், எம்.பி.ஏ Operations Research வகுப்பில் டிக் டேக் டோ விலையாடி மாட்டியதும் என்னுடைய சரித்திரத்தில் சாகச கோடுகள்.. ;)
ரொம்ப்பப்பப பயந்த சுபாவம்ங்கோ...

4)நாவல்கள் படிக்கும் பழக்கம் உண்டா?
படிக்கும் பழக்கம் இருந்தது... க.பி படிப்பெல்லாம் மூட்டை கட்டி வெச்சாச்சு...
பி.கு... எங்க வீட்டு தங்கமணி என்னோட ப்ளாக் எல்லாம் படிக்க மாட்டாங்க ;))

Tuesday, November 18, 2008

விட்றா விட்றா... சூ னா பா னா

மதிப்பிற்குரிய தமிழா!
தமிழினத்தில் பிறந்த தவறாலேயே
தவறாமல் நீ ஏசப்படுகிறாய்,

இங்கு மட்டுமே, ஜாதி எதிர்ப்பாளர்கள்,
ஜாதியை பேசி பழிதீர்ப்பார்கள்,
நீ எந்த குலத்தை சேர்ந்தவனானாலும்
ஏசப்படுவது உறுதி

இங்கு மட்டுமே, ஐ. டி துறையா அறிவிலி என
செய்யும் தொழிலால் கூட வேற்றுமை பார்ப்பார்கள்
நீ எந்த தொழில் செய்துவந்தாலும்,
இகழப்படுவது உறுதி

அறிவியல் ஆகினும், ஆன்மீகம் ஆயினும்,
புரிதல் இன்றியே பிதற்றி பழிப்பார்கள்,
நீ ஆன்மீகத்தில் இருந்தாலும், அன்பு நிலையில் இருந்தாலும்,
மனிதபண்புகளை மட்டும் மதிக்க கற்றிருந்தாலும்
பழிக்க ஒரு கூட்டம் வழி மீது காத்திருக்கும்

சமூகத்தில் சிரித்து பழகுவாயா? சிந்தனையில் உணர்ந்திடுவாயா?
பொறுப்பற்றவன் என்றோ, பைத்தியம் என்றோ,
சந்தி முனையில் ஒரு கூட்டம் கட்டாயம் கருத்துரைக்கும்

ஆண் பெண்ணிடமோ, பெண் ஒருத்தி ஆணிடமோ,
அதை தவிற வேறோன்றும் செய்ய முடியாது,
என அறுதியிட்டு அறிந்து வைத்துள்ள ஒரு சமூகம்.
திரையில் காதல் என்றால், திகட்ட விசிலடித்து,
நண்பன் நட்பை கூட கொச்சையாய் பேசிடும்.

இங்கு சமூக வாழ்க்கை என்பது,
அடுத்தவர் பற்றிய கருத்துக்கள்,
தனி நபர் கருத்து சுதந்திரம் என்பது,
நாகாரீகம் தாண்டிய உரிமை

ஊடகங்கள் ஒவ்வொன்றிலும்,
உதவாத தகவல்கள்,
இன்னும் நிறைய...
எனக்கும் குறை காண்பது எளிதாகவே உள்ளது

எல்லா சமூகத்திலும் நன்றும் தீமையும்,
எப்போதும் கலந்திருக்கும் இது நீதி என்றாலும்,

ஈழத்தில் படுகொலையா... முதுகெலும்பில்லாத தமிழா
சட்ட கல்லூரி தாக்குதலா.... அறிவில்லாத தமிழா...
மின்சார வெட்டா... மூளையில்லாத தமிழா..
அடுத்த ஆட்சிக்கு யார் வந்தாலும்,... ஆண்மையில்லாத தமிழா

வசவுகளை கேட்பது வாடிக்கையாகிவிட்டது.

இதற்கான தீர்வு என்னிடம் இல்லை...
ஆனால் நம்பிக்கை உள்ளது,
பத்து பதினைந்து ஆண்டுகள் கழித்து,
இது பழகிபோய்விடும் என்று...

Friday, October 31, 2008

ஹாலோவீன்

இன்று ஹாலோவீன்.......

இயந்திர மனிதனாகவும்,
கடல் கொள்ளயனை போலவும்,
பேய்களை போலவும்,
பறவைகள் போலவும்,

பலவகை ஆடை உடுத்தி,
அலுவலகம் முழுவதும் புன்னகை வெள்ளம்....

ரீட் இச்சிக்கி (எனது அலுவலக நண்பர்)
ஒட்டு மீசை ஒட்டி,
பயங்கரமாய் இருக்கிறதா என சிரிக்க.....

இயல்பான என் கட்டை மீசை,
உனக்கென்னடா கெட் அப்பே வேண்டாம்
என நகைக்கிறது...

Sunday, October 26, 2008

டப்பாசா பட்டாசா?

அங்கே தீபாவளி... இங்கே ஞாயிற்றுகிழமை...Laundry, Housekeeping எல்லாம் முடிச்சாச்சு...கொசுவத்தி மேட்டரே கன்ட்ரோல் பண்ணவே முடில..... எவ்வளவு நேரம்தான் நானும் கொசுவத்தி சுத்தமுடியும்.. அதுதான் கிறுக்கி தள்ளிடுவோம்னு ;)

காலை 4 மணிக்கெல்லாம் அப்பா எழுப்பி விடுவார்... முதலில் யார் பட்டாசு கொளுத்துவது என்ற ஒரு குஷி... நமக்கு முன்னாடி யாராவது கட்டாயம் எழுந்து ஒரு லக்ஷ்மி வெடியோ அல்லது ஒரு பாமையோ வெடித்து வெறுப்பேற்றுவான்... நாங்களும் எழுந்தவுடன், நமக்கு தரப்பட்டுள்ள மிளகாய் பட்டாசு இரண்டை, பூஜை அறையில் இருக்கும் ஊதுவத்தியை வைத்து கொளுத்தி நாங்களும் வெடிச்சோம்ல என அறிவிப்போம்.

அடுத்து எண்ணைக்குளியல் ;) வீட்டிலேயே Boiler ஒன்று இருக்கும்...தேங்காய் ஓடு, தென்னை நார், காய்ந்த விறகுகள் எல்லாம் சேர்ந்த ஒரு Fire Tube Boiler (fire inside the tube surrounded by water) அதற்குள்ளே கொஞ்சம் உப்பை போடுவது, தேங்காய் ஓடு எரியும் போது கேட்கும் உஸ் சத்தம் இதிலேயே ஒரு மணி நேரம் ஊறி விடுவோம்... சீயக்காய், புங்கங்கொட்டை எல்லாம் சேர்த்து அரைக்கப்பட்டு (நிஜமா... மீரா ஹெர்பல் எல்லாம் இல்லை) அதில் சாதம் வடித்த நீரை சேர்த்து தலையில் தேய் தேய் என தேய்ப்பார்கள்... யப்பா .. இந்த எண்ணை தேய்த்து குளிக்கும் பழக்கத்தை வெறுப்பதன் ஒரே காரணம் இந்த ஒரு மேட்டர்தான்... தலைமுடியெல்லாம் வலிக்கும்... விடமாட்டாங்க.. ;) அது முடிந்ததும் ஒரு குட்டி வழிபாடு... சாப்பாடு.. அப்புறம் டைம் ஓடிடும்...

அப்போது வீட்டில் பொட்டி (கம்யூட்டர் இல்லங்க.. டி.வி. கூட) இருந்ததாக நினைவில்லை. தீபாவளி அன்று பேரளவில் சில பட்டாசு வகைகள் கிடைக்கும்... சில சுறுசுறுவத்திகளை சுற்றி சுற்றி பற்றவைத்தும், மிளகாய் பட்டாசை கொளுத்திப்போட்டும் தீபாவளி ஓடிப்போய்விடும்..

அன்றைய மாலையில், புதுப்பானையில் பாகு வெல்லம் காய்ச்சி, அதிரசம், அது மட்டுமல்லாமல், முறுக்கு, பணியாரம், அப்பம் அனைத்திற்கான foundation வேலைகளும் நடக்கும்.

அந்த அதிரசம் தட்டும் வேலை இருக்கிறதே... யப்பா... நினைவிருக்கும் கடந்த ஆண்டுகளில், முதலில் தட்டும் போது கொஞ்சம் சுலபமாக இருக்கும்.. போக போக கட்டியாகிவிடும். விரல் வலிக்கும்... அதில் தண்ணிர் அல்லது எண்ணை சேர்த்தால் பிரிந்துவிடுமாம்.. . முதலில் நான்கைந்து பேர்கள் சேர்ந்து தட்ட துவங்குவார்கள்... கடைசியில் பார்த்தால், பெரும்பாலும் 2 அல்லது 3 பேர் இருந்தால் அதிகம்.. .

இரண்டு அண்டா (அதாவது பெரிய பாத்திரம்) சில பல தூக்குகளை (அது மீடியம் சைஸ் பாத்திரம் ... தொங்க ஏதுவாக ஒரு பெரிய Handle இருக்கும்) அனைத்தையும் இந்த பலகாரங்களை கொண்டு நிறைத்த பின்னர் ஒரு 10 அல்லது 11 மணி அளவில் தூக்கம்....

பூவிருந்தவல்லி (அதாங்க பூந்தமல்லி) தாத்தா வீட்டில் இருந்த வரை... தீபாவளி விட நோன்பு பண்டிகைதான் சிறப்பு... ஒரு காலத்தில் பண்டிகையின் போது ஒன்றாக சேரும் குடும்பத்தினர் எண்ணிக்கை ... நூறு பேர் வரை போனதாக நினைவுண்டு..... காலை ஒவ்வொருவரா வரத்தொடங்க... சமையல் கட்டில் அம்மா தலைமையில், வடை குழம்பு, மோர் குழம்பு, உருளைகிழங்கு பொரியல் உட்பட்ட பல சாப்பாட்டு ஐட்டங்கள் அமைதியாக தயாராகும்

அத்தனை பேருக்கும் சிற்றுண்டி முடிந்தவுடன், சேர்ந்து வழிபாடு நடக்கும். எப்போதும் போல அப்பாவும், பெரியத்தையும், புதுபுது பதிகமாக பாடி வழிபாட்டை பெரிதாக்க, சிறியவர்கள் எல்லாம் எப்போது வழிபாடு முடியும் என மானசீகமாக வேண்டி வழிபாடு முடியும்போது கடவுள் கருணை காட்டிய பெருமையை எண்ணி, பூரிப்போம்.

அது முடிந்தவுடன் சாப்பாட்டு பந்தி, பந்திக்காகவே ஓலைப்பாய்கள் சில இருக்கும். அது போதாதென்று, Bed Spread சிலவற்றை மடித்து, விருந்தினர் அமர, சாப்பாட்டு விழா தொடங்கும். ஸ்பெஷல் ஐடங்களான குழம்பு வடை, தயிர் வடை, அப்பம் பரிமாறுவது குஜால்ஸ்...

உறவினர்களுக்கு கொடுத்தனுப்ப ஏற்கனவே வாழையிலையிலும் பத்திரிக்கை தாளிலும் பார்சல் செய்யப்பட்டு இருக்கும், அது இல்லாமல், வீட்டிற்கென சில பெரிய பாத்திரங்களில் இன்வென்டரி கன்ட்ரோல் செய்யப்பட்டு இருக்கும்.

எங்கள் சிறிய அத்தை குடும்பத்தினர் ஒவ்வொரு முறையும் ஒரு 1000 சர வெடியை கொண்டு வருவார்கள்... அதோடு சேர்த்து நாமும் நம்முடைய மிளகாய் வெடியின் திரியை கிள்ளி 5 அல்லது 6 வெடிகளை ஒன்றாக சேர்த்து மினி சர வெடியெல்லாம் வெடிப்போம்... நிறைய பட்டாசு வெடிக்க வேண்டும் என எப்போதும் ஆசையாக இருக்கும்... அப்பாவிடம் கேட்டால், காசை கரியாக்காதீங்க.. என்ற பதில் பல ஆண்டு தீபாவளியும் கேட்டிருக்கும்... பள்ளி நாட்கள் முடியும் போதே பட்டாசு மேலிருந்த ஆர்வமும் குறைந்து விட்டது... ஆனால், சென்னை வந்த பிறகு, தீபாவளி அன்று இரவு, மொட்டை மாடியின் மேலே, அல்லது தண்ணீர் தொட்டியின் மேலே படுத்துக்கொண்டு வான வேடிக்கைகளை வேடிக்கை பார்ப்பது, ஒரு அழகான அனுபவம்..

டாலஸில் இருக்கும் போது, அமெரிக்க சுதந்திர நாளின் போது வான வேடிக்கை (அதாவது நிஜமான வானவேடிக்கை) முதல் முறையாக நேரில் பார்த்தேன்... சும்மா கலக்கல்... 20 நிமிடங்களுக்கு தொடர்ந்து வானத்தில் வண்ணக்கோலங்கள்... அதுவாவது பராவாயில்லை... இப்போ ஹவாயில். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையின் போதும், 10 அல்லது 15 நிமிடங்கள் வானவேடிக்கை.. என்னுடைய அபார்ட்மென்ட் லனாய் (balcony in hawaiian) இல் இருந்தே அழகாக தெரியும்... முதலில் 2 வாரங்கள் வேடிக்கை பார்த்தேன்... இப்போது வெடி சத்தம் கேட்டாலும் .. .அட போடா.. என அசையாமல் இருக்கிறேன்...

ஆனால், மனதிற்கு, 10 ரூபாய் கிடைத்தவுடன் பக்கத்து கடைக்கு சென்று ஏதாவது ஒரு பட்டாசை வாங்கி, எங்கள் வீட்டின் எதிரே அதிக பட்டாசு குப்பை இருக்கிறது என நிரூபித்த காலமே சுகமாக இருக்கிறது...


உறவுகள் கூடவும், உள்ளம் களிக்கவும், உள்ளது சிறக்கவும், உவகை பெறுகவும்... அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

Tuesday, October 21, 2008

ஈழம் குறித்து....

கவிதை போட்டி.... இளநிலை கல்வி மூன்றாம் ஆண்டில் நானும் பெயர் கொடுத்தேன்... ஈழத்தமிழகம்; சுதந்திர இந்தியா இந்த இரண்டு தலைப்புகளையும் தந்திருந்தார்கள்... கிறுக்கல்கள் தொடர்ந்தது..

இரண்டு முழு பக்கங்களுக்கு கிறுக்கி தள்ளினேன்..... நினைவில் இருந்தது இதுதான்.....

இந்தியாவின் காஷ்மீரை தனியே கேட்டால்,
இன்முகத்தோடு நாம் எடுத்து தருவோமா?
இலங்கையும் குடியாட்சி நாடே
இதில் தமிழர்க்கும் பிறருக்கும் ஏன் வேறுபாடே

ஒரு நாட்டு சோதரராய் வாழ்ந்தால்,
பிற வேற்றுமை யாவும் தீயில் எறிந்தால்,
திரு செய்யும் தமிழர்கள் தெருவில் வீழமாட்டார்
அந்நியராய் பிற நாட்டில் அவதியுற மாட்டார்.

கரு..... தமிழர்கள் அமைதி உடன்பாடு மேற்கொண்டு, ஆயுத போரை கைவிட்டு, சமரசமாக வாழ வேண்டும் என்பதே..... மற்ற வரிகள் நினைவில் இல்லை.....

கவிதை போட்டியன்று, உரத்த குரலில், ஒழுங்கான உச்சரிப்பில், கவி படித்து முடித்தேன்.... என்னுடைய வகுப்பறை மாணவர்கள் உரத்த கையோசை எழுப்பினர்.... நல்லா இருந்ததா? ... ஒன்னும் புரியல, ஆனா தமிழ்ல அழகா படிச்ச என்று புகழாரம் சூட்டினான் என் நண்பன்....

என்னுடைய சீனியர்.... சுதந்திர இந்தியா என்ற தலைப்பில் ஒரு கவி எழுதினார்....

இங்கு மட்டுமே கோட்டைக்கு கோடம்பாக்கம்
குறுக்கு வழியாகிறது...
இங்கு இளைஞர்களின் ஏக்கம்,
சிம்ரனின் இடுப்பளவிலேயே இருக்கிறது...

இன்னும் நிறைய... நினைவில் நின்றது சிம்ரனின் இடைதான் ;) அவரது ஏக்கம் சினிமாவிற்கு அளவுக்கதிமாக தரப்படும் ஊடக மதிப்பீடுகளும், அதனால் ஏற்படும் கவனச்சிதறல்களும்......

அன்று அவர் முதல் பரிசையும், நான் இரண்டாம் பரிசையும் பெற்றோம்.... போட்டிகள் முடிந்து, வெளியே வரும் போது, ஒரு நண்பர் வந்தார்... நடராசன், கவிதை எல்லாம் நல்லா பாடினீங்க.... அங்க நடக்கிற உண்மை நிலை உங்களுக்கு தெரியுமா என்று கேட்டார்.... . இல்லைங்க.. செய்திகளின் வாயிலாக தெரிந்தது மட்டுமே என பதில் உரைத்தேன்.... (இந்து நாளிதழ் மட்டுமே என்னுடைய வெளி உலக ஞானம்).. …. தன்னுடைய அத்தை மகனை, கைக்குழந்தையை ஈழத்தமிழர்களுக்கு எதிரானவர்கள் கொதிக்கும் தார் உருளையில் முழுகடித்து கொன்றதாக அவர் என்னிடம் கூறினார்.... இத்தனை கொடுமையா? என்னால் எதுவும் பேச முடியவில்லை.... I am Sorry என்ற வார்த்தையை உரைத்து, அமைதியில் நேரத்தில் கரைத்தேன்....

பல வருடங்கள் கழித்து, இலங்கை இன பிரச்சினையே விக்கிப்பீடியா, ப்ளாகுகள், மற்றும் இணையத்தின் வழியாகவே உணர்ந்து இருக்கிறேன்....

கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் “விடை கொடு எங்கள் நாடே” என்னும் பாடலை கேட்கும் போது, கண்ணீர் கன்னத்தில் முத்தம் கொடுக்கும்... எத்தனை வலி....

சிறுபிள்ளைதனமாக முன்பெல்லாம் நிறைய கேள்விகள் எழும்... தமிழர்கள் அரசாட்சியில் போட்டியிட்டு பங்கேற்கலாமே! அவர்கள் இந்தியாவில் தமிழகம் இயங்குவதை போன்று ஒரு ஆட்சியை நிறுவலாமே! எதற்காக ஆயுத தாக்குதலை மேற்கொள்கிறார்கள்.. என்றெல்லாம்...
அடக்குமுறை என்பதும், அதிகார வன்முறை என்பதும், அரசியல் சூது என்பதும் அதிகப்படியாக நடக்கும் நிலையில் வேறு வழியேதும் இல்லாமலே அவர்கள் ஆயுத போரை எடுத்துக்கொண்டார்கள் என்பது ஊடகமாக புரிந்தது....

வவுனியா, வல்வெட்டித்துறை, நெடுந்தீவு போன்ற இடங்களில் இருந்து பலரும் வெளிநாடுகளுக்கு அகதிகளாக விண்ணப்பிக்க, தமிழில் இருக்கும் பிறப்பு சான்றிதழ்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் வாய்ப்பு கிடைத்தது. மொழி பெயர்ப்பின் போதே மனம் நெகிழும்..... பிறந்து வளர்ந்த இடத்தை விட்டு, மற்றொரு இடத்திற்கு குடி பெயர்வது எவ்வளவு பாரமான ஒரு செயல் என்பதை நான் பல முறை உணர்ந்ததுண்டு..... இந்த நண்பர்களுக்கோ வாழ நினைத்தாலும் வேறிடம் செல்ல வேண்டிய கட்டாயம்.... செல்லும் இடத்தில் அகதி என்ற நிலை... இந்தியவோ, நெதர்லாந்தோ ... அவர்கள் வாழ்க்கை தரம் பூர்வீக நாட்டில் இருப்பது போல் இருக்காது என்பது உறுதி....

எல்லாரும் ஒரு காலத்தில் வேறு ஒரு இடத்தில் இருந்து குடிபெயர்ந்தவர்கள் தானே? ஒவ்வொரு சமவெளியும் ஒரு காலத்தில் கொழுந்து விட்டெரியும் எரிமலையாகத்தானே இருந்தது....


தமிழர்கள் என்ற நிலை மட்டுமல்ல. மனித நேயம் என்ற நிலைப்பாட்டிலேயே, எங்கும் யாரும் வாழும் உரிமை வேண்டும். ஆனால், நம் நாட்டிலேயே மகாராஷ்டிரத்திலும், கர்நாடகாவிலும், ஒரிசாவிலும், நடக்கும் நிகழ்வுகளை பார்க்கும் போது, இலங்கை மட்டுமல்ல, இந்தியாவிலும், மனிதத்துவத்தை மதிக்கும் குணம் முழுமையாக இருப்பதாக தெரியவில்லை. .

நம்மால் முடிந்தது..வாய்ப்பு கிடைத்தால், உரியவருக்கு உதவிடலாம்... . பிள்ளைகளுக்கும், சிறுவர்களுக்கும் பேச்சுவாக்கில் வேறுபாடு இல்லாமல் பழகுவதை குறித்த சிந்தனைகளை விளைவிக்கலாம்.... பிற கலாச்சாரங்களின் சிறப்பையும், வேற்றுமையில் ஒற்றுமையையும் விளைவிக்கலாம்... அமைதி திரும்பும், மனித நேயம் மலரும் என்றும் காத்திருப்போம்... இலங்கையில் மட்டுமல்ல... இந்தியாவிலும்... உலகெங்கிலும்... காலம் கனியட்டும்.. விரைவில்.

Tuesday, October 7, 2008

உயிர் வளர்க்கும் கனவுகள்

இரவும் அல்லாத பகலும் அல்லாத,
உறக்கம் முடியாத, விழிப்பு துவங்காத
இன்றைய அதிகாலை, இனிமையாய் துவங்கியது
உன்முகம் நினைவினில்,
கனவு நிலையா? விழிப்பு நிலையா
என பிரித்தரிய முடியாத நிலையினில்,
ஒன்று மட்டும் புரிந்தது
உயிருக்கு உவகை பாய்ச்சும் உரம்
உணர்வுக்கு மட்டுமே உள்ளது....
அந்த உணர்வு,
உன் நினைவினில் மட்டுமே உயிர்க்கிறது..

Wednesday, October 1, 2008

பயன் மறந்த பயிர்கள்!

ஏழெட்டு வகுப்பு வரை,
எப்போதும் மாறாமல்,
இரண்டு மலை,
ஒரு சூரியன்,
ஒரு படகோட்டி,
ஒரு தென்னை மரம்,
ஒரு குடிசை வீடு,
நான்கு பறவைகள்...
எத்தனை முறை வரைந்தாலும்,
நல்லாத்தான் இருக்கு என்று விதைத்த
நம்பிக்கை விதைகள்....

கோபமும் அறியாமையும்
கொள்கையாய் ஊறாமல்,
மிகுதிக்கண் இடித்து,
களை பறித்த கண்டிப்பு,

ஒழுக்கம் என்ற பெயரில்,
ஒழுங்கான நலம் வாழ
அடக்குமுறை பாணியில்,
ஆட்கொண்ட வேலிகள்....

ஈதல் அறம்,
திறன்றிந்து தீதின்றி ஈட்டல் பொருள்,
என பேச்சு வழக்கிலேயே
நல்லுணர்வு நண்ணீர்

பயிர் வளர்ந்தது,
பயன் முழுதும்.... பயிருக்கே!

இன்று ஆணி ஏதுமில்லை

எனக்கு பிடித்தது....................
இயற்கை, கவிதை,
இயல்பின் புன்னகை,
மற்றும் உனக்கு பிடித்த அத்தனையும்



வான்வெளி விஞ்ஞானிகள்
வருத்தத்திற்குறியவர்கள்..
வெண்ணிலவு விண்ணில் இருக்குமென
கலன் ஏறி பயணிக்கிறார்கள்.
அவர்கள் அறியமாட்டார்கள்..
கண்ணில் நிலவேற்றிய பெண்களை



கவிதை எழுதிய
சட்டை வாங்கத்தான் கடை சென்றேன்..
உன் பெயர் தெரியாததால்
சரியான கவிதையை தேர்ந்தெடுக்க முடியவில்லை..



நீ அழகா இருக்கேன்னு நினைக்கல
அது உண்மைதானே...
அதை விட சிறப்பான வார்த்தையை தேடிக்கொண்டிருக்கிறேன்...



நான் உன்னை பார்த்திருக்கும் போதே,
எனக்கு கோபமும் வருகிறது...
இமை மூடும் சிறு கணங்கள் ..
எனக்கு பிடிக்கவில்லை...

Tuesday, September 30, 2008

அந்த நாள் ஞாபகம்

மெல்லிய மழை... மேகத்தின் ஊடே வெயில்,
தெள்ளிய நீர்நிலை... சிலிர்க்க தென்றல்,
வேகமாய் பயணத்தில் முகம் எதிர்க்கும் காற்று,
மட்டவிழ்ந்த மலர்கள், பறவைகளின் பாட்டு,

வட்ட முழுநிலா, வண்ணங்களில் மேகம்,
நெட்டயெழும் மரங்கள், நீலத்தில் வெறும் வானம்,
கிட்டே வந்து திரும்பியோடும் வெள்ளை நுரை கடலலைகள்
நட்ட நடு நசியில் கண் சிமிட்டும் தாரகைகள்...

எத்தனை முறையேனும் நான்
எண்ணியெண்ணி பார்த்தாலும்,
முத்தான உன் புன்னகைக்கு,
ஒப்புமையாய் ஏதுமில்லை..

டபுள் மீனிங்....

இருப்பது போல் இருந்தாலும்,
இல்லையோ என ஐயம் தரும்
மறுப்பது போல் முயன்றாலும்,
இருக்கிறதென ஐயம் தரும்

நினைவில் தரும் உவகை
நித்தம் நினைக்க தவிக்கும்,
வினை மாற, கவலை
பித்தம் பிடிக்க வைக்கும்.

அறிதலும், புரிதலும்,
அருகிலும் வாய்க்காமல்,
அறிவினால் சிந்தித்தால்,
அபத்தாமாய் சிரிக்கவைக்கும்...

புரியாது என்றாலும்,
புவி முழுதும் ஈர்க்கவைக்கும்,
காதலும் கடவுளும்,
கவி எழுத வைத்திடும்.

Thursday, September 25, 2008

2008 முடிய இன்னும் எத்தனை ஆண்டுகளாகும்!

அவன் பேச்சும், புன்னகையும்,
மென் விரல்கள் தீண்டுதலும்,
நெற்றியில் முட்டுவதும்,
ஈரமுத்தம் வார்ப்பதிலும்...

ஹை ஃபெவ் அடித்து,
ஹக் செய்த காலங்களும்.
ஐஸ் க்ரீமும், இனிப்புகளும்,
உன் கண்ணில் காட்டும் உவகையும்,

என்னை போல நடனம் ஆடி,
இயல்பில் சிரிக்கும் சிரிப்பையும்,
உன்னை பிரிந்து வெளியே சென்றால்
உடன் நான் வரவா என்ற குழைவும்

இன்னும் மூன்று மாதங்கள்...
மிகத்தொலைவில் இருக்கிறது...

காலம் என்றுமே இப்படித்தான்
நீடிக்க விரும்பும் போது,
நிமிடமாய் நெகிழ்விக்கும்....
விரைவாய் விரும்பும் போது
மெதுவாய் பயணிக்கும்.

Wednesday, September 10, 2008

ஒவ்வொரு விநாடியும்

எதற்கென புரியாமல்,
ஏனென்ற தெளிவில்லாமல்,
ஏதோ ஒன்றை நோக்கி,
எழுகின்றேன்... விழுகின்றேன்...

வீட்டுக்கடன், வரவு செலவு,
வருமான வரி, வராத கடன்,
காசோலை, போன வழி வந்ததால்,
தேவையில்லாமல் அழிந்த ரூபாய் ஆயிரம்.
வணிக சந்தை எப்போது உயரும்,
விட்ட பணத்தை எடுக்க வேண்டும்.
நான் முதலீடு செய்யும் போது மட்டும்,
ஏன் பொருளாதாரம் நடுங்க வேண்டும்?..

காலிங் கார்டு செலவு மட்டும் மாதம் 40 டாலரா?
காபி குடித்த செலவு மட்டும் 50 டாலரா?
வால்மார்ட்டில் வாங்கலாமா? சாம்ஸில் வாங்கலாமா?
44 களில் பணம் இருக்குமா? இன்னும் உயருமா?

எதிர்பார்த்த லாபம் இல்லாததால்
சம்பள உயர்வு குறைவாகத்தான் இருக்குமாம்....
என்னுடைய உழைப்பிற்கு மணி நேரத்திற்கு 70 டாலர் வாங்கி கொண்டுதானே இருக்கிறார்கள்!

சென்னைக்கு செல்ல வேண்டும்..
இட்லி சாம்பார் சாப்பிட்டு எத்தனை மாதங்கள் ஆனது,
வேக வைத்த பருப்பை பார்த்தால் ஏனோ கோபம் வருகிறது....
மாத வருமானம் பாதியாய் குறையுமே!
பரவாயில்லை... வேண்டாம்.....
பருப்பு வேண்டாமென்றால், பர்கர் இருக்கிறது....

செலவு கணக்கு பார்க்காத நான் சில நேரம்
சில்லரை கணக்கு பார்க்கும் போது....
ஒவ்வொரு விநாடியும் என்னை தொலைத்து....

Thursday, September 4, 2008

சைக்கிள்

ஹயர் சைக்கிள் னு ஒரு கான்சப்ட்... அதெல்லாம் அப்போ... 15 வருஷம் இருக்கும்.... 1 ரூபா கொடுத்தா ஒரு மணி நேரம்... சின்னதா அரை சைக்கிள், முக்கால் சைக்கிள் னு நிறைய வகைகள்.... அம்மா கிட்ட ரொம்ப அடம் பிடிச்சு வாரம் ஒரு மணி நேரம் சைக்கிள் மிதிப்பதில் எவ்வளவு குஜால்ஸ் அப்படிங்கறது.... அனுபவிச்சாதான் தெரியும்... ;)

சொந்தமா சைக்கிள் வேணும் னு ரொம்ப ஃபீலிங்க்ஸ் ஆகும் ... என்ன ஆறாவது இல்லன்னா ஏழாவது வகுப்பில் இருந்திருப்பேன்... அப்போ சாலிடர் னு ஒரு டி. வி. மாடல்... ரெண்டு பக்கமும் இழுத்து மூடுறா மாதிரி ஷட்டர் எல்லாம் இருக்கும் ;) பி. எஸ். ஏ ஒரு முக்கா சைக்கிள் விளம்பரம் வந்தா என்னையும் அறியாம அப்படியே கண்ணுல இருந்து கண்ணீர் வந்திடும்... இந்த ஃபீலிங்க்ஸ் எல்லாம் தாங்க முடியாம அம்மா எனக்கு சைக்கிள் ஆசிர்வாதம் அளித்தார்...

அம்மா பள்ளியில் வேலை செய்யும் முரளி அண்ணா அடையாரில் இருந்து சைக்கிளை தண்டையார்பேட்டை வீடு வரை சைக்கிளை மிதித்து எடுத்து வந்து விட்டார்... ஆர்வமாக ஓடி சென்று பார்த்தால்... பல்ப்... அது முக்கால் சைக்கிள் தான்... ஆனா லேடீஸ் சைக்கிள்...

செகண்ட் ஹாண்ட் தான்... கொஞ்ச நாள் இது ஓட்டிக்கோ... அப்புறமா பெரிய சைக்கிள் வாங்கிடலாம் னு ஒரு அட்வைஸ் வேற... கொஞ்சம் ஃபீலிங்க்ஸ் இருந்தாலும், ஏதோ சைக்கிள் கிடைத்த சந்தோஷம்....கொஞ்ச நாள்... தினசரி க்ளீனிங்.. ஆய்லிங்... வாஷிங் எல்லாம் முடிச்சு.... பாத்துக்குட்டேன்... நாங்க சைக்கிள் வெறியரா இருந்த காலம் கூட உண்டு... 40 கி. மி ஸ்பீட் ரொம்ப சாதாரணம்... நின்னுட்டே வேகமா மெதிக்கிறது, கட் அடிக்கிறது.. முன்னாடி ப்ரேக் பிடிச்சு, பின் டயரை தேய்க்கிறது, இத மாதிரி நிறைய ஸ்டன்ட் காட்டி, (நிறைய சில்லரை வாரியது வேற மாட்டர்) திட்டு வாங்கிருக்கோம்


இருந்தாலும், ஒரு கியர் வச்ச ஸ்போர்ட்ஸ் சைக்கிள் நீண்ட நாள் கனவாக மனதில் எப்போதும் இருந்தது... கடைக்கு போகும் போது, கமிஷன் 2 ரூபாய், மளிகை வாங்கி வந்தால் 5 ரூபாய், சுண்ணாம்பு அடித்தால் 100 ரூபாய், சுற்றத்தினர் வீட்டிற்கு வந்தால், வேணாம் வேணாம்னு சொல்லி வாங்கிய சில பல காந்தி தாத்தாக்கள்... எல்லாம் சேர்ந்து ஒரு 1000 ரூபாய் தேரியது....

ப்ராட்வே பக்கத்துல சைக்கிள் வாங்கிடுவாம்னு... அப்பாவை அழைத்துக்கொண்டு சைக்கிள் வாங்கப்போனோம்.... கியர் சைக்கிள் எல்லாம் வேணாம்.. பாரு டயர் சின்னதா இருக்கு.... பின்னாடி கேரியர் இல்ல... BSA Deluxe முழு சைக்கிள் வட்டமிடப்பட்டது.... பெரிய கேரியர் இருந்தா நிறைய லக்கேஜ் கட்டலாம், தெய்வமே... பெரிய கேரியரா! நல்ல வேளை... ஸ்டாக் இல்லாததால் சாதாரண கேரியர்... புது சைக்கிள் கலக்கியது.... ஒரே நாளில் பீச் ரோடு முழுக்க முடித்து , மவுண்ட் ரோடில் ரிடர்ன் வந்த நாளெல்லாம் உண்டு. வேகமாக போகும் பஸ், ஆட்டோ, எல்லாத்தையும் ரைட் ஹாண்டில் ஓவர்டேக் பண்ணி... தேவையே இல்லாமல், யாரிடமெல்லாமோ திட்டு வாங்கியதுண்டு... ப்ரேக் கட்டை மாற்றுவது, அட்ஜஸ்ட் பண்ணுவது, இதெல்லாம் பெரிய இஞ்சினியரிங் சாகசம் போல லுக் விடுவது.... அது ஒரு அழகிய சைக்கிள் காலம்... ;)

எல்லாம் நல்லாத்தான் போயிட்டிருந்தது, ஒரு நாள் நான் அடிக்கடி வரும் மலேரியாவில் காய்ச்சலாக வீட்டில் படுத்திருந்தேன்... பெல் அடித்த ஒரு நல்ல மனிதர்... உங்க அப்பா பேரு அரிஹரனா? அவருக்கு LIC ல இருந்து ஒரு செக் வந்திருக்கு, கொரியர் (courier) ஆபிஸ்க்கு வந்து வாங்கிக்கோங்க அப்படின்னு சொன்னார். வீட்டில் பொறுப்போடு (நம்புங்கையா) இருக்கும் பிள்ளையாதலால், உடனே கிளம்பி, (வீட்டில் யாரிடமும் சொல்லவில்லை - அவ்வளவு பொறுப்பு) அவரை கேரியரை அமர்த்தி சொன்ன ரைட் , லெஃப்ட் எல்லாம் எடுத்தேன்... வீட்டில் இருந்து ஒரு 2 கி. மி தள்ளி, ஒரு வீடு முன்னாடி நிறுத்தினார்... தம்பி. இங்க இருங்க... ஆபீஸ் இங்க இருக்குன்னு, உள்ளே போனார்... ஒரு 2 நிமிடம் கழித்து வெளியே வந்து, உங்க செக் மானேஜர் வெச்சிருக்காராம்.. இப்பதான் கிளம்பினாராம், சைக்கிள் குடுங்க.. நான் போய் வாங்கிட்டு வந்துடுரேன்னு, ஜீட் விட்டார்.... நானும் ரொம்ப பொறுமையா 2 மணி நேரம் அவருக்காக அந்த இடத்திலேயே காத்திருந்தேன்... அதுக்கப்புறம் ஆபீஸ்ல கேக்கலாம்னு வீட்டுக்குள்ளே போனா, ஒரு மண்ணும் இல்ல... ஒரு மாமா வந்து, என்னடா வேணும் னு சவுண்டு குடுக்க, அப்பத்தான் உலக ஞானம் வந்து, வெச்சுட்டாண்டா.. அப்படிங்கிறது புரிஞ்சுது...

போலீஸ் ஸ்டேஷன் போனா... ஒரே அட்வைஸ்... ஒரு முட்டாள் கடலில் போட்ட கல்லை, ஆயிரம் அறிவாளிகளால் கூட கண்டுபிடிக்க முடியாதுன்னு ஒரு பஞ்ச் டயலாக்... அந்த எஸ். ஐ. சொன்னது, இன்னைக்கு வரைக்கும் மறக்க முடியல... சிட்டில நிறைய பேர் ஏமாத்துவாங்க.. நீங்க தான் உஷாரா இருக்கனும்... * பஞ்ச் *... படிச்சவங்க நீங்க.. இன்ஷூர் கூட பண்ணலியா * பஞ்ச் * இப்படி நிறைய பஞ்ச் டயலாக் கேட்டு, வீடு வந்தோம்...

அப்பா வீட்டுக்கு வந்ததும் எதுவும் திட்டவில்லை.... அக்கா மட்டும் சவுண்டு கொடுத்தார்.. .என் கிட்ட கூட சொல்லாம அப்படி என்ன அவசரம்... இவனுக்கு பொறுப்பே இல்லைன்னு... ஒரு 4 வருஷம் உலகத்தை முன்னாடி பார்த்ததால என்னை ஓவராவே அடக்கி வெச்சிருந்தாங்க... ஒரு நாலு மாதம் சைக்கிள் இல்லாமல்... (அது எவ்வளவு கஷ்டம் ங்கறது அமெரிக்கா வந்து, கார் இல்லாமல் இருந்தால் தான் புரியும்)


கொஞ்ச நாள் கழித்து அப்பா ஒரு பி. எஸ் ஏ வாங்கி கொடுத்தார்... அப்புறம் சில பல பைக்கு மாறி.. இப்ப அந்த சைக்கிள் எங்கே போனதென்றே தெரியவில்லை... இன்னும் அப்பாவோட முதல் சைக்கிள் (150 ரூபாய்க்கு, முதல் மாத சம்பளத்தில் வாங்கியதாம்) பத்திரமாக ஊரில் இருக்கிறது.

Thursday, August 14, 2008

நன்றி மறப்பது நன்றன்று

சுதந்திர நாள் …… டேய் நீயெல்லாம் இத பத்தி பதிவெழுதனுமான்னு பல முறை யோசிச்சு, எழுத தொடங்குனது.......

நிறைய பதிவுகளில்.... அரசியல் சரியில்ல... வெளிநாட்டு அடிமையா வேலை செய்யும் இளைஞர்கள்.... நடிகர் நடிகைகளுக்கு முக்கியத்துவம் தரோம்.... விலைவாசி ஏறுது.... ஒலிம்பிக் ல ஒரே ஒரு தங்கம் தான் ஜெயிச்சோம்.... இத்தனை கோடி மக்கள் ஏழ்மையில் இருக்காங்க.... குண்டு வெடிச்சது... குண்டு இருந்து வெடிக்கல.. அது அரசியல் சதி... விவசாயம் குறைஞ்சிடுச்சு.... தண்ணி இல்ல... வேலைவாய்ப்பு இல்ல... க்ரிக்கெட்ல ஜெயிக்கிறாங்க, அப்புறமா தோத்துடறாங்க... . டிஸ்கோ ஆடுராங்க.. கலாச்சாரம் சீரழீது... போலீஸ் கெட்டு போச்சு.... கலர் டீ. வி. தராங்க... எம். பி எல்லாம் இலஞ்சம் வாங்குனாங்க.. என்னை கேக்காமலேயே அணு ஆயுத ஒப்பந்த்ததில கையெழுத்து போட்டுட்டாங்க.... இப்படி எல்லா குறைகளையும் பெரிய பூதக்கண்ணாடியை வெச்சு பாத்து..... கடைசியா நக்கல் பண்றா மாதிரி ஒரு பாரத மாதா வாழ்கன்னு சொல்லி....


அடுத்தவங்களுக்கு அறிவுரை கூறுமளவுக்கு நான் அறிவாளி இல்லை... ஆனா... கருத்து பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு....


இரண்டு முறை கூகிள் செய்து தெரிந்து கொண்டதையும், விக்கிபீடியாவில் படித்ததும் தான் நம்முடைய அறிவின் ஆழம்... கொஞ்சம் யோசிச்சு பாருங்க... மக்கள் தொகை... வருமானம்... திட்டத்தேவைகள்... எதிர்கால தேவைகள் குறித்த திட்டங்கள்.... நாட்டை நிர்வாகம் செய்வது கிள்ளுக்கீரையா? அவ்வளவு வேண்டாம்..... ஒரு நூறு பேர் இருக்கும் குழுவை மேலாண்மை செய்வதில் எவ்வளவு சிக்கல் இருக்கும் என்பது அங்கு இருந்து பார்த்தால் தான் தெரியும்...

நுகரும் நலன்களை எல்லாம் ஒவ்வொன்றாக எண்ணிப்பாருங்கள்... . காலை வீட்டுக்கு வரும் பால், பேப்பர் முதல், இரவு விழித்து பார்க்கும் தொலைகாட்சி நிகழ்ச்சி வரை... இந்த சுதந்திர நாட்டின் பங்களிப்பு இல்லாமல் ஏதேனும் ஒரு விஷயம் இருக்கிறதா?

உங்களுக்காக உங்களை சுற்றி வரும் வளர்ச்சிகளை கொஞ்சம் கவனித்து பாருங்கள்.... நம்முடைய அடிப்படை சுகாதாரத்தில் இருந்து, அறிவியல் தாகம் வரை... அனைத்தையும் பூர்த்தி செய்து.... அதற்கு மேலாக.... அறிவாளித்தனமான நம்முடைய கருத்து சுதந்திரத்தையும் அளித்துள்ள நாட்டிற்கு... பெருசா எதுவும் செய்யலனா கூட பரவாயில்ல... குறை சொல்லாதீங்க... ப்ளீஸ்....

நன்றி மறப்பது நன்றன்று.....

Friday, August 8, 2008

விமான எண் 0001

வடிவேலு டைரக்டர், உண்மை நிகழ்ச்சி தான்... வசனம் மட்டும் தான் மாற்றம்... ஆனா சேம் ப்ளட்.... அது போன வருஷம்...

இந்த வருஷம்... நிஜமாவே கைப்புள்ள ரேஞ்சுல தான் வேல.... இப்பதான் 10 மணி ஆகுது... நோ வேலை.. Business Analystன்னா சும்மாவா? இன்னும் எப்படியாவது ஒரு 6 மணி நேரம் ஓட்டனும்... மக்களே அவ்வளவு கேவலமா நினைக்காதீங்க... அதாவது, Planning, Requirement, Design அப்பல்லாம் நிறைய ஆணி இருக்கும்... இப்ப Testing Phase அதனால வேலை கம்மி.... அது இல்லாம Organizational Activities ன்ற பேருல கொஞ்சம் ஆஃபிசர் வேலையெல்லாம் பாக்க சொல்றாங்க....

என்னோட கன்சல்டன்ட் கம்பெனி இந்த விமான கம்பெனியோட Flight Control System ப்ராஜக்ட் அபேஸ் பன்னா எப்படி இறு(ரு)க்கும் னு நேத்து Lunch Meetingல மொக்கை போட்டத.... பகிர்ந்து கொள்ள

ஹவாயில் இருந்து புறப்படும் விமான எண் 0001 கால தாமதமாக புறப்படுகிறது... சில தொழில் நுட்ப சிக்கல் காரணமாக இந்த விமானம் 3 மணி நேரம் தாமதமாக புறப்படுகிறது...

பைலட் சார், பைலட் சார்... இதுதான் சார் முதல் நாள் எங்க சாஃப்ட்வேர் லைவ்ஆ போறது... கொஞ்சம் பாத்து யூஸ் பண்ணுங்க சார்.... Tip and Tricks ஷீட் டாக்குமென்டேஷன் பக்கதுலேயே இருக்கட்டும்... Disaster Recovery Plan, Escalation List எல்லாம் இது கூடவே அட்டாச் பண்ணிருக்கோம்... அது கூடவே Service Level Agreement ல இருக்க முக்கியமான பகுதிகளையும் உங்களுக்காக அட்டாச் பண்ணிருக்கோம்.

I trust you guys.... You've given so much details to documentation... I've used a similar system before.. no worries.. thanks guys... ^---^ ஹவாய்ல இந்த மாதிரி கட்டை விரலையும், சுண்டு விரலையும் தூக்கி ஹாய் சொல்லி... அலோஹா (வணக்கம், பார்ப்போம், ஐ லவ் யூ) எல்லாத்துக்கும் இந்த வார்த்தைதான்) சொல்லி பைலட் வேகமா உள்ளே போயிட்டாரு...

பைலட் உள்ளே போனதும் நம்ம ஜெய்சங்கர் வில்லன் படத்துல வரா மாதிரி நிறைய 0 (15) வாட்ஸ் பல்ப்... எல்லாம் மாறி மாறி எரிய... பைலட் டென்ஷன் ஆகிட்டார்.... This is New... I never expected such a system... the previous one used to be compact and easy to use. This seems like a monster system... அப்படின்னு சவுண்ட் குடுக்க..... நாட்டாமை வந்து, I will put you on a con-call with the system lead who developed the system... It seems they’ve done lots of analysis and usability study to improve the system, it should be good, and of course, they are at CMM Level 5… னு தீர்ப்பு சொன்னார்...

விமானத்தை இயக்க துவங்கியவுடன் டிஸ்ப்ளே எல்லாம் புஸ்.....

Pilot: Hey dude, the control display went down

நோ ப்ராப்ளம்... நாங்களும் இத எங்க டெஸ்டிங்ல பாத்தோம்... நீங்க விமானத்தை ரி-ஸ்டார்ட் பண்ணா இது சரியாயிடும்....

"Holy Cow.... " $%@#%$%^%%&^&

Latitude: NaN Longitutde: NaN

Flight Path.
EventType clr20r3, P1 fcs.exe, P2 6.0.3790.1830, P3 42435be1, P4 app_fcs_ncsnb2-n, P5 0.0.0.0, P6 440a4082, P7 5, P8 1, P9 system.nullreferenceexception, P10 NIL

நோ ப்ராப்ளம்... பேக் டு மெனு.... உங்க தலைக்கு மேலே இருக்க பட்டன்ல 3456அ லேபில்லோட இருக்க அந்த பட்டனை அமுக்குங்க ... இது ஃபிக்ஸ் ஆயிடும்...

பைலட் ஒரு அமுக்ஸ் அமுக்க... ... ஒரு அலர்ட் ஸ்க்ரீன் .... Test 4... OK

ஹி ஹி சாரி... அது டெஸ்டிங் ஸ்க்ரிப்ட்.... அது ப்ரோடக்சன் கிட் ல எப்படி வந்ததுனு தெரில... Something strange should have happened.... நீங்க ok க்ளிக் செய்தா போதும் ... Things should be ok...

பைலட் மயக்கம் போட்டு விழ ... அடுத்த அறிவிப்பு....

ஹவாயில் இருந்து புறப்படும் விமான எண் 0001 கால தாமதமாக புறப்படுகிறது... சில தொழில் நுட்ப சிக்கல் காரணமாக இந்த விமானம் 3 மணி நேரம் தாமதமாக புறப்படுகிறது...

Thursday, August 7, 2008

சீனியர் டைரக்டர் - வடிவேலு

நேத்து ஒரு ஆப்பு... (Application Outage).... இந்திய பெட்டி தட்டும் மேதைகளை கொண்ட ஒரு டீம், Client Director - அவரோட மானேஜர் எல்லாரும் War Room ல்ல உக்காந்திருக்க...

Client Director: டேய் ப்ரோக்கிராமர்களா (எம்ப்ளாயீஸ் பாத்து)... இந்த Bug எல்லாத்தையும் சீக்கிரமா ஃபிக்ஸ் பன்னுங்கடா...

(நம்ம கன்சல்டன்ட் தோழர்களும் அவசர அவசரமாக லேப்டாப் திறக்க...)

Client Director: டேய் அப்ரன்டிஸ்களா... பன்னதெல்லாம் போதாதா? யோவ், நீ இங்க வா..., இந்த பசங்கள பாத்துக்க வேண்டியது உன்னோட பொறுப்பு....

Manager: சரிங்க... இந்த பசங்க இனிமே ப்ரேக் எடுக்காம ஒழுங்கா வேலை செய்யராங்கலான்னு உஷாரா பாத்துக்குறேன்...

Client Director: யோவ்... அவங்க வேலை செஞ்சி பாத்தது போதும்... இந்த அறிவாளிங்க கோட்ல கைய வெக்காம பாத்துக்குறதுதான் உன்னோட வேலை... புரிஞ்சுதா... யவனாவது Codeல கைய வைச்சீங்க அவ்வளவுதான்... கோட் அடிக்கிறாங்கலாம் கோட்...

நீங்கல்லாம் போயி அந்த ரிப்போர்ட்டிங் டூல்ல இருக்குற ஆணியெல்லாம் புடுங்குங்க....

(மொத்த 20 கன்சல்டன்டுகளும் ரிப்போர்ட்டிங் டூல் டாக்குமென்டேஷன் எடுத்து முறைத்து பார்க்க தொடங்க.... )

டேய் என்னடா பன்றீங்க... நீங்கல்லாம் ஆணியே புடுங்க வேண்டாம்டா...

(எல்லாரும் ஜி-டாக் விண்டோவை மாற்ற....)

டேய் ஏன்டா கொல்றீங்க.... நீங்க 5 பேரு ரிப்போர்டிங் ஆணிய புடுங்குங்கடா... நீங்க 10 பேரு டாக்குமென்டேஷன் பண்ணுங்கடா... நீங்க 5 பேரு Excel , Power Point, Word எல்லாம் ஓபன் பன்னி ஏதாவது பண்ணுங்கடா...

(டெவலப்பர் ஒருத்தர், அப்ளிகேஷன் ஓபன் செய்து ஸ்க்ரோல் அப், ஸ்க்ரோல் டவுன் செய்து கொண்டிருக்க....)

டேய்.. என்ன பன்றே....

டெவலப்பர்: பக் பிக்ஸ் பன்றேன்....

பாத்து.. மெதுவா க்ளிக் பன்னு... மவுஸூக்கு வலிக்க போது.... டேய் ஃபைலை ஓபன் பன்றா.... கமென்ட் போடுடா.... ஏதாவது Code அடிடா... Build பன்னுடா... Debug பன்னுடா....

ஏன்டா என் உசுற வாங்குறீங்க... ஒரு 10 $ குறைவா கிடைக்கும்னு உங்கள வேலைக்கு வெச்சதுக்கு... உஸ்ஸஸ்ஸஸ்ஸஸ்ஸஸ்ஸ இப்பவே கண்ண கட்டுதே....

கண்ணை மூடி கண்ணை திறப்பதற்குள்.... BRB - After a break, மெசஞ்சர்ல Status மாறி மொத்த கும்பலும் எஸ்கேப்...

Sunday, August 3, 2008

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...

இன்று நண்பர்கள் தினம்,

ஜி-டாக்கில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் பிங் செய்து, நன்றி, வாழ்த்துக்கள், என சொல்லி பழைய நினைவுகளை உயிர்ப்பிக்க ஆசை இருந்தாலும், நிறைய நண்பர்கள் Do not disturb என்ற நிலையிலும், 5 நிமிடங்களுக்கு மேலே இன்டரஸ்டிங்கா பேச முடியாத என்னுடைய இயலாமையாலும்... ;) அந்த எண்ணத்தை கைவிட்டேன்.. ஆனால், காலை முதல் மதியம் வரை நிறைய நினைவுகளின் நிறைவுகள்.... இது மன நோயா என தெரியவில்லை... கடந்த சில மாதங்களாக, வெட்டியாக நிறைய நேரம் இருப்பதால், நினைவுகளிலேயே செலவிடுகிறேன்... எத்தனை இதயங்கள்.... பள்ளி நாள் முதல் இன்று வரை... நிறைய நினைவலைகள்.... அம்மா கூட சில சமயங்களில் தோழியாக தெரியும் போது பாசம் அதிகமாகும்.

நிறைய இதயங்களை நான் காயப்படுத்தியுள்ளேன்... நிறைய காயப்பட்டுள்ளேன்... நிறைய புன்னகைத்துள்ளேன்... நிறைய கற்றுக்கொண்டுள்ளேன்... என்னை சுற்றி இருந்து ஒவ்வொரு இதயத்தில் இருந்தும் ஏதோ ஒன்றாவது அழகாகவும், அதிசயக்கவும், அல்லது எனக்கு ஒரு தூண்டுகோலாகவோ இருக்கும்.... இதோ இணையத்தில், இது வரை நான் பார்க்காத எத்தனையோ பேர் கணினி முன்னர் என்னை சிரிக்கவும், கண்ணீர் கசியவும் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்... .

புன்னகை பரப்பிட, வளம் சிறக்க அனைவருக்கும் வாழ்த்துக்கள்... நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...

Monday, July 28, 2008

சிமெண்ட் - 2

இதோ.. சிறு கற்களாக இருக்கும் சுண்ணாம்பு பாறைகள்... தூளாக பயணிக்கின்றன... பெல்ட் கன்வேயர்கள் மூலமாக, ஸ்டாக்கிங் அன்ட் ரெக்லைய்மிங் இடத்தில் இருந்து, சுண்ணக் கற்கள், Ball Mill ஒன்றில் ஊட்டப்படுகிறது...



மோட்டார்களால் உருண்டு கொண்டே இருக்கும் ஒரு பெரிய உருளை... அந்த உருளைக்குள்ளே பெரிய பெரிய உலோக பந்துகள்.... உருளையின் சுழற்ச்சியால், மேலே வரை சுழன்று, பொத்தென கீழே விழும்... இதன் நடுவே இருக்கும் சுண்ணாம்பு கற்கள் எல்லாம் தூள் தூளாகும்.. .இவ்வளவு தான் ball mill....... இரும்பு குண்டுகளின் எடை, மற்றும் மில்லின் விட்டத்தை பொருத்து மில்லின் சுற்று வேகம் (rotation / revolution per minute) இருக்கும்.


இப்போது தூளான துகள்கள் (ரா மீல் – Raw Meal என்று அழைப்பார்கள்) காற்று மூலம் உறிஞ்சப்பட்டு சுட்டெரிக்கப்படும்....




இந்த சுட்டெரிக்கும் செயல் எல்லாம் Kiln என்றழைக்கப்படும் ஒரு உருளைக்குள்ளே நடக்கிறது... சாதாரணமாக ஒரு 3 டிகிரி சாய்வில் இந்த உருளை சுற்றிக்கொண்டே இருக்கும்... ஒரு பக்கத்தில் காற்றும் , கரித்தூளும் நெருப்பாக அனல் தகிக்க, மறு புறர் ரா - மீல் காற்று வழியாக வந்திறங்க... இப்போது ரா-மீல் தகிக்கும் பாறைகளாக வெளிவரும்... இதை க்ளிங்கர் Clinker என்று அழைப்பார்கள்...




இந்த சுடு கற்களை பக்கெட் கன்வேயர்கள் Bucket conveyers உபயோகித்து கிடங்கில் சேர்ப்பார்கள்... விவசாயத்தில் கேணி இறைப்பார்களே அதே போலத்தான்... இதை வெட்ட வெளியில் கூட சேமித்து வைக்கலாம்...




அடுத்த கட்டம், Cement Mill, உருகி உறைந்த க்ளிங்கர் பாறைகளை மற்றொரு Ball Mill கொண்டு மிக சன்னமான தூளாக - நாம் உபயோகிக்கும் சிமெண்டாக மாற்றம் பெரும் கட்டம்....

இந்த சிமெண்ட் சைலோ (silo) என்றழைக்கப்படும் பெரிய உருளைகளில் பாதுகாக்கப்படுகிறது...

காற்றின் மூலம் பின்னர் பேக்கேஜிங் பிரிவுக்கு இழுத்துச்செல்லப்படும் சிமெண்டு, மூட்டைகளுள் தானியங்கியாக நிரப்பப்பட்டு, இரயிலிலும், லாரிகளிலும் ஏறி நம்மை வந்தடைகின்றன

அன்பு இதயங்கள் இயக்கும் உலகம்...

The world is full of good people

I also feel if you are motivated and show some initiative, people around you will always help you. I also feel there are more good people in society than bad ones. I want all those who read this to feel that if Naresh can achieve something in life, you can too.


நரேஷூக்கு வாழ்த்துக்கள்... மேலும் படிக்க
http://specials.rediff.com/news/2008/jul/28sl1.htm

Friday, July 25, 2008

சிமெண்ட் - 1

எங்கு காணிணும் சக்தியடா.. என்ற வரியில், எல்லா பொருளிலும் அறிவியலின் பிரம்மாண்டம் அதிசயிக்க வைத்த இளமை பொழுதுகளில், திருச்சி அருகே உள்ள ஒரு சிமெண்ட் ஆலையில் 2 மாதங்கள் In-Plant trainee ஆக இருக்கும் வாய்ப்பு கிடைத்தது.... 11ஆம் வகுப்பில் portland cement manufacturing படித்து புரியாத பலவும், சில நாட்களில் பார்த்து புரிந்து கொண்டேன்...

அந்த புரிதலை பதிவாக்க - பத்தாண்டுகள் கழித்து இன்று ஒரு சிறு முயற்சி, இதே வகையில் பலவற்றையும் பதிவு செய்து, ஏற்கனவே தமிழ் பதிவர்கள் இட்டுள்ள அனைத்து நடைமுறை அறிவியல் மற்றும் விளக்கங்கள் குறித்த பதிவுகளை திரட்டி, தமிழ் வழி கல்வி பெறும் மாணவர்களுக்கு power point களாக அளிக்க வேண்டும் என்று ஒரு எண்ணம்... என்று நடக்கும் என தெரியவில்லை... இருந்தாலும் இதோ முதல் அடி ...
(இரட்டை அர்த்தத்தில் பேசுவது ஒரு குஜாலிட்டியாதான் இருக்கு... எஸ். ஜே. சூர்யா எவ்ளோ கஷ்டப்பட்டு யோசிச்சு எழுதுவாறோ?)

இது எவ்வளவு பயனுடையதாய் உள்ளது? அல்லது எவ்வளவு மொக்கையாய் இருந்தது என்பதை பின்னூட்டம் இடவும்... ஓரளவு தமிழ் இணையங்களை தேடிப்பார்த்ததில் howstuffworks போல எந்த ஒரு இணையதளமும் தெரியவில்லை... ஏற்கனவே இதை போல தகவல் தளங்கள் இருந்தால் தெரிவியுங்கள்... Why to re-invent the wheel?





சுண்ணாம்பு பாறைகள்

கடலை தாண்டி ஒரு 350 கி.மீ இருக்கும் திருச்சி, அரியலூர் பகுதிகளில் சுண்ணாம்பு பாறைகளின் படிமங்கள்... அங்கு பாறைகளினூடே புதைந்த சிப்பிகள், சங்குகள் எல்லாம் ஒரு காலத்தில் அங்கு கடல் அல்லது பெரிய நீர் பரப்பு இருந்ததாக தெரிவிக்கின்றன....


சுண்ணாம்பு படிமங்கள்

நாம் நுகர்வது எல்லாமே இயற்க்கையில் இருந்து வந்த பொருட்களே என்பதை நினைவூட்டும் வகையில், மண் , சிமெண்டாய் மாறும் வித்தையின் முதல் கட்டத்தில்....


செயற்க்கை கோள் படங்கள், மண் மற்றும் பாறைகளின் வேதியியல் ஆராய்ச்சிக்கு பிறகு சுண்ணாம்பு சுரங்கங்கள் (lime stone mines) அவற்றின் தரத்திற்கேற்ப வகைப்படுத்தப்படுகிறது... பாறைகளின் உறுதியை கணக்கிட்டு, அதற்கு ஏற்ற வகையில் Dimensions for Drilling - ஓட்டைகளின் ஆழம் மற்றும் அகலம் கணக்கிடப்படுகிறது, ட்ரில்லிங் முடிந்த பிறகு அதில் நைட்ரோ வெடிபொருட்களை ப்ளாஸ்ட்டிக் பைகளில் ஒயர்களை சேர்த்து விடப்பட்டு, டெட்டோனேட்டர் (ஒரு சிறிய அளவு மின் அதிர்வை தரும் இயந்திரம்) கொண்டு பாதுகாப்பாக வெடிக்கப்படுகிறது...


தூளாகும் பாறைகள்...




அது வெடிக்கும் அழகு பார்த்து பத்தாண்டுகள் கழித்தும் கண் முன்னே நிற்கிறது.... பாறைகளாக மாறிய (Limestone rocks) பூமியின் படிமங்களை பெரிய அளவு டிப்பர் லாரிகள் மற்றும் போக்கலைன் இயந்திரங்கள் கொண்டு சிமெண்ட் ஆலைக்கு கொண்டு செல்வார்கள்...



இங்கு முதல் கட்டம் - Crushing - ஹாமெர் மில் (Hammer Mill) என்னும் நிலையில், பெரிய பாறைகள், சிறிய கற்கலாக மாறுவது... பெரிய சம்மட்டிகளை தொடர்ந்து சுழற்றி சுழற்றி அடித்தால் எப்படி இருக்கும் ? அதே போலத்தான் Hammer Mill….. வேகமாக ஓடும் ஒரு உருளையை சுற்றி பல சம்மட்டிகள்.... மேலே விழும் பாறைகள் 25 - 40 மிமி அளவில் சிறிய கற்களாக ....





இந்த சிறிய கற்கள் பெல்ட் கன்வேயர்கள் மூலமாக ஒரு கிடங்கில் குவிக்கப்படும்.. இதை Stacking - ஸ்டாக்கிங் என்று அழைப்பார்கள்.... இவ்வாறு குவிக்கப்படும் குவியல்கள் சிமெண்ட் ஆலையின் input buffer என்ற முறையில் production fluctions ஐ தவிர்ப்பதாக அமைகிறது...

அடுத்த பதிவுகளில் இந்த கற்கள், தூளாய் மாறி, நெருப்பாற்றில் நீந்தி, மீண்டும் பாறையாய் மாறி, தூளாகி, பையில் அடைபட்டு, எப்படி பலமாடி கட்டிடங்களை தாங்கிடும் ஆற்றலை பெறுகிறது என்ற தகவலையும் பார்ப்போம்.

Thursday, July 24, 2008

பழங்கதைகள் நினைத்து... .

பொய்யான புன்னகை முகமூடி,
தன்னிலை குறித்தே எப்போதும் சிந்தனை...
வேலை வந்தாலும், செலவு வந்தாலும்,
அடுத்தவரிடம் காட்டும் தனி அன்பு...
தேவையில்லாமல் கொடுப்பவன் ஏமாளி எனும் அடைமொழி...
வாழ்விற்கும் புன்னகைக்கும் தொடர்பொன்றும் இல்லை.. .
அது டாலர் மதிப்பிலேயே இருக்கிறது என்ற வாக்குவாதங்கள்....

பணிபுரிவதிலும் பாங்காக அரசியல்,
அப்ரெயிசல் என்ற பெயரில் அழுக்கு பொய்கள்...
முன்னே புன்னகைத்து, நகர்ந்த பின்னர் பரிகாசம்...
பரிகாசம் செய்தியாக உடனுக்குடன் பரிமாற்றம்...

இந்த கூட்டம் எனக்கு ஏனோ பிடிக்கவில்லை....
இதை நான் இயல்பென்று ஏற்க விரும்பவில்லை...

பழைய நட்புகள் மீண்டும் கிடைக்குமா?

பல் தெரிய பெரும் சிரிப்பு,
கைக்குட்டையில் காசு சேர்த்து,
ஐயங்கார் பேக்கரியில் கூட்டுறவு சிற்றுண்டி
சமோசாவை கூட காக்கா கடி கடித்த அழகு

முணியாண்டி விலாசில் மலிவு விலை பரோட்டாக்கள்...
புறநகர் இரயில் - மூன்று இருக்கையில், ஆறு பேர்..
கரம் பிடிக்கும் கட்டை தொங்கி,
டார்சன் கருத்துவிளக்கம்...

மதிய கட்டுச்சோறு 10 மணிக்கே மாயமாகும்.
பகல் சாப்பாடு, ஆந்திரா மெஸ்ஸில்,
கோங்குரா.. சாம்பார், சாம்பார், சாம்பார், மோர்.. இன்னொரு சாம்பார் என சிரிப்பினூடே வைத்துக்கொண்ட சாப்பாட்டு பந்தயங்கள்...

ஆய்வு அட்டவணை (records) அனைத்தும் நீ முன்னே முடித்தாலும்,
நான் முடித்த பின் கையெழுத்து வாங்கும், நட்பிற்கான இங்கிதம்...
மூன்று மணிநேர தேர்வை ஒரு மணி நேரத்தில் முடித்த பின்னும், எம்முடன் பயணிக்க நீ காத்திருந்த காரணம்...

கல் எடுத்து குறிபார்த்து எரிய, நிசப்தம் ஆகும் சுவற்றுக்கோழிகள்...
நான் அடித்த கல் அவற்றை அடக்கவில்லை என்றால்...
இன்னொரு ரவுண்ட் ட்ரை பண்ண சொல்லும் அன்பு

1 ரூபாய் நாணயம் வைத்து கந்தமாகுமா என ஆராய்ச்சி செய்து,
பல நாணயங்களை தண்டவாளத்தில் தற்கொலை செய்யவைத்த நாட்கள்...
கந்தகமாகவில்லை என அறிந்தும்,
அது metal alloy, இப்போது இருபது பைசாக்களை ஆராய்வோம் என
வரிசையாய் அடுக்கிவைத்து அறிவு வளர்த்த நாட்கள்

உள்ளத்தில் உள்ளதை உள்ளவாறே உளறி,
உவகை பூத்த காலங்கள்....

எதிர்பார்ப்பு எதுவுமின்றி, இயல்பாய் பழக,
இதயத்தில் எப்போதாவது கனமிருந்தால் இறக்கி வைக்க...
இரைச்சலின் அமைதியை கொலை செய்து, சில வார்த்தை இனிமை பேச,
யாராவது உடனே வேண்டும்... நான் நானாக வேண்டும்...

Monday, July 21, 2008

விஞ்ஞானம்

விஞ்ஞானம்... ஒவ்வொரு நொடியும் வியக்க வைக்கும்...

கடந்த பொருட்களை சுட்டிக் காட்டி...
விஞ்சிடும் அளவில் வியப்புண்டாக்கி...

இதோ இது பால் வெளி... .அண்டம் முழுவதும் கோள்கள்...
அந்த கோளில், ஆயிரம் ஒளி ஆண்டு அருகில்...,
அதோ ஒரு மேடு.... இன்னும் சில ஆயிரம் ஆண்டுகளில் இங்கு புதிய உயிர் பிறக்கும்...
இந்த சந்திரன் மேலே கட்டிடம் அமைப்போம், சாத்தியம் உண்டு....

ஒரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு
ஒலியில் வேகத்தில் பயணிக்க...
உடைகள், உணவுகள், உறைவிடம்,
உள்ளது சிறக்க, உவகை பெருக்க....

மாற்றங்களை மாறாமல் செய்வதால்,
மாபெரும் சக்தியானாய்...
ஏற்றங்கள் பல தந்தாய், தருவாய்,
மேலும் தருவாய்...

மனிதர்கள் நாங்கள்...
அப்படியே ஏற்றக்கொண்டால்,
மரபணுக்கள் கேலி செய்யும்.
குறைகள் பார்ப்பது எங்கள் குலவழக்கம்....

பாலி-எதிலின் வந்தால், சுற்றுச்சூழல் பற்றி சிந்திப்போம்...
மரத்தை காக்க மாற்று வந்தால், பழமை போனது என்று பரிதவிப்போம்...
மரபணு மாற்றி புதிய பயிர் வந்தால்,
வழி வழி பயிரை மாய்த்தாய் என்போம்..
உவற் நீரிலும், உலர்ந்த காட்டிலும்
பயிர் விளைவிக்காத அறிவியல் ஏனென்போம்...

நன்றாய் நாங்கள் இருக்கும் வரை...
மருத்துவ அறிவியல் காசு பார்க்க என்போம்..
மென்பொருள் படித்த ஒவ்வொரு மனிதனும்,
சமுதாய உழைப்பை சுரண்டும் காட்டுமிராண்டி என்போம்..

அணு சக்தி, எரிபொருள். வான்வெளி, கோள்வழி,
பங்கு சந்தை, உலக அரசியல், மரபணு, தொழில் நுட்பம்,
தகவல் தொடர்பு, மேலாண்மை, எல்லாமும் எனக்கே தெரியும்...

நாங்கள் கேள்விகளை கேட்கவும், எதிர்ப்புகளை தெரிவிக்கவும்,
எந்த ஒரு கட்டுப்பாடும் எப்போதும் கொண்டதில்லை...

நாளை வளமாகும், உலகின் குறைபாடுகளுக்கு,
ஒரே தீர்வாக எப்போதும் விஞ்ஞானம் காத்திருக்கும்..
அதற்கு வியாபாரமோ, மனித நேயமோ, அரசியலோ,
எது வேண்டுமானாலும் காரணியாக இருக்கலாம்...

நாங்கள் மாறமாட்டோம்...
நலன்களை எல்லாம், நன்றாய் நுகர்ந்தாலும்,
எது வந்தாலும் எதிர் குரலெழுப்புவோம்...

Tuesday, July 15, 2008

கண்கள் இரண்டால், உன் கண்கள் இரண்டால்



அழகான கவிதை வரிகள்.... அசை போட.....

கண்கள் இரண்டால், உன் கண்கள் இரண்டால்,
என்னை கட்டி இழுத்தாய், இழுத்தாய்....
போதாதென,
சின்ன சிரிப்பில், ஒரு கள்ளச்சிரிப்பில்..
என்னை தள்ளி விட்டு, தள்ளி விட்டு, மூடி மறைத்தாய்

கண்கள் இரண்டால், உன் கண்கள் இரண்டால்,
என்னை கட்டி இழுத்தாய், இழுத்தாய்....
போதாதென,
சின்ன சிரிப்பில், ஒரு கள்ளச்சிரிப்பில்..
என்னை தள்ளி விட்டு, தள்ளி விட்டு, மூடி மறைத்தாய்


பேச எண்ணி சில நாள்,
அருகில் வருவேன்,
பின்பு பார்வை போதும் என நான்,
நினைத்தே நகர்வேனே, ஏமாற்றி
கண்கள் எழுதும்,
இரு கண்கள் எழுதும்,
ஒரு வண்ணக்கவிதை காதல்தானா
ஒரு வார்த்தை இல்லையே,
இதில் ஓசை இல்லையே,
இதை இருளிலும் படித்திட முடிகிறதே!

இரவும் அல்லாத, பகலும் அல்லாத,
பொழுதுகள் உன்னோடு கழியுமா?
தொடவும் கூடாத, படவும் கூடாத,
இடைவெளி அப்போது குறையுமா?


மடியினில் சாய்ந்திட துடிக்குதே....
மறுபுறம் நாணமும் தடுக்குதே
இதுவரை யாரிடமும் சொல்லாத கதை...


கண்கள் இரண்டால், உன் கண்கள் இரண்டால்,
என்னை கட்டி இழுத்தாய், இழுத்தாய்....
போதாதென,
சின்ன சிரிப்பில், ஒரு கள்ளச்சிரிப்பில்..
என்னை தள்ளி விட்டு, தள்ளி விட்டு, மூடி மறைத்தாய்


கறைகள் அண்டாத, காற்றும் தீண்டாத,
மனதிற்குள் எப்போது நுழைந்திட்டாய்...

உடலும் அல்லாத, உருவம் கொள்ளாத,
கடவுளை போல் வந்து கலந்திட்டாய்...

உனையன்றி வேறோரு நினைவில்லை...
இனி இந்த ஊனுயிர், எனதில்லை...
தடையில்லை, சாவிலுமே, உன்னோடு வர

கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும் ஒரு வண்ண கவிதை காதல் தானா?
ஒரு வார்த்தை இல்லையே,
இதில் ஓசை இல்லையே,
இதை இருளிலும் படித்திட முடிகிறதே..


பேச எண்ணி சில நாள்,
அருகில் வருவேன்,
பின்பு பார்வை போதும் என நான்,
நினைத்தே நகர்வேனே, மாற்றி

கண்கள் இரண்டால், உன் கண்கள் இரண்டால்,
என்னை கட்டி இழுத்தாய், இழுத்தாய்....
போதாதென,
சின்ன சிரிப்பில், ஒரு கள்ளச்சிரிப்பில்..
என்னை தள்ளி விட்டு, தள்ளி விட்டு, மூடி மறைத்தாய்,

Tuesday, July 8, 2008

திண்ணை

திண்ணையை பற்றி பதிவர் வட்டத்தை சேர்ந்த பலரும் மிக அழகாக எழுதியதை படித்த தாக்கம், இளகிய இதயத்துடன் இன்றைய கிறுக்கல்கள்....

பூந்தமல்லியில் தாத்தா வீடு - 40 களில் கட்டியதாம்.... வீட்டை சேர்ந்தால் போல 2 திண்ணையும், கொஞ்சம் மதில் சுவர் சேர்ந்தால் போல 2 திண்ணையும் இருக்கும் ^\___ ... நான் முதல் வகுப்பில் இருந்த வரை பூந்தமல்லியில் வாழ்ந்ததாக மென்மையான நினைவுகள்.. திண்ணைக்கு எதிரே நித்தியமல்லி கொடி படர்ந்திருக்கும். தாத்தா வீட்டில் பெரிய முற்றம் கிடையாது... கடன் வாங்காமல் கட்டனும்னு சின்னதா கட்டியதாக, தாத்தா சொன்னதாக, என்னுடைய பெரிய அத்தை சொல்வார். இரு திண்ணைக்கும் இடையே மாடங்களோடு சேர்ந்த ஒரு பெரிய கதவு... கதவின் மேல் நின்று அதை திறந்து விளையாடி அதற்காக உதை வாங்கியது போல் லேசாக நினைவு... பின்வாசல் வழியே நேராக செல்லும் பாதையை முட்டும் வகையில் பெரிய கிணறு... கல் கிணறு... அதில் வாளி கயிறு வழியாக சர்ரென இறங்குவதும், வாளி தண்ணிரில் விழும் சத்தமும், ஏதோ ஒரு அழகு... .

பின்னால் உள்ள தோட்டத்தில், புளிய மரம், அரை நெல்லிக்காய், பூவரசம், செம்பருத்தி, 2 தேக்குமரம், ரொம்ப பிடிச்ச கொன்றை மரம், வாழை மற்றும் தென்னையோடு சுற்றிலும் ஆடாதொடாவும், வேலிக்காத்தானும்.. ஒவ்வொரு செடியும் அழகு....

வீட்டிற்கு பின்னால் உள்ள நிலத்தில் பெரிய புங்கமரமும், கொர்கொலிகாய் மரமும், பம்ப்செட்டுடன் சேர்ந்த கிணரும் இருந்ததாக நினைவு... எல்லாமே அழகு...

மார்கழி மாதம் வந்தால், புல் எல்லாம் வெட்டி, வீட்டின் முகப்பில் சாணம் கலந்த நீர் தெளித்து, கோலம் போடும் அழகு... தோட்டத்து விறகை மட்டுமே எரிபொருளாக்கும், மண் அடுப்பு... அடித்து துவைக்க சாய்நிலையில் ஒரு பெரிய கருங்கல்.... அதில் துணி துவைக்கும் போது மேலே தண்ணீர் தெளிக்கும் சுகத்திற்காக அடிக்கடி துணி துவைக்கும் நேரத்தில் அந்த பக்கம் சென்று திட்டு வாங்கிய நினைவுகள்....

எல்லாம் சில வருடம்தான் வாய்த்தது. பின்னர் சில காலத்திற்கு, பொங்கல், நோன்பு, தாத்தா மற்றும் ஆயாவின் நினைவு நாட்களின் போது, பூந்தமல்லி வீட்டிற்கு எல்லா உறவினர்களும் வந்து, 50-70 பேர் சத்தமும், வகையான வாழையிலை சாப்பாடும், சிரிப்புகளும்...... எல்லாரும் சேர்ந்து மகிழ்ந்த காலம்..... நினைத்தாலே இனிக்கும்...

இன்று, நினைவுகள் மட்டும்தான்... உறவுகள் வெகு தூரத்தில்....

நிச்சயமாக கடந்த 5- 6 வருடங்களாக அந்த திண்ணைகள் யாரையும் பார்த்திருக்காது.... இனியும் அது யாரையும் பார்க்காது.... எனது மகனுக்கு கட்டாயம் திண்ணை என்றால் என்ன என்று புரியாது


திண்ணைக்கு இரங்கற்பா!

நன்றி.... நன்றியில்லா எங்களை மன்னித்திடு...
நாங்கள் எங்களை தொலைத்து எங்கோ ஓடிக்கொண்டிருப்பவர்கள்....
உன்னை நினைத்து கண்களில் ஈரமும், இதழில் புன்னகை பூப்பதையும் தவிர
உருப்படியாய் எதுவும் செய்யமுடியாது...
எங்களால் நகரத்தின் வசதி இன்றி நாட்களை நகர்த்த முடியாது..
நீ தந்த நினைவுகளுக்கு நன்றி.... நன்றியில்லா எங்களை மன்னித்திடு...



வினையூக்கிகள் (catalysts)
http://blog.balabharathi.net/திண்ணை/

ரொம்ப பிடிச்சது...
http://tamilamudam.blogspot.com/2008/07/blog-post.html

Tuesday, July 1, 2008

க்ரிக்கெட்

க்ரிக்கெட் - பள்ளி நாட்கள் முதலே ஏதோ இந்த விளையாட்டு மீது ஒரு தனி பிரியம்... வீட்டை விட்டு வெளியே போய் விளையாடுனா, அப்பா டென்ஷன் ஆவார். என்னுடைய க்ரிக்கெட் மோகம் எல்லாம் வாரம் ஒரு முறை 10 ரூபாய்க்கு அல்லது 7 ரூபாய்க்கு டென்னிஸ் பந்து இல்லைன்னா பெப்சி பந்து வாங்கி மொட்டை மாடியில் என்னுடைய தம்பியோட சேந்து, 10 நிமிடம் விளையாடி, பக்கத்து வீட்டில் தொலைத்த நிகழ்வுகள்தான்... அட இப்ப இல்லங்க... 15 வருடத்துக்கு முன்ன....

10ஆவது வரும் போது, கிட்டத்தட்ட எல்லா நண்பர்களும் க்ரிக்கெட் வீரர்களாக தோற்றமளிக்க... நானும் முயற்சித்தேன்... எங்க பள்ளி க்ரவுண்டில் முதல் முறை பெட்டிங் மேட்சில் என்னையும் சேர்த்த புண்ணியத்துக்காக, விக்கட் கீப்பரா நிக்க வெச்சாங்க.... பந்து நேரா வந்து.. நெஞ்சில் படார்னு பட்டது... ஒரு ரெண்டு நிமிஷம் மூச்சு நின்றது போல வலி... ஐ ஆம் ஓ.கே ன்னு பந்தா விட்டுட்டு, தண்ணி குடிக்க போரா மாதிரி ஒரு கால் மணி நேரம் எஸ்கேப் ஆனேன்...

அடுத்த கட்டமாக, பள்ளிக்கூட க்ரவுண்டு சின்னதா இருக்குன்னு, சென்னை உயர்நீதி மன்றத்தில் இருக்கும் லா-கலேஜ் க்ரவுண்டுக்கு அப்பப்ப விளையாட செல்லும் பசங்க... ஆள் குறைவா இருந்தா... என்னையும் அன்போடு கூப்பிடுவாங்க... அங்க நம்ம லா அண்ணண்கள் எங்களிடம் தங்கள் திறமையை சில சமயம் காண்பிப்பார்கள்... சும்மா ஒரு ஓவர் டானு பேட் வாங்கி கண்ணா பிண்ணானு அடிச்சு எப்படின்னு ஒரு புன்னகை... சரி நீ பேட்டிங் பண்ணுனு சொல்லிட்டு, நாம அவுட் ஆனதும் பெரிய சிரிப்பு... அண்ணா, சூப்பர்னா னு நாங்களும் சொல்லிடுவோம்..

எல்லா விஷயங்களையும் போலவே... வெளியே இருந்து பார்ப்பதற்கு மிகவும் சுலபமாக தெரியும் க்ரிக்கெட் விளையாட ரொம்ம்ம்ம்ம்ம்ப்பபப கடினமாகவே தோன்றியது.... slow ball தானேனு மெதுவா விளையாடினா... கண்ணதிரே நம்மை தாண்டி பந்து போறது, ஒரு மாதிரி நெஞ்சை கசக்கும்... ஈசி ஈசி னு சொல்லி ரொம்ப முயற்சி பண்ணா, அடுத்த பாலே வேகமா போட்டு அவுட்னு சொல்லிடுவாங்க.. ;(


கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் போது, ராஜூ பேட் எப்படி பிடிக்கனும்னு கத்து கொடுத்தான்.. (டாங்க்ஸ் டா, அதுக்கு முன்னாடி கூட விளையாட கூப்புட்டவங்க எல்லாமே பவுண்டரி பக்கத்துல இருந்து பால் தூக்கி போடவும், கொஞ்சமாய் காமடி பண்றதுக்கும்தான் அப்படிங்கறது ரொம்ப நாள் கழிச்சு புரிஞ்சுது)

பிரபு, ராஜூ எல்லாம் பந்தை தூக்கி போட்டு காட்ச் ப்ராக்டிஸ் பண்ண... நான் மட்டும் நண்டு பிடிக்கும் ஸ்டைலில் விரலை எல்லாம் விரித்து பந்தை பார்த்து நகர்ந்தாலும், சரியா முகத்து மேலே விழுந்தோ, கைக்கு நடுவில் ஓடியோ, ஒரு பவுன்ஸ் ஆகி வேறு திசையிலோ போய்.. இருக்கும் கொஞ்ச நஞ்ச ஈகோவையும் சுத்தமாக பிரித்தெடுக்கும்.

ஒரு பத்து அடி தூரம் மட்டும் வைத்துக்கொண்டு வீட்டில் சின்ன பசங்க கூட விளையாடுறதுன்னா, நாங்க கலக்குவோம்ல.. ;) விரல வெச்சு பந்தை சுத்தி தூஸ்ரா போடரது... ச்சின்ன பசங்க போடுற பந்தை இலாவகமா ப்லேஸ் பண்ணி ரன்ஸ் எடுக்குறது.. ஒன் பிட்ச் கேட்ச் பிடிக்கிறது... இத விட என்னோட கேமை அடுத்த லெவலுக்கு கொண்டு போகவே முடில...

இன்றும், அவ்வப்போது நண்பர்கள் க்ரிக்கெட் விளையாட கூப்பிடுவார்கள்... ஒரு ஆர்வத்தில் போய் விடுவேன்... எவ்வளவு ட்ரை பண்ணாலும், பல்ப் தான்...

மேட்ச் பாக்கும் போது, நம்ம க்ரிக்கெட் வீரர்களை வீட்டில் உள்ளவர்கள் திட்டினால்... (அட ஈசி ஷாட் , ஈசி கேட்ச், எல்லாம் விளம்பரத்துல நடிக்கத்தான் வராங்க.. etc., etc.,) நான் மட்டும் தனி கட்சி... அங்க போய் விளையாடுனாத்தான் தெரியும் எவ்வளவு கஷ்டம்னு... ;)

Monday, June 23, 2008

கோடைக்கால திருவிழா!


சென்ற வார இறுதியில்,
ஹவாய் ஏர்லைன்ஸ்... கோடைகாலத்தை வரவேற்க ஒரு விழா கொண்டாடி... (இதெல்லாம் ஓவர்னு நீங்க சொல்றது எனக்கே கேக்குது) எங்களையும் (ஐ. டி வெட்டி ஆஃபிசர்ஸ்) வரவேற்றது.

ஏர்போர்ட் அருகே இருக்கும் என எண்ணி, பேருந்து பிடித்து மொத்த வெட்டி ஆஃபிசர்ஸ் கும்பலும் ஏர்போர்ட் அருகே சென்ற பின்னர் தான், அது ஒரு 20 நிமிடம் நடை போட வைக்கும் என புரிந்தது... இஸ்ரேலை சேர்ந்த ஒரு சக ஆஃபிசர், டேக்சி பிடிக்கலாம் என கூறியதும், ஒரு கிங் சைஸ் லிமோசைன் வந்தது... சும்மா சொல்லக்கூடாது... 10 $ கொடுத்து லிமோ ல போன மொதல் தமிழர்கள் என்று நாங்களும் சரித்திரத்தில் இடம் பிடிச்சிட்டோம்ல... ;)
கொடுத்த 10$ சரியாகும் வகையில் பல வகையிலும் கேமராவை க்ளிக் செய்து பின்னர் விழா இடத்தை கஷ்டப்பட்டு அடைந்தோம்.



ஏர்போர்ட் பக்கத்துலேயே ஒரு ஏரியாவை வளைத்துப்போட்டு, குழந்தைகள் விளையாட உபகரணங்கள்.. பெரியவர்கள் மொக்கைகளை தவிர்த்து எஸ்கேப் ஆக ஒரு லைவ் பேண்ட்….. கிடார், ட்ரம்ஸ் எல்லாம் வெச்சிட்டு ராக், பாப், கன்ட்ரி ன்னு ஒரு பக்கம்..... அத விட அல்டிமேட் ரெண்டு விஷயம்... Thanks for the hardwork.. Mahalo ... உங்கள் உழைப்பிற்கு நன்றி.. என்ற பெரிய பேனர்... நெஞ்சை தொட்டுட்டாங்கையா.... ;) அல்டிமேட் மேட்டர் என்னனா... ஒரு பெரிய போயிங் ப்ளேனை ஓட்டிட்டு வந்து, பார்ட்டி ஏரியால விட்டுட்டாங்க... லகேஜ் ஏரியா, கன்ட்ரோல் ஏரியா... காக்பிட் உட்பட எங்கு வேணும்னாலும் சுத்தி பாக்கலாம்.. அப்படின்னு...



உள்ளே போனதும், சாப்பாடு ஐடம் என்ன இருக்குன்னு தேடிப்பாத்தா... ஹாம்பர்கர், ஹாட் டாக் அப்படின்னு off பண்ணிட்டாங்க... நாங்க எப்பவும் போல தாக சாந்தி (coca cola and plain water) செய்த பின்னர்... ஏர் ஹோஸ்டஸ் எல்லாம் எங்கன்னு யோசிச்சிக்கிட்டே நின்றிருந்த விமானத்தில் ஏறினோம்...

கோவிந்தா.. கோவிந்தா ரேஞ்சுல சின்ன க்யூ நின்னு விமான ஓட்டுனர் (அதாங்க தமிழ்ல பைலட்) இடத்துக்கு வந்தோம்... அதுக்கு முன்னாடி நம்மவர்கள் அனைவரும் இது ஏர் ஹோஸ்டஸ் ஒக்கார இடம்னு, flight attender சீட்ல உக்காந்து மகிழ்ச்சி தவழ புன்னகைத்தார்கள் ;)

பைலட் இடத்திற்கு சென்ற பின்னால், அவரை கொஞ்சமாய் மக்கள் மொக்கை போட்டு, சில பல தகவல்களை உள் வாங்கி, க்ளிக் முடித்து வெளியேறினோம்...

அதுக்கப்புறம் - patty இல்லாத ஹாம்பர்கர்கள் மற்றும் பெயர் அறியாத உணவு வகைகள் சிலவற்றை உள்ளே தள்ளி.. ;) எஸ்கேப் ஆகலாம் என்று முடிவெடுத்தோம்..

ஹாம்பர்கர் அளித்த ஒரு ஆன்ட்டி , நிறுவனத்தில் பணிபுரியும் சீனியர் டைரக்டர் என்பதும்... பார்ட்டி விட்டு வெளியே வந்த எங்களை ஒரு வேனில் ஏற்றி அருகே உள்ள பேருந்து நிலையத்தில் (அதாங்க தமிழ்ல பஸ் ஸ்டான்டு) ட்ராப் செய்த நபர் கஸ்டர் சர்விஸ் வைஸ்-ப்ரிசிடன்ட் என்பதும்..... நெஞ்சை லேசாக நெகிழ வைத்தது...

வளம் சிறக்க வாழ்த்துக்கள்.... Aloha

Monday, June 16, 2008

ஹவாய் வாழ்க்கை

இதோ.. ஓடிவிட்டது ஒரு மாதம்... ஹவாய் வந்து, ஹாய்யான வாழ்க்கைதான்...

ஊரை பற்றி...
அழகு.... இயற்கை அன்னை கொட்டி கொடுத்துள்ளாள்...
அதைவிட, இந்த மானுடர் அதை கட்டி காப்பாற்றுகிறார்கள்....


சாலை எங்கும் மலர்கள்... கொன்றை மரம் .. எல்லா வண்ணங்களிலும், மஞ்சள் மட்டுமே நான்கைந்து வகைகளில்...

செம்பருத்தி செடிகள்... சாலை ஒரங்களில்.. நான் பார்த்து இதுவரை இருபது வகைகளாவது...
கழிவு நீர் கால்வாயில் மீன்கள் துள்ளி விளையாடும்... மீன் பிடிக்காதீர்.. இது அசுத்தமான நீர் என்று ஒரு பலகை... அட சாமி... 5 அடி ஆழத்தில் பளிங்கு தண்ணீர்...

பசுமை மலைகளின் தொடர்... அங்கு டயமண்ட் ஹெட் என்று ஒரு காலத்தில் கோபப்பட்டு இன்று அமைதியாக இருக்கும் எரிமலை குன்று...

மக்களை பற்றி சொல்ல வேண்டும்... போன முறை டெக்சஸ் மாநாட்டில் இருந்த போது, ஆடம்பரம் அள்ளி வீசும்...
இங்கு பொருளாதார நிலை கொஞ்சம் மோசம்தான்...
ஆனால், ஜப்பானிய கலாச்சார தாக்கம்....
வழி சொன்னாலோ, பேருந்தில் இருக்கை தந்தாலோ.
தலை தாழ்த்தி, இதழ் சிரித்து, நன்றி என்னும் போது,
ஒரு மகிழ்ச்சி.....

நான் வாழ்வதோ வைக்கிகியில்...
வானுயர்ந்த ஹோட்டல்கள்...
வகைவகையான உணவு விடுதிகள்....
கடற்கரை ஓரத்தில் களி சேர்க்க காரணிகள்...

தினசரி, பேருந்து பயணம்...
(இதை பற்றி தனியே எழுத வேண்டும், இப்படித்தான் பேருந்து இருக்கவேண்டும்)
தினம் இந்த 2 மணி நேரம்,
வைரமுத்து, வாலி, தாமரை என
எல்லா கவிஞர்களுடனும் என்னை நட்பாட செய்கிறது...

மாலை நடை பயில...
1 மணி நேரம்... கோல்ஃப் கோர்ஸ் தென்னை மரங்கள்
நீரில் ஓடி ஒளியும் மீன்கள்...
மீன் பிடிக்க ஒரு காலில் காத்திருக்கும் பறவை...
அவ்வப்போது தென்படும் வாத்துக்கூட்டம்...

ரோலர் போர்டு ஏறி வித்தை காட்டும் இளைஞர்கள்...
நாய் குட்டியை குழந்தையை போல நடத்தி செல்லும் நண்பர்கள்..
காதலர் கையில் கையை பிணைத்து கடற்கரை செல்லும் பாக்கியவான்கள்...

70 - 80 வயதிலும், வாழ்க்கை துணையோடு,
கையில் தடியோடும், விழியில் புன்னகையோடும்.
ஒருவருக்கொருவர் துணையாக, இணையாக,
மென்நடை நடந்திடும் மெலிந்த பெரியோர்கள்...

கடற்கரை சென்றாலோ,

நடைபாதை முழுதும் வித்தை காட்டும் நண்பர்கள்...
சாயம் பூசி சிலையாக நின்று சில்லரைகள் சேர்ப்பார் சிலர்...
மாயம் செய்து வித்தை செய்து மகிழ்விப்பார் சிலர்..
மின்னல் வேகத்தில் முகத்தை ஓவியமாக்கும் சிலர்..
வண்ண கிளிகள் தோளில் அமர வாடகை கேட்கும் சிலர்..

அலையை பாதையாக்கி, பலகை மேல் நின்றே,
கலையுடன் விளையாடும் பலர்...
கரையின் முனையில், அலையின் நுரையில்,
பாதம் நனைக்கும் பலர்..
காற்றின் மென்மையில், காதலின் வன்மையில்,
காவியம் எழுதும் சிலர்..
நடுவில்.... கல்லின் மேல் அமர்ந்து, கடலலை கண்டு,
கண்ணீரோடும் சிலர்..

என்னுடைய வெறுமையை எல்லாம் வேறாக்கி
என்னை எனக்கு மீண்டும் அறிமுகம் செய்த ஊர் இது...

வாழ்க நீ...
ஒரு ஏக்கம் மட்டும் உண்டு.... என்றேனும் ஒரு நாள்...
என்னுடைய சென்னையும் உன்னை போல் ஆக வேண்டும்...

Sunday, June 15, 2008

தந்தையர் தினம்

இன்று தந்தையர் தினம்....


தொழிலாளர் தினம், காதலர் தினம், எத்தனை தினங்கள்...
எங்கிருந்து முளைத்தன இந்த புதிய நாட்கள்?
யார் கொண்டு வந்தனர், யாவருக்காக?
வாணிப ரீதியில் வளம் சேர்க்கவோ,
வரண்டிடும் மனங்களில் ஈரம் சேர்க்கவோ?

எண்ணிரண்டு வருடம் முன்னே இவை ஏதும் பிடிக்கவில்லை...
அன்பினை வெளிப்படுத்த நாள் ஒன்று தேவையில்லை...
ஒவ்வொரு நொடியும் தானே துலங்கிடும்...
அதற்கு வாழ்த்து அட்டையோ, வண்ணப் பூக்களோ அவசியமில்லை...
என்று நான் நினைத்திருந்தேன்.... அப்போது அனைவரும் அருகில்


இன்று நான் தனிமையில்,
வடிகட்டிய வார்த்தைகள்...
இயல்பை இழந்த நடைமுறைகள்...
சூழலுக்கேற்ற வழிமுறைகள்....
என்னை இழந்து நான்...

உரக்க பேசவோ, உணர்வை கொட்டவோ
வடிகால் இல்லாத, வரம்புக்குட்பட்ட,
பழைய சுவடுகளால், பண்பட்ட
என்னை இழந்த நான்...

தந்தை நினைவுகளில்..
தந்தையான நான் நினைவுகளில்...

என் இளமை காலத்தில்,

எவர்க்ரீன் சூப்பர் ஹீரோ...
என் தந்தை..
கைகளை மடக்கும் போது, எட்டிப்பார்க்கும் தசை முட்டை ...
தொட்டுபார்த்து மகிழ்ந்த நினைவு.

எங்களை எண்ணையில் மூழ்கித்து,
ஜெயன்ட் ரோபாட் என தலை மீது தூக்கிய நினைவு.

அவ்வப்போது, பக்கத்து தெரு பகோடா வாங்கிவந்து,
சுவையான பால் சாதத்தை, அறுசுவையாக்கிய நினைவு...

ராஜ்டூட் பைக் டாங்கின் மேல் உட்கார்ந்து,
அப்பா பார்வை மறைக்காமல்,
கழுத்தை சாய்த்து உட்கார்ந்தும்,
காற்றின் வேகத்தை கண்ணில் வாங்கிய நினைவு...

மிதிவண்டி கற்றுதர போரூர் ஊர் சென்று,
1 ரூபாய் வாடகை சைக்கிள் ஏறி,
செம்மண் புழுதி வாரிய நினைவு...

வாக்கிங் என்ற பெயரில்,
சற்றே தூரம் நடந்து,
சுவையாக தேநீரும், பட்டர் பிஸ்கெட்டும்,
இரசித்து பருகிய பின்..
சலைக்காமல் பல பேசி...
இளைத்த காலை பொழுதுகள்....

......

அரும்பிய மீசை....
அதிகரித்த குறும்பு,
குறைந்த மதிப்பெண்,
அறையப்பட்ட அடிகள்...

காலை மடக்கி சுவற்றின் ஓரம்,
நாற்காலி நிலையில் நிற்க சொன்னாலும்,
நான்கு எண்ணுவதற்குள் முடியாது என்று,
முறைத்து, முணுகி,
உதை வாங்கிய நாட்கள்....

சும்மா ஒன்னும் அடிக்கவில்லை...
ஒழுங்காக படிக்கவில்லை...
இந்த கணக்கு பாடமும் கடவுள் போலத்தான்...
எந்த நிலையிலும் ஏதும் விளங்கவில்லை...

.................

ஐந்து ரூபாய் தந்தாலும்,
ஏன் எதற்கு கேள்விகள்...
நேரு சொன்னாராம்... நம்பினால் கேள்வியில்லை.. நம்பாவிட்டால் பதிலில்லை என்று...
நான் சொல்லியிருந்தால், இடையணியும் பெல்ட் கையேந்தப்பட்டிருக்கும்...
கோபக்கார அப்பா..... ஆனாலும் பிடிக்கும்....

.....

அவர் கண்கள் நீர் தளும்பி சில முறை நான் பார்த்ததுண்டு...
பல நேரங்களில் நானே அதன் காரணம்...

ஐ. ஏ. எஸ் ஆகனும்.. எஞ்சீனியர் ஆகனும்...
என்றெல்லாம் வளர்த்தாலும்...
என்ன செய்ய... என்னுடைய சோம்பேறி தனத்திற்கு,
கிடைத்தது பேமன்ட் சீட்தான்....
ஆனால் நல்ல விஷயம்.. நானும் எஞ்சீனியரானேன்...

அத்தனை மோசமில்லை... ஏதோ நானும் வளர்ந்துவிட்டேன்...
முடிந்தவரை முயற்சிக்கிறேன்... வாழ்கிறேன்...
லைட்ஹவுஸ் வெளிச்சம் காட்டி செல்லுவது போல..
அப்பா முகத்தில் வெகுசில முறை புன்னகையை, பெருமிதத்தை
என்னாலும் உண்டாக்க முடிந்தது....

இதோ வழித்தோன்றல்...
அப்பாவிடம் வாங்கிய அடிகள் விட இவனிடம் இதுவரையுமே நிறைய வாங்கியுள்ளேன்...

அவன் அடம் பிடிக்கும் போது, நான் அதட்டினால், அப்பாவில் முகத்தில்தான் எத்தனை புன்னகை!



ஹேப்பி ஃபாதர்ஸ் டே...

Saturday, June 14, 2008

Past, Present and Unseen

Weekend begins...
and heights of laziness....
but bored...

Started a phunny game... to build a poem...

The alternate colors of conversation between me and Aki dude...


One big roar at the chime of school bell ring
None can stop us flying with a wing..
Winsome smile  through ups and downs...
With friends around walking side to side....

Falling and rising at each path,
Dreaming and aiming with each breathe,
Somehow the childhood got its wing,
And the bubbly teen came with swing


Ooooh… All of the sudden..
The other gender is always bright…
Adrenalin is working right….
Fall in Love and every day is a flight

Garden, parks and private cafeterias,
Are all discoveries of modern Columbus,
Lengthy hours of togetherness,
Could never satisfy the blooming heart
.

The lengthy drive with swifts and curves…
Many a crushes and bumps and breaks…
The course is long, the purpose is baffling
I know… ah no… not pretty sure..

Adolescent brings a permanent pause,
Responsibility prevents the reverse thoughts,
There is often joy without laughter,
We realize there is more in the platter


Moving on… asset creation, movable and immovable,
Rowing on… rough white water falls…
You can’t hear.. You can’t speak…
All you can do is to row it hard….

The destination isn’t that far…
Wish i knew, it's just for fun…
But still you are determined, to prove…
Straining the muscle and pumping each vein….

Memory fades with passing days,
There is no fun in any play,
There is no race to win,
But an ardent urges to move ahead.

Reality is never realized,
And nothing seems to be bright,
At each point we recall the childhood,
With each thought we cherish our lovely moments,


I realize that  life is not too long….
But it is something like a  beautiful song..
Why to worry about what happens at the end.
When you have the entire world by you to spend…

At the end of the glory game,
The king and pawn may be just the same.
But while game is being played..
Every piece is so famed..

You are special… for what You are…

Tuesday, June 10, 2008

நன்றி கவிஞர்களுக்கு

ஏப்ரல் சூரியன்
டீசல் புகை
பேருந்து நெரிசல்
அலுவலக எரிச்சல்
இவையெதிலும் வாடாமல்
பத்திரமாய் வைத்திருக்கிறேன்
உனக்குத் தெரியாமல் உதிர்ந்து
யாருக்கும் தெரியாமல் நான் கவர்ந்த
உன் கருங்கூந்தற் சிறுபூவை

கலக்கிடாருயா கலக்கிடாருயா………………….

அவர் எழுத்துக்களை பார்த்து அவர் நினைவில் இன்றைய கிறுக்கல். ………………….பிழை பொறுக்கவும்.

வைரமுத்து.... சற்றே காசுக்காக ஆசு பாடியிருந்தாலும்,
கற்பனைக்காகவும், கவிதைக்காவும் கணை தொடுத்தவர்தாம்..
இவர் பாரதியையும், வள்ளுவரையும், சங்க பாடலையும்
நம்மவர் வாயில் வரச்செய்தவர்...

ஆம்பலும், மொவ்வலும், நமக்கு தெரியாமலே போயிருக்கும்...
குனித்த புருவம் .. அப்பாடல் மறந்து போயிருக்கும்..
தனித்தமிழ் உச்சரிப்பு, விவேக் நகைச்சுவை மட்டுமே என்று
இனி வரும் எதிர்காலம் நினைத்திருக்ககூடும்.

நன்றி கவிஞர்களுக்கு, இவர்கள் கவலைகளை மட்டும் அல்ல, காலத்தையும் வென்றவர்கள்..

Friday, June 6, 2008

புன்னகை

மெல்லிய பசுமை குடில்,
தினம் மென்மையாக தெளிக்கப்படும் தண்ணீர்
ஊட்டங்கள் சேர்த்திட உரங்கள்
காய்ந்த இலைகளையும் கத்தரிக்க விரல்கள்..
மொட்டு விட்டு மலரும் வரை இரசித்திட சில விழிகள்...

இவை எதுவுமே நான் அறியவில்லை...
எனது மெல்லிய மலர்களை யாரும் விரும்பவில்லை..
வேலிகாத்தான்... முட்களை ஏந்தி நான்.....

மண் வாசனை தெரிந்த மண்ணிலும் கூட
எருமை மாடு கட்டவும், எரி பொருளாகவும்,
செலவில்லாத சுவராகவும் மட்டுமே வாழ்ந்த நான்....

என்ன வாழ்க்கை இது என்று ஆக்சிஜனை அள்ளி வீசியபோது,

எனதருகே இது வரை வாழ்ந்து,
மாடுகளின் குளம்புகளில், நசுங்கி வீழ்ந்த
சின்ன செடியொன்று சொன்னது...

அண்ணா.... உங்களை போல் பிறந்திருக்க வேண்டும்....

புன்னகைத்தேன்... என் வாழ்க்கை மோசமில்லை...

Monday, May 26, 2008

Memorial Day

Indeed! I’ve lost myself in the charm of Hawaii… serene beaches, tropical sunshine, and the sea breeze which reminds me my home sweet home…. Last couple of weeks chillaxed a lot of time in waikiki beach and ala mona beach… just chillaxed… did nothing but gazed at the white sands, tall trees, and beautiful bays… last Friday when the way from office to Waikiki read that lantern festival will be conducted on the memorial day in the magic island, ala mona… decided to catch up the action…..


Long weekend happened to be really long….: ) on the memorial day… we’ve decided to start a little early to find a right place near the beach side…. Started by 5 in the evening, and walked all the way along…. A long walk… after 30 mins … reached my fav ala mona… The setup was humongous….. a big stage as if set on the seas…… a great sound system…. And a sea of humanity…




The function started sharp at 6.30 with a roar of Aloha – (Welcome in Hawaii) from the people…. A classical drum music… followed by songs and dances of Hawaii… So powerful, who needs a language to appreciate music…. Two great things I’ve noticed… a guy played a flute kinda instrument through nostrils…. Amazing…. And chanting dance similar to our kolattam (with small sticks in the hand) by the kiddos….


The Budham Saranam Katchami was infused with a western trend and a great orchestra played Budhist chants… The Lantern Floating was said to be in remembrance of the people who sacrificed their lives, the people who were remembered upon, the ancestors, to express the love and the affection… People wrote their beloved names on the paper lanterns… with few religious ceremonies … a few mins after the sun set… they let hundreds of lanterns to float in the sea…. An enchanting visual indeed…


That remembered me the people who were so special to me.., and people who have made a difference in my life… Remembered the love and affection I’ve been showered with.. Remembered the people I’ve lost/……………. I’ve lost to keep in touch with………….. Lost in the tide of time.....

Cherished Memories… a great memorial day indeed!